இன்றைய காலகட்டத்தில் பான் கார்டு ஒரு கட்டாய ஆவணமாகும். இந்த அட்டை இல்லாமல் எவ்வித முக்கியமான வேலையும் நம்மால் செய்ய முடியாது. அதேபோல் ஒவ்வொரு நிதி பரிவர்த்தனையையும் செய்வதற்கும் வங்கியில் கணக்கு தொடங்குவதற்கும் இந்த ஆவணம் அவசியமாகும். அதுமட்டும் இல்லாமல் பான் கார்டை ஆதாருடன் இணைப்பது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் யாராவது இரண்டு பான் கார்டுகளைப் பெற்றால் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்ற உத்தரவு அமலில் உள்ளது. எனவே உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு இருந்தால் வருமான வரிச் சட்டம் 1961ன் இன் பிரிவு 272B கீழ் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படலாம். அதன்படி இந்த அபராதத்தில் இருந்து விடுப்பட உங்களிடம் இருக்கும் இரண்டு பான் கார்டுகளில் ஒன்றை உடனடியாக செயலிழக்க செய்து விடுவது சட்ட நடவடிக்கையில் சிக்காமல் தப்பிப்பதற்காக முக்கிய வழியாகும்.


மேலும் படிக்க | EPFO News: அதிகரிக்கிறதா இபிஎஃப்ஓ சந்தாதாரர்களின் ஓய்வூதியம்? சமீபத்திய அப்டேட் இதோ


ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு இருந்தால் எப்படி ஒப்படைப்பது


* பான் கார்டை ஒப்படைக்கும் செயல்முறை மிகவும் எளிதானது. இதற்கு முதலில் வருமான வரித்துறை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்காக இணையதளத்தில் உள்ள 'Request For New PAN Card Or/ And Changes Or Correction in PAN Data' என்ற லிங்கை கிளிக் செய்து படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


* இதற்குப் பிறகு, படிவத்தைப் பூர்த்தி செய்து NSDL அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும். இரண்டாவது பான் கார்டைச் சமர்ப்பிக்கும் போது, ​​அதைப் படிவத்துடன் சமர்ப்பிக்கவும். மறுபுறம் இந்த செயல் முறையை நீங்கள் ஆன்லைனிலும் செய்யலாம்.


* அதேபோல் டிமேட் மற்றும் வருமான வரிக்கு தனித்தனி பான் வைத்திருந்தால், ஒரு பான் கார்டை நீங்கள் வருமான வரித்துறையிடம் சமர்ப்பிக்கவேண்டும். இரண்டாவது பான் கார்டை சமர்ப்பித்த பின்னர் உங்கள் அசல் பான் தகவலை வருமான வரித்துறைக்கு அனுப்புங்கள்.


ஏற்கனவே வாங்கிய அட்டையில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமெனில் இரண்டு பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படங்கள், பிறந்த தேதி மற்றும் முகவரி கொண்ட ஐடி, பழைய பான் கார்டின் நகல், மற்றும் கட்டணம் ஆகியவற்றை கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். புதிய திருத்தும் செய்யப்பட்ட அட்டையைப் பெற சுமார் 10–15 நாட்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | ஏழரை நாட்டு சனியின் தாக்கம் பாடாய் படுத்துகிறதா? இந்த பரிகாரங்கள் கை கொடுக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ