Bank Employees: நீங்கள் ஒரு வங்கி ஊழியரா? உங்கள் குடும்பத்தில் வங்கி ஊழியர்கள் யாரேனும் உள்ளார்களா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. வங்கி ஊழியர்களுக்கு ஒரு மிகப்பெரிய பரிசை அளிக்க மத்திய அரசு தயாராகி வருகிறது. நீண்ட நாட்களாக வாரத்தில் ஐந்து வேலை நாட்களுக்கான கோரிக்கை வங்கி ஊழியர்களின் சார்பில் அரசாங்கத்தின் முன் வைக்கப்பட்டு வருகின்றது. இந்த கோரிக்கையை அரசு இப்பொழுது ஏற்கலாம் என்று கூறப்படுகிறது. அரசாங்கம் இந்த கோரிக்கையை ஏற்றால் வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை கிடைக்கும். இது தவிர வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வு பற்றியும் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றது. நிதியமைச்சகம் (Finance Ministry) இதற்கான ஒப்புதலை அளித்த பிறகு ஐந்து வேலை நாட்கள் மற்றும் ஊதிய உயர்வு ஆகிய இரண்டு பரிசுகளை வங்கி ஊழியர்கள் பெறக்கூடும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதைப் பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வங்கிகளில் தற்போது உள்ள அமைப்பு என்ன?


இன்றைய நிலவரப்படி வங்கி கிளைகள் நான்காவது சனிக்கிழமைகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மூடப்பட்டிருக்கின்றன. எனினும் ஒரு வாரத்தில் இரண்டு நாட்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று வங்கி ஊழியர் சங்கங்கள் (Bank Employees Union) சார்பாக நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து அரசு எந்த முடிவையும் எடுக்காமல் இருந்தது. தற்போது இது குறித்து ஒரு பெரிய முடிவை அரசாங்கம் எடுக்கலாம் என்றும் இது வங்கி ஊழியர்களுக்கு சாதகமாக இருக்கும் என்றும் நம்பப்படுகின்றது.


மேலும் படிக்க | Spl Sessions: இன்று பங்குச்சந்தையில் முக்கியமான நாள்! NSE மற்றும் BSE சிறப்பு நேரடி வர்த்தக அமர்வுகள்!


நிதி அமைச்சருக்கு கடிதம்


வங்கி ஊழியர் சங்கங்களின் அமைப்பான யுனைடட் ஃபாரம் ஆஃப் பேங்க யூனியன்ஸ் (United Forum of Bank Unions), வங்கித் துறைக்கு வாரத்தில் ஐந்து வேலை நாட்களுக்கான ஒப்புதலை அளிக்குமாறு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு (Nirmala Sitharaman) ஒரு கடிதத்தை எழுதியது. இதனால், வங்கி வாடிக்கையாளர்களுக்கான வங்கி நேரமும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் வேலை நேரமும் குறையாது என்றும் வங்கி ஊழியர்களின் சங்கம் உறுதியளித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து முழுமையாக ஆய்வு செய்து இந்தியன் வங்கிகள் சங்கத்திற்கு (Indian Banks Association) அறிவுறுத்தல்களை வழங்குமாறும் யுனைடட் ஃபாரம் ஆஃப் பேங்க யூனியன்ஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


ஊதிய உயர்வும் எதிர்பார்க்கப்படுகின்றது (Salary Hike)


மற்றொரு நல்ல செய்தியாக, வங்கி ஊழியர்களின் (Bank Employees) சம்பளமும் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. IBA மற்றும் வங்கி ஊழியர் சங்கங்கள் இந்தியாவில் உள்ள அனைத்து பொதுத்துறை வங்கிகளிலும் 12,449 கோடி ரூபாய் அளவிலான 17 சதவீத ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தின. தற்போது மத்திய அரசாங்கம் (Central Government) ஊதிய உயர்விற்கு ஒப்புதல் அளித்தால் அதன் மூலம் சுமார் ஒன்பது லட்சம் வங்கி ஊழியர்கள் பயனடைவார்கள். வங்கி வாடிக்கையாளர்களுக்கான வங்கி நேரத்திலும், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் வேலை நேரத்திலும் எந்த பாதிப்பும் ஏற்படாது என வங்கி ஊழியர்களின் சங்கம் உறுதியளித்துள்ளதால் இந்த கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்கக்கூடும் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.  


மேலும் படிக்க | Post Office ஜாக்பாட் திட்டம்: ஒரு முறை முதலீடு, லட்சக்கணக்கில் லாபம், மாதா மாதம் சூப்பர் வருமானம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ