நீங்கள் ஓய்வூதியம் பெறுபவரா? இது உங்களுக்கான முக்கியச் செய்தி

ஓய்வூதியங்களை கண்காணித்து முறைப்படுத்தும் PFRDA (Pension Regulator) அறிமுகப்படுத்திய பல்வேறு டிஜிட்டல் உருமாற்ற முயற்சிகளின் ஒரு பகுதியாக, சந்தாதாரர்கள் ஆஃப்லைனில் ஆதார் எண்ணை பயன்படுத்தி தேசிய ஓய்வூதிய கணக்குகளைத் (NPS accounts) திறக்க முடியும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 24, 2020, 01:32 AM IST
  • நீங்கள் ஓய்வூதியம் பெறுபவரா?
  • என்.பி.எஸ் மற்றும் அடல் பென்ஷன் திட்டத்தின் மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 3.76 கோடி
  • அடல் பென்சன் திட்டத்தின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?
நீங்கள் ஓய்வூதியம் பெறுபவரா? இது உங்களுக்கான முக்கியச் செய்தி title=

புதுடெல்லி: ஓய்வூதியங்களை கண்காணித்து முறைப்படுத்தும் PFRDA (Pension Regulator) அறிமுகப்படுத்திய பல்வேறு டிஜிட்டல் உருமாற்ற முயற்சிகளின் ஒரு பகுதியாக, சந்தாதாரர்கள் ஆஃப்லைனில் ஆதார் எண்ணை பயன்படுத்தி தேசிய ஓய்வூதிய கணக்குகளைத் (NPS accounts) திறக்க முடியும்.

2020 அக்டோபர் 10ஆம் தேதி நிலவரப்படி, என்.பி.எஸ் மற்றும் அடல் பென்ஷன்  திட்டத்தின் (Atal Pension Yojana) கீழ் மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 3.76 கோடியாக அதிகரித்துள்ளது. அதோடு, Asset under Management (AUM) தொகையானது 5,05,424 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இப்போது, டிஜிட்டல் முன்முயற்சிகளை மேற்கொள்ளும் விதமாக ஆஃப்லைன் ஆதார் அங்கீகாரத்தை அனுமதிப்பதன் மூலம் செயல்முறையை மேலும் சுறுசுறுப்பாகவும், தடையற்றதாகவும் மாற்ற PFRDA முடிவு செய்துள்ளது.

இதன் மூலம்.10,00,000 ரூபாய் வரை கார்பஸுடன் ஈ.என்.பி.எஸ் சந்தாதாரர்கள் தங்கள் என்.பி.எஸ் கணக்குகளில், வெளியேறும் நோக்கத்திற்காக, ஆஃப்லைன் ஆதார் விவரங்களை வழங்கலாம். 

Also Read | ஓய்வூதிய திட்டத்தில் 'உத்தரவாத வருமானம்' என்ற புதிய திட்டம் அறிமுகம்..!

கூடுதலாக, ஈ-என்.பி.எஸ் சந்தாதாரர்களுக்கு ரூ .10,00,000க்கும் அதிகமான கார்பஸ் (corpus) மற்றும்  பாயிண்ட் ஆஃப் பிரசென்ஸ் (POPs (Point of Presence)) உடன் தொடர்புடைய சந்தாதாரர்களுக்காக பிரத்யேகமாக, ஆன்லைன் தளம் ஒன்று சமீபத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

அதில், அனைத்து சந்தாதாரகளின் வெளியேறும் கோரிக்கைகள் / கார்ப்பரேட் துறை சந்தாதாரர்கள், POP களால் சரிபார்க்கப்படுவார்கள், அதே நேரத்தில் எந்த POP உடன் தொடர்புபடுத்தப்படாத e-NPS சந்தாதாரர்களின் தரவுகள் அந்தந்த வங்கிகளால் சரிபார்க்கப்படும், அவை PFRDA உடன் POP களாக பதிவு செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில், 2020 நவம்பர் மாதத்திற்கான அடல் பென்ஷன் யோஜனா (APY) உள்ளிட்ட தேசிய ஓய்வூதிய முறைமை (என்.பி.எஸ்) தரவை PFRDA வெளியிட்டது.

தேசிய ஓய்வூதிய முறைமையின் (என்.பி.எஸ்) கீழ் பல்வேறு திட்டங்களில் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2020 நவம்பர் இறுதிக்குள் 388.62 லட்சமாக உயர்ந்தது, இது 2019 நவம்பரில் 320.24 லட்சமாக இருந்தது, இது இது ஆண்டுதோறும் 21.35% அதிகரிப்பைக் காட்டுகிறது. 2020 நவம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி, நிர்வாகத்தின் கீழ் மொத்த ஓய்வூதிய சொத்துக்கள் 5,32,378 கோடி ரூபாயாக அதிகரித்து, 35.76% வளர்ச்சியைக் காட்டுகிறது.

Also Read | NPS Account holders: இவற்றை கண்டிப்பாக உங்கள் அகௌண்டில் அப்டேட் செய்யவும்

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் நாடாளுமன்றத்தின் ஒரு சட்டத்தால் நிறுவப்பட்ட சட்டரீதியான அதிகார அமைப்பு ஆகும், இது தேசிய ஓய்வூதிய முறைமை (என்.பி.எஸ்) மற்றும் ஓய்வூதிய திட்டங்களின் ஒழுங்கான வளர்ச்சியை ஒழுங்குபடுத்துதல், ஊக்குவித்தல் மற்றும் உறுதிப்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்கிறது.

தொடக்கத்தில் 2004 ஜனவரி முதல் தேதியில் இருந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS) அறிவிக்கப்பட்டது, பின்னர் கிட்டத்தட்ட அனைத்து மாநில அரசுகளும் அதன் சந்தாதாரர்களுக்காக இந்தத் ஓய்வூதியத் திட்டத்தை ஏற்றுக் கொண்டன.

என்.பி.எஸ் அதாவது National Pension System (NPS) திட்டமானது, இந்த திட்டத்தை ஏற்றுக் கொள்ள விரும்பும் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் (குடியுரிமை உள்ளவர்கள் / குடியுரிமை இல்லாதவர்கள் / வெளிநாட்டில் வசிப்பவர்கள்) தானாக முன்வந்து ஏற்றுக் கொள்ளலாம் என நீட்டிக்கப்பட்டது. 

Also Read | EPF-ல் இருந்து NPS Tier-1 கணக்கிற்கு பணத்தை மாற்றுவது எப்படி?

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News