இந்தியாவில் ஒருவர் எத்தனை வங்கிக் கணக்குகளைத் திறக்கலாம்? RBI விதி என்ன?

RBI on Bank Account: பலரிடம் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் உள்ளன. பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்த வங்கிக் கணக்குகள் திறக்கப்படுகின்றன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 23, 2024, 05:44 PM IST
  • பல வித நோக்களுக்காக திறக்கப்படும் கணக்குகள்.
  • எவ்வளவு வங்கிக்கணக்கை ஒருவர் வைத்திருக்க முடியும்?
  • இந்திய ரிசர்வ் வங்கி விதி என்ன?
இந்தியாவில் ஒருவர் எத்தனை வங்கிக் கணக்குகளைத் திறக்கலாம்? RBI விதி என்ன? title=

RBI Update: இன்றைய காலகட்டத்தில் கிட்டத்தட்ட அனைவரிடமும் வங்கிக் கணக்கு உள்ளது. பல வித தேவைகளுக்காக வங்கிகளில் நாம் கணக்குகளை துவங்குகிறோம். நமது பணத்தை சேமித்து வைப்பதுடன், அவற்றை முதலீடு செய்து பெருக்கவும் இந்த கணக்குகள் உதவுகின்றன. மேலும் மத்திய, மாநில அரசுகளின் பல திட்டங்களின் பலன்களைப் பெற, வங்கிக் கணக்கு இருப்பது அவசியம். டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் இன்றைய சூழலில் வங்கிக் கணக்குகள் அத்தியாவசியமான ஒன்றாக பார்க்கப்படுகின்றன்

பல வித நோக்களுக்காக திறக்கப்படும் கணக்குகள்

சேமிப்பு கணக்கு (Savings Account), நடப்பு கணக்கு, சம்பள கணக்கு என பல வித வங்கிக்கணக்குகள் உள்ளன. வங்கிகளில் நாம் பணத்தை சேமித்து வைக்க இதில் பல வித திட்டங்களும் உள்ளன. வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைகள், வயது, நோக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் வங்கிகளில் பணத்தை சேமிக்கின்றனர்.

எவ்வளவு வங்கிக்கணக்கை ஒருவர் வைத்திருக்க முடியும்?

பலரிடம் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் உள்ளன. பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்த வங்கிக் கணக்குகள் திறக்கப்படுகின்றன. சிலர் பல வங்கிக் கணக்குகளை திறந்து விடுகிறார்கள், ஆனால் அவர்களால் அனைத்து கணக்குகளையும் பராமரிக்க முடிவதில்லை. இந்தியாவில் ஒருவர் தனது பெயரில் எத்தனை வங்கிக் கணக்குகளைத் திறக்க முடியும்? இதற்கான விதி என்ன? இதைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

இந்திய ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) வங்கிக் கணக்குகள் தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதில் ஒருவர் தனது பெயரில் எத்தனை வங்கி கணக்குகளை வைத்திருக்கலாம் என்பது பற்றி கூறப்பட்டுள்ளது.

முதன்மை வங்கிக் கணக்கு

தங்கள் தேவைக்கேற்ப யார் வேண்டுமானாலும் எவ்வளவு வங்கிக் கணக்குகளை வேண்டுமானாலும் தொடங்கலாம். நடப்புக் கணக்கு, சம்பளக் கணக்கு, கூட்டுக் கணக்கு, சேமிப்புக் கணக்கு ஆகியவை இதில் அடங்கும். சேமிப்புக் கணக்குகள் முதன்மை கணக்குகளாக கருதப்படுகின்றன. வங்கிகளில் மக்கள் பெரும்பாலும் சேமிப்பு கணக்கை தொடங்குகிறார்கள். இந்த கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு வட்டியும் கிடைக்கும். 

ஒருவர் எத்தனை கணக்குகளை திறக்க முடியும்?

இந்தியாவில் ஒரு நபர் தொடங்கக்கூடிய வங்கிக் கணக்குகளுக்கு (Bank Account) எந்த வரம்பும் இல்லை. ஒரு நபர் தனது விருப்பம் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப எத்தனை வங்கிக் கணக்குகளை வேண்டுமானாலும் திறக்கலாம். ரிசர்வ் வங்கி (Reserve Bank Of India) இதற்கு எந்த வரம்பையும் நிர்ணயிக்கவில்லை. 

எனினும், ஒருவரிடம் எத்தனை வங்கிக் கணக்குகள் உள்ளனவோ, அந்த கணக்குகளை பராமரிக்க வேண்டிய பொறுப்பும் அவருக்கு அதிகமாகிறது. வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் விருப்பத்தின்படி அனைத்து கணக்குகளையும் நிர்வகிக்க வேண்டும். வாடிக்கையாளர் விரும்பினால், பல்வேறு வங்கிகளிலும் சேமிப்பு அல்லது பிற கணக்குகளைத் திறக்கலாம். ஆனால் இதற்கு அந்த நபர் அந்தந்த வங்கிகளுக்கான அனைத்து விதிகளையும் பின்பற்ற வேண்டும்.

மேலும் படிக்க | SIP: மாதம் ₹1,000 முதலீடு போதும்... அதனை ₹2 கோடியாக மாற்றும் மேஜிக் பார்முலா..!

வங்கிக் கணக்குகள்

- பண பரிவர்த்தனைகள் அதிகமாக செய்பவர்கள் நடப்புக் கணக்கின் (Current Account) விருப்பத்தைத் தேர்வு செய்கிறார்கள். 

- பெரும்பாலும் வணிகர்கள் இந்த கணக்கை திறக்கிறார்கள். 

- சம்பளம் வாங்கும் வர்க்கத்தினர் பெரும்பாலும் சம்பள கணக்கை (Salary Account) தோங்குகிறார்கள்.

- இதில் மினிமம் பேலன்ஸ் பராமரிக்க தேவையில்லை. இது ஜீரோ பேலன்ஸ் கணக்கு (Zero Balance Account). 

- கணக்கு வைத்திருப்பவர் தனது மனைவி அல்லது குழந்தை அல்லது பெற்றோர் போன்ற உறவினருடன் சேர்ந்து  கூட்டுக் கணக்கைத் தொடங்கலாம்.

பல வங்கிக் கணக்குகள் இருப்பதால் என்ன பிரச்சனைகள் ஏற்படும்?

- நம்மிடம் உள்ள அனைத்து வங்கிக் கணக்குகளிலும், வங்கிகளால் நிர்ணயிக்கப்பட்ட  குறைந்தபட்ச இருப்புத் தொகையை (Minimum Balance Amount) பராமரிக்க வேண்டும்.

- வங்கிகளால் நிரணயிக்கப்பட்ட்ட குறைந்தபட்ச தொகை வங்கிக் கணக்கில் இல்லை என்றால், அதற்கு அபராதம் விதிக்கப்படலாம். 

- வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு கட்டணங்களையும் விதிக்கின்றன. 

- மொபைலில் எஸ்எம்எஸ் வசதி, ஏடிஎம் கட்டணம் போன்ற கட்டணங்கள் இதில் அடங்கும். 

- வங்கிக் கணக்கு பயன்படுத்தப்படாவிட்டாலும், வாடிக்கையாளர் கணக்கிலிருந்து இந்தக் கட்டணங்கள் கழிக்கப்படும். 

- இது வாடிக்கையாளர்களுக்கு தேவை இல்லாத ஒரு செலவாக இருக்கலாம். 

- ஆகையால், நீங்கள் கண்டிப்பாக பயன்படுத்தும், மிகவும் தேவையான அளவு வங்கிக் கணக்குகளை மட்டும் வைத்திருப்பது நல்லது.

மேலும் படிக்க | சிறுதொழில் தொடங்க மானிய வட்டியில் 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் தரும் திட்டம்! ஆதார் மட்டும் போதும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News