புதுடெல்லி: அடல் ஓய்வூதிய யோஜனா (Atal Pension Yojana) என்பது மத்திய அரசாங்கத்தால் நடத்தப்படும் வெற்றிகரமான ஓய்வூதிய திட்டமாகும். இந்த திட்டத்தை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அல்லது தேசிய ஓய்வூதிய திட்டதின் (National Pension Scheme) கீழ் பி.எஃப்.ஆர்.டி.ஏ நிர்வகிக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமைப்புசாரா துறையில் உள்ள ஊழியர்களுக்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஓய்வு திட்டத்தில் (Pension Scheme), ஓய்வூ காலத்தில் ஒரு நிலையான ஓய்வூதியத்தை பெற இந்திய அரசு உறுதி செய்கிறது.


மாதத்திற்கு ரூ .5000 ஓய்வூதியம் பெற விரும்பினால் இந்த திட்டத்தை நீங்கள் தேர்வு செய்யலாம். 18 முதல் 40 வயதுடையவர்கள் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தின் கீழ், முதலீடு குறைந்தது 20 ஆண்டுகளுக்கு தொடர வேண்டும். திட்டத்தில் முதலீடு செய்ய, நீங்கள் ஆதார் உடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும். எஸ்பிஐ, ஐசிஐசிஐ மற்றும் தனியார் துறை வங்கிகள் மூலம் அடல் ஓய்வூதிய திட்டதை (ஏபிஒய் - APY) திறக்கலாம். 


ALSO READ |  இல்லத்தரசிகளுக்கு அற்புதமான ஓய்வூதிய திட்டத்தை அறிமுகம் செய்த மோடி அரசு!


அமைப்புசாரா துறை தொழிலாளர்களுக்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த துறையில் உள்ளவர்கள் 60 ஆண்டுகளுக்குப் பிறகு நிதி சிரமங்கள் இல்லாமல் தங்கள் வாழ்க்கையை சமாளிக்க உதவும் நோக்கில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. அடல் ஓய்வூதிய யோஜனா திட்டத்தில் (Atal Pension Yojana) மாத ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ .1000 மற்றும் அதிகபட்சம் ரூ .5,000 வரை கிடைக்கும். அதாவது இந்த திட்டத்தில் 5 வகைகள் உள்ளன. நீங்கள் மாதம் பெற விரும்பும் ஓய்வூதியத் தொகை அடிப்படையில் ரூ .1,000, ரூ .2,000, ரூ .3,000, ரூ .4,000, மற்றும் ரூ .5,000 என பிரிக்கப்பட்டு உள்ளன.


முதலீட்டாளரின் வயதைப் பொறுத்து முதலீட்டின் அளவும் மாறுபடும். இந்த திட்டத்தில் மிக விரைவில் முதலீடு செய்யத் தொடங்குவது நல்லது. ஏனெனில் நீங்கள் எவ்வளவு விரைவாக முதலீடு செய்கிறீர்களோ, அதிக பயன் அடைவீர்கள். நீங்கள் 18 ஆண்டுகள் முதலீடு செய்து, மாதத்திற்கு ரூ .5000 ஓய்வூதியம் பெற விரும்பினால் 210 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். அதாவது ஒரு நாளைக்கு 7 ரூபாய் மட்டுமே. நீங்கள் 30 வயதில் முதலீடு செய்யத் தொடங்கினால், நீங்கள் மாதத்திற்கு ரூ .577 செலுத்த வேண்டும். நீங்கள் 39 வயதாக இருந்தால், ஒவ்வொரு மாதமும் ரூ .1318 செலுத்த வேண்டும்.


இந்த திட்டத்தில் தனிநபர்கள் 60 வயதை அடைந்தவுடன் ஓய்வூதியத்தைப் பெறத் தொடங்குவார்கள். அடல் ஓய்வூதிய யோஜனா திட்டத்தில் முதிர்ச்சி காலத்திற்கு முன்பே பணத்தை திரும்பப் பெற முடியாது. ஆனால் வைப்புத்தொகையாளர் இறந்துவிட்டால் அல்லது அவருக்கு குணப்படுத்த முடியாத நோய் வந்தால் மட்டுமே முன்கூட்டியே திரும்பப் பெற அனுமதிக்கப்படுகிறது.


ALSO READ |  ஓய்வூதிய சந்தாதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி! முழு விவரம் தெரிந்து கொள்ளுங்கள்!


அடல் ஓய்வூதிய திட்டத்தில் (APY) முதலீடு செய்தவர் இறந்தால், அந்த நபரின் குடும்பம் பயனடைகிறது. வைப்புத்தொகையாளரின் மரணத்திற்குப் பிறகு, அவரது மனைவி மற்றும் மனைவி இறந்த பிறகு அவரது குழந்தைகள் ஓய்வூதியத்தைப் பெறுவார்கள். கொரோனா அச்சம் மற்றும் லாக் டவுன் காரணம்க APY திட்டத்தில் அதிக முதலீடு செய்யப்படுகிறது என்று PFRDA தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR