இனி 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும்! வருகிறது புதிய விதிகள்!
இந்தியாவில் வங்கிகளில் 5 நாட்கள் வேலை மற்றும் 2 நாட்கள் விடுமுறைக்கு நிதி அமைச்சகம் விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் வேலை மற்றும் 2 நாட்கள் விடுமுறை அளிக்க நிதி அமைச்சகம் விரைவில் ஒப்புதல் அளிக்கலாம். வெளியான தகவலின் படி, இந்திய வங்கிகள் சங்கம் 5 நாட்கள் வேலை செய்யும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து சனி-ஞாயிறு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கும் வாய்ப்பு வலுப்பெற்றுள்ளது. தற்போது, மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. முன்மொழிவுக்கு ஒப்புதல் கிடைத்த பிறகு, மாதத்தின் முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். மெட்ரோ நகரங்களில் உள்ள கார்ப்பரேட் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் வசதிக்கேற்ப 5 நாட்கள் வேலை நாட்கள், 2 நாட்கள் விடுமுறை என்ற முறை ஊழியர்களுக்கு பொருந்தும். இந்த ஏற்பாட்டின் கீழ், 8 மணி நேரத்திற்கு பதிலாக, ஊழியர்கள் தினமும் சுமார் 9 மணி நேரம் பணியாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | மருத்துவ குணம் நிறைந்த இந்த செடி... ரூ. 15 ஆயிரம் முதலீடு செய்து லட்சாதிபதி ஆகலாம்!
வங்கித் துறையிலும் இதே முறையை அமல்படுத்த வேண்டும் என்ற வங்கி அமைப்புகளின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் வலுப்பெற்றுள்ளன. ஒரு வாரத்தில் 5 வேலை நாட்களை அறிவிப்பது தொடர்பாக, ஜூலை 28 அன்று நடைபெற்ற இந்திய வங்கிகள் சங்கத்தின் (ஐபிஏ) கூட்டத்தில் இந்த முன்மொழிவு ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இப்போது முன்மொழிவு நிதி அமைச்சகத்திற்கு அனுப்பப்படும், அதன் பிறகு அமைச்சகம் இறுதி முடிவு எடுக்கும். கடந்த மே மாதம் நடந்த கூட்டத்தில், 5 நாட்கள் வேலை செய்வதற்கு பதிலாக, மொத்த வேலை நேரத்தை ஒரு நாளைக்கு 40 நிமிடங்கள் அதிகரிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.
தினமும் 40 நிமிடங்கள் கூடுதலாக வேலை செய்ய வேண்டும்
மே 2021ல், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் (எல்ஐசி) பாலிசி நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, வாரத்தில் 5 நாள் வேலைக்கான கோரிக்கை முதலில் வந்தது. இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) வங்கி தொழிற்சங்க கூட்டத்தில், வங்கி ஊழியர்களின் மொத்த வேலை நேரத்தை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பண பரிவர்த்தனையுடன் ஒரு நாளைக்கு 40 நிமிடங்கள் அதிகரிக்கலாம் என்று முன்மொழியப்பட்டது. பணமில்லா பரிவர்த்தனைகள் 40 நிமிடங்கள் அதிகரிக்கும் நேரத்தில் செய்யப்படும். அனைத்து வங்கிகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதேசமயம், ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளில் வங்கிப் பணிகள் நடைபெறுகின்றன. 5 நாட்கள் விடுமுறைக்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் கிடைத்த பிறகு, மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகள் மூடப்படும்.
மேலும் படிக்க | விஜய் மல்லையாவிடம் நிறுவனத்தை வாங்கி வேற லெவலில் வெற்றி கண்ட அபூர்வ சகோதரர்கள்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ