அரசாங்கம் தங்க நகைகளை விற்பனை செய்வதற்கும், தங்க நகைகளை வாங்குவதற்கும் புதிய விதிகளை விதித்துள்ளது.  அதிலும் குறிப்பாக அடையாளம் இல்லாத தங்க நகைகளை வாங்குவதற்கும், விற்பதற்கும் அரசு தடை விதித்துள்ளது.  பழைய நகைகளை விற்கவோ அல்லது உடைக்கவோ, புதிய நகைகளை உருவாக்கவோ அல்லது மாற்றவோ ஹால்மார்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  வீட்டில் இருக்கும் பழைய நகைகளை நீங்கள் விற்கவோ அல்லது உடைத்து புதிய நகைகள் செய்யவோ நினைப்பவர்களுக்கு இந்த செய்தி முக்கியமானதாக இருக்கும்.  அரசாங்கம் நகை விற்பனைக்கு புதிய விதிமுறைகளை வகுத்துள்ளதால், ஹால்மார்க் கிடைக்கும் வரை வீட்டில் வைத்திருக்கும் பழைய நகைகளை உங்களால் விற்க முடியாது.  தங்க நகைகளை வாங்குவது மற்றும் விற்பதற்கான தங்க ஹால்மார்க்கிங்க் குறித்து அரசு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.  இந்த புதிய விதிகளின்படி, தற்போது வீடுகளில் வைத்திருக்கும் பழைய தங்க நகைகளுக்கும் ஹால்மார்க் போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  ஏப்ரல் 1, 2023 முதல், அனைத்து தங்க நகைகள் மற்றும் கலைப்பொருட்கள் ஹால்மார்க் தனித்துவ அடையாள (HUID) எண்ணைக் கொண்டிருக்க வேண்டும் என்று புதிய விதிகள் தெரிவிக்கிறது.  இருப்பினும், புதிய நகைகள் அல்லது தங்கப் பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே ஹால்மார்க்கிங் பொருந்தும் என்று மக்கள் நம்பி வந்த நிலையில் தற்போது இந்த ஹால்மார்க்கிங் நகைகளை விற்பதற்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | வங்கி கணக்கை ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்கு மாற்றுவது எப்படி?


இதுகுறித்து வெளியாகியுள்ள அறிக்கையின்படி, அரசாங்கம் இப்போது பழைய நகைகளை விற்பதற்கும் ஹால்மார்க்கை கட்டாயமாக்கியுள்ளது.  BIS இன் படி, ஹால்மார்க் இல்லாத தங்க நகைகளை வைத்திருக்கும் நபர் அதை விற்பதற்கு முன் அல்லது புதிய வடிவமைப்பிற்கு மாற்றுவதற்கு முன் கட்டாயமாக ஹால்மார்க் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  வாடிக்கையாளர்கள் தாங்கள் பயன்படுத்திய நகைகளை ஹால்மார்க் செய்ய அவர்களுக்கு இரண்டு வகையான ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளது.  ஹால்மார்க் செய்யப்பட்ட பழைய, ஹால்மார்க் இல்லாத நகைகளை, BIS பதிவு செய்யப்பட்ட நகைக்கடைக்காரர்களிடம் இருந்து பெறலாம்.  BIS பதிவுசெய்யப்பட்ட நகைக்கடைக்காரர், முத்திரையிடப்படாத தங்க ஆபரணங்களை ஹால்மார்க் பெறுவதற்காக BIS மதிப்பீடு மற்றும் ஹால்மார்க்கிங் மையத்திற்கு எடுத்துச் செல்வார்.  அடுத்ததாக BIS அங்கீகரிக்கப்பட்ட ஹால்மார்க்கிங் மையங்களில் நகைகளை பரிசோதித்து ஹால்மார்க் செய்துகொள்வது வாடிக்கையாளர்களுக்கான மற்றொரு விருப்பமாகும்.


ஆபரணங்களின் எண்ணிக்கை ஐந்து அல்லது அதற்கு மேல் இருந்தால் ஹால்மார்க்கிங் செய்ய, நுகர்வோர் ஒவ்வொரு நகைக்கும் ரூ.45 செலுத்த வேண்டும்.  அதுவே 4 துண்டு தங்க நகைகளுக்கு ஹால்மார்க் பெறுவதற்கு மக்கள் ரூ.200 செலுத்த வேண்டும்.  BIS அங்கீகரிக்கப்பட்ட ஹால்மார்க்கிங் மையம் நகைகளை சரிபார்த்து அதற்கான சான்றிதழை வழங்கும்.  நுகர்வோர் இந்த அறிக்கையை எந்த தங்க நகைக்கடை விற்பனையாளரிடமும் எடுத்துச் சென்று தனது பழைய முத்திரையிடப்படாத தங்க நகைகளை விற்பனை செய்து கொள்ளலாம்.  ஒரு வாடிக்கையாளர் பழைய ஹால்மார்க் அடையாளங்களுடன் கூடிய ஹால்மார்க் செய்யப்பட்ட தங்க நகைகளை வைத்திருந்தால் அந்த நகைகளும் ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளாக தான் கருதப்படும். அதனால் ஏற்கனவே பழைய ஹால்மார்க் அடையாளங்களுடன் ஹால்மார்க் செய்யப்பட்ட தங்க ஆபரணங்கள் HUID எண்ணுடன் மீண்டும் ஹால்மார்க் செய்யப்பட வேண்டியதில்லை.  இதுபோன்று ஹால்மார்க் செய்யப்பட்ட தங்க நகைகளை நீங்கள் எளிதாக விற்கவோ அல்லது புதிய டிசைன்களுக்கு மாற்றிக் கொள்ளவோ முடியும்.


மேலும் படிக்க | PPF: தினமும் ரூ. 300 முதலீடு செய்தால்... ஓய்வு பெறும்போது ரூ. 2. 36 கோடி கிடைக்கும் - எப்படி தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ