Business News: நீங்கள் ஒரு விவசாயியாக இருந்தால், குறைந்த செலவில் சிறந்த பலன்களைத் தரும் ஒன்றை பயிரிட விரும்பினால், எங்களிடம் ஒரு சிறந்த வணிக யோசனை உள்ளது. அத்தகைய விவசாயத்தைப் பற்றி இன்று இங்கு தெரிந்துகொள்ளலாம். அதில் நீங்கள் அதிக முதலீடு செய்ய வேண்டியதில்லை.
நல்ல விஷயம் என்னவென்றால், நீங்கள் உங்களின் மற்ற வேலையுடன் இந்தத் தொழிலிலும் கவனம் செலுத்தலாம். அதாவது துளசி சாகுபடி குறித்து தான் இங்கு பார்க்கப்போகிறோம். ஆன்மிக மற்றும் ஆயுர்வேத முக்கியத்துவம் வாய்ந்த இந்த செடியை வளர்ப்பதன் மூலம் குறைந்த நேரத்தில் அதிக பணம் சம்பாதிக்கலாம். துளசியை எப்படி சாகுபடி செய்து, அதை எப்படி விற்பனை செய்வது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
துளசி செடிகளுக்கு கிராக்கி
முன்னதாக துளசி செடியில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகளுக்கு அதிக தேவை இருந்தது, ஆனால் கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு, மக்கள் இப்போது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றனர். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க துளசி ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. அதனால் துளசியின் தேவை அதிகரித்து வருகிறது.
துளசி ஜூலை மாதத்தில் பயிரிடப்படுகிறது. சாதாரண செடியை 45x 45 செ.மீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். அதேசமயம், RRLOC 12 மற்றும் RRLOC 14 வகையைச் சேர்ந்த தாவரங்களுக்கு 50x50 செ.மீ தூரம் இருக்க வேண்டும். நடவு செய்த பிறகு, இந்த தாவரங்களுக்கு நீர்ப்பாசனம் தேவை.
நிபுணர்களின் கூற்றுப்படி, அறுவடைக்கு 10 நாட்களுக்கு முன்பு துளசி செடிகளுக்கு நீர்ப்பாசனம் செய்வதை நிறுத்த வேண்டும். செடி வளரும் போது அறுவடை செய்யப்படுகிறது. செடியில் பூக்கள் தோன்றத் தொடங்கும் போது, அதில் இருந்து கிடைக்கும் எண்ணெயின் அளவு குறையத் தொடங்குகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்த தாவரங்கள் சரியான நேரத்தில் அறுவடை செய்யப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
செலவு மற்றும் லாபம்
துளசி சாகுபடிக்கு நீங்கள் அதிக பணம் செலவழிக்க வேண்டியதில்லை அல்லது நிறைய நிலம் தேவைப்படாது. இந்தத் தொழிலின் தொடக்கத்தில் ரூ.15 ஆயிரத்தை முதலீடு செய்தால் போதுமானது.
விற்பனை
துளசி செடிகளை நேரடியாக சந்தைக்கு சென்று விற்பனை செய்யலாம். மறுபுறம், நீங்கள் மருந்து நிறுவனங்களுக்கோ அல்லது ஒப்பந்த விவசாயம் செய்யும் ஏஜென்சிகளுக்கோ செடிகளை விற்றால், நீங்கள் விற்பனை செய்வதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் இந்த நிறுவனங்களுக்கு துளசிக்கு அதிக தேவை உள்ளது.
காத்திருக்க வேண்டியதில்லை
துளசி செடி 3 மாதங்களில் தயாராகிவிடும். இதன் பயிர் சுமார் 3-4 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படும். ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் விவசாயம் செய்கின்றன. ஒப்பந்த விவசாயம் மூலம் தொழில் தொடங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
மேலும் படிக்க | 20% வரி உயர்வு! விலை உயரும் மது பாட்டிகள் விலை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ