கொரோனா முழு அடைப்பால் சிக்கி தவிக்கும் வாழை விவசாயிகளுக்கு உதவும் விதமாக தனது தொழிற்சாலை எவ்வாறு செயல்படுகிறது என ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முழு தேசமும் அடைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சிறு தொழில்கள் மிகுந்த அளவில் தவித்து வருகின்றன. இந்த நேரத்தில், நாம் அனைவரும் ஒன்று கூடி ஒருவருக்கொருவர் உதவ வேண்டும் என மஜிந்திரா குழுமத்தில் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பான ஒர் ட்விட்டில் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா., "போராடும் வாழை விவசாயிகளுக்கு தனது தொழிற்சாலை எவ்வாறு உதவுகிறது என்பதை வெளிப்படுத்தியது." என குறிப்பிட்டு தனது தொழிற்சாலையில் வாழை இலையில் உணவு உண்ணும் தொழிலாளர்களின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.



மேலும், ஒரு ஓய்வு பெற்ற பத்திரிகையாளர், பத்மா ராம்நாத் தனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியதாகவும்,  எங்கள் கேன்டீன்கள் வாழை இலைகளை தட்டுகளாகப் பயன்படுத்தினால், அது தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்வதில் சிக்கல் கொண்டிருக்கும் வாழை விவசாயிகளுக்கு போராட உதவும் என்று பரிந்துரைத்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரது யோசையின் படி செயலில் உள்ள தொழிற்சாலை அணிகள் இவ்வாறு செயல்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்த ட்விட்டர் பதிவில் உள்ள புகைப்படங்கள் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு வாழை இலைகளில் உணவு வழங்கப்படுவதை காட்டுகின்றன. நீங்கள் கவனமாகப் பார்த்தால், சாப்பிடும் ஒவ்வொரு நபருக்கும் அவர்களுக்கு சொந்த நீர் ஜாடி இருப்பதை நீங்கள் காண்பீர்கள், இது எந்தவிதமான உடல் தொடர்புகளையும் தவிர்ப்பதற்கான ஒரு வழியாகும்.


அவர் படங்களை பகிர்ந்தபோது, ​​அவை உடனடியாக ட்விட்டரில் வைரலாகி, 25k-க்கும் மேற்பட்ட லைக்குகளையும், 4.2k-க்கும் மேற்பட்ட ரீட்வீட்களையும் பெற்றன. மேலும், இது என்ன ஒரு சிறந்த முயற்சியாகத் தொடங்கப்பட்டது என்பது குறித்த கருத்துகளும் பெருமளவில் பகிரப்பட்டுள்ளது.