இந்த தொகைக்கு மேல் இனி ட்ரான்ஸாக்ஷன் செய்யாதீங்க! வருமானவரித்துறையில் இருந்து நோட்டீஸ் வரலாம்!
ஒரு நிதியாண்டில் வங்கியின் சேமிப்பு கணக்கில் ரூ.10 லட்சத்துக்கும் மேற்பட்ட ட்ரான்ஸாக்ஷன்கள் செய்யப்பட்டு இருந்தால் அதுகுறித்து வருமான வரித்துறையிடம் தெரிவிக்க வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் டிரான்ஸாக்ஷன்கள் செய்தால் வருமான வரித்துறையினரால் நீங்கள் கண்காணிக்கப்படுவீர்கள், அதனால் குறிப்பிட்ட ஆண்டில் நீங்கள் செய்யும் அதிகப்படியான டிரான்ஸாக்ஷன்களில் குறித்து வருமான துறையில் நீங்கள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டியது அவசியம். வருமான வரி தாக்கல் செய்யும்போது நீங்கள் செய்த அதிகபட்ச டிரான்ஸாக்ஷன் குறித்து தெரிவிக்கவில்லையென்றால் வருமான வரி துறை உங்களுக்கு நோட்டிஸ் அனுப்பும். வங்கியின் இருப்பு, நிதி முதலீடுகள், சொத்து சம்மந்தமான டிரான்ஸாக்ஷன்கள், பங்கு சந்தைகள் என அதிகமாக டிரான்ஸாக்ஷன்கள் செய்யப்படும் இடங்களை வருமான வரித்துறை கண்காணித்து வருகிறது. எந்தெந்த வகையான முதலீடுகள் குறித்து நீங்கள் வருமான வரித்துறையிடம் தெரிவிக்க வேண்டும் என்பதை இங்கு காண்போம்.
மேலும் படிக்க | கார் லோன் வாங்க போறீங்களா? இந்த விசயத்தை மறந்துடாதீங்க!
1) உங்களது வங்கியின் சேமிப்பு கணக்கில் ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சத்துக்கும் மேற்பட்ட ட்ரான்ஸாக்ஷன்கள் செய்யப்பட்டு இருந்தால், அதுகுறித்த தகவலை நீங்கள் தெரிவிக்க வேண்டியது அவசியம். கரண்ட் அக்கவுண்டில் பணம் வைத்திருப்பதற்கான வரம்பு ரூ.50 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2) வங்கியின் பிக்ஸட் டெபாசிட் கணக்கில் ரூ.10 லட்சத்திற்கும் மேல் இருப்பு இருக்கும்பட்சத்தில் அதுகுறித்து நீங்கள் வருமான வரித்துறையிடம் தெரிவிக்க வேண்டும். படிவம் 61ஏ ஐ தாக்கல் செய்து உங்களது கணக்கின் டெபாசிட் குறித்த விவரத்தை தெரிவிக்க வேண்டும்.
3) கிரெடிட் கார்டு கட்டணங்கள் ரொக்கமாக ரூ.1 லட்சத்திற்கும் மேல் இருந்தால் அதுகுறித்து வருமான வரித்துறையிடம் தெரிவிக்க வேண்டும். ஒரு ஆண்டில் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான செட்டில்மென்டுகள் இருந்தால் அதனையும் தெரிவிக்க வேண்டும் மற்றும் கிரெடிட் கார்டு டிரான்ஸாக்ஷன்கள் அனைத்தையும் வருமான வரித்துறை கண்காணித்து வருகின்றது.
4) நாடு முழுவதிலும் ரூ.30 லட்சத்துக்கும் அதிகமான மதிப்பில் அசையா சொத்துக்களை விற்பனை செய்தாலோ அல்லது வாங்கினாலோ அதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டியது அவசியம்.
5) மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குகள், பத்திரங்கள் அல்லது கடன் பத்திரங்கள் போன்றவற்றால் ஒரு ஆண்டில் ரூ.10 லட்சத்துக்கு மேல் முதலீடு செய்தால் அதுகுறித்து வருமான வரித்துறையிடம் தெரிவிக்க வேண்டும். படிவம் 26 ஏ எஸ்-ன் பகுதி இ-ன் படி உங்களது அனைத்து விவரங்களும் வருமான வரித்துறையிடம் இருக்கும்.
6) ஒரு ஆண்டில் ரூ.10 லட்சத்திற்கும் மேல் வெளிநாட்டு நாணயங்கள் விற்பனை செய்யும்பொழுது அதுகுறித்த தகவலை வருமான வரித்துறையிடம் தெரிவித்துவிட வேண்டும்.
மேலும் படிக்க | மின் கட்டண எண்ணுடன் ஆதாரை இணைத்தால் மானியமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ