பொதுவாக, மூத்த குடிமக்கள் வங்கிகளிடம் இருந்து நிலையான வைப்புத்தொகைக்கு (டெபாசிட்) கூடுதல் வட்டி விகிதத்தைப் பெறுகிறார்கள். குறிப்பிடத்தக்க வகையில், நிலையான வைப்புத்தொகைகள் தான் முதலீடு செய்வதற்கு ஏற்றதாக மாறியுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குறிப்பாக புதிய முதலீட்டாளர்கள் மத்தியில், வருமான உறுதி மற்றும் மூலதனப் பாதுகாப்பை டெபாசிட்டுகள் வழங்குகின்றன. டெபாசிட்கள் குறுகிய கால நிதி இலக்குகளை அடைவதற்கும், அவசரகால மற்றும் ஓய்வுக்குப் பிந்தைய சேமிப்புக்கும் சிறந்தவையாகும். 


இருப்பினும், அனைத்து வங்கிகளும், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) மற்றும் வீட்டு நிதி நிறுவனங்கள் (HFCs) பெண் முதலீட்டாளர்களுக்கு நிலையான வைப்புத்தொகைக்கு அதிக வட்டி வழங்குவதில்லை. இருப்பினும், மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் முதலீட்டாளர்களுக்கு, நிலையான வைப்புகளுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்கும் சில வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை இங்கு காணலாம்.


மேலும் படிக்க | வரியை மிச்சப்படுத்தும் ஜாக்பாட் திட்டம், 500 ரூபாயில் இருந்து முதலீடு செய்யலாம்


இந்தியன் வங்கி


இந்தியன் வங்கி சமீபத்தில் ‘IND SUPER 400 DAYS’ என்ற புதிய டெர்ம் டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தினர். மார்ச் 6, 2023 முதல் முதலீட்டிற்காக திறக்கப்பட்டது. இந்த டெர்ம் டெபாசிட்டில், பெண் முதலீட்டாளர்களுக்கு, இந்தியன் வங்கி 0.05% அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது. மேலும், மூத்த பெண் குடிமக்கள் 7.65% வரை வட்டியை சம்பாதிக்கலாம். சூப்பர் சீனியர் குடிமக்கள் 7.90% வட்டி விகிதம் வரை சம்பாதிக்கலாம்.


மகிளா சேமிப்பு திட்டம்


டெபாசிட்களை தவிர, பெண்களுக்கான சிறு சேமிப்புத் திட்டம் ஒன்று விரைவில் தொடங்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையில் அறிவித்தார். அதன்படி, மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழின் காலம் இரண்டு ஆண்டுகள் என்றும், 7.5% வட்டி விகிதத்தைக் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 


பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி


பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி பெண்களுக்கான சிறப்பு நிலையான டெபாசிட் திட்டமான‘PSB GRIH LAKSHMI FIXED DEPOSIT SCHEME’-ஐ அறிமுகப்படுத்தியது. பெண்களுக்கு, ஆன்லைன் வழி மூலம் FD முன்பதிவு செய்யும் போது 6.90% வட்டி விகிதத்தை இத்திட்டம் வழங்குகிறது. மூத்த குடிமக்களான பெண் முதலீட்டாளர்களுக்கு வங்கி 7.40% வட்டி விகிதத்தை வழங்குகிறது.


ஸ்ரீராம் ஃபைனான்ஸ்


ஸ்ரீராம் ஃபைனான்ஸ் சமீபத்தில் பெண் முதலீட்டாளர்களுக்கு 0.10% கூடுதல் வட்டி விகிதத்தை அறிவித்தது. மூத்த குடிமக்களான பெண்களுக்கு, வழக்கமான டெபாசிட்டுகளில் 0.50% மற்றும் 0.10% வட்டி விகிதம் வரை சம்பாதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.


SBI, HDFC, ICICI வங்கி


வழக்கமான முதலீட்டாளர்களுக்கு, எஸ்பிஐ டெபாசிட் சலுகைகள் வழங்குகிறது. அதன் சிறப்பு அம்ரித் கலாஷ் வைப்புத்தொகைக்கு 7.10% வட்டி விகிதமாகும். மேலும் இது மார்ச் 31, 2023 வரை செல்லுபடியாகும். அதேபோல், HDFC வங்கியும் ICICI வங்கியும் அதன் நிலையான வைப்புகளுக்கு அதிகபட்சமாக 7.10% வட்டி விகிதத்தை வழங்குகின்றன. 


மேலும் படிக்க | 7th Pay Commission: ஹோலி பண்டிகையில் அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய பரிசு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ