7th Pay Commission:மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்து நீண்ட நாட்களாக செய்திகள் வெளியாகிக்கொண்டே இருக்கிறது. ஹோலி பண்டிகை சமயத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அகவிலைப்படி உயர்வு மற்றும் ஃபிட்மென்ட் ஃபேக்டர் உயர்வு குறித்த பல்வேறு செய்திகள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றது. நாடு முழுவதும் மார்ச் 8, 2023 அன்று ஹோலி பண்டிகையை கொண்டாடிய பிறகு, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை அரசு அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி எண்ணிக்கை தற்போது 38 சதவீதமாக உள்ளது.
மேலும் படிக்க | ஆதார் பான் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கிறதா? ஆன்லைனில் எளிதாக தெரிந்து கொள்ளலாம்
தற்போது வெளியாகியுள்ள அறிக்கைகளின்படி, ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது, 4% அகவிலைப்படி உயர்த்தப்பட்டால் ஊழியர்களுக்கான மொத்த அகவிலைப்படி 42 சதவிகிதமாக இருக்கும். 6வது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஃபிட்மென்ட் பேக்டர் முன்பு 1.86 சதவீதமாக இருந்தது. 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான ஃபிட்மென்ட் காரணி தற்போது 2.57 சதவீதமாக உள்ளது.
தற்போது மத்திய அரசு ஊழியர்கள் தங்களுக்கான ஃபிட்மென்ட் பேக்டரை 3.68 சதவீதமாக உயர்த்துமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஊழியர்களின் கோரிக்கையினை அரசு ஏற்கும் பட்சத்தில் ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000ல் இருந்து ரூ.26,000 ஆக அதிகரிக்கலாம் என சில அறிக்கைகள் கூறுகிறது. அதேசமயம் மத்திய அரசு ஊழியர்களின் 18 மாத அகவிலைப்படி நிலுவை தொகையை வழங்குவது குறித்து இன்னும் செய்திகள் வெளியிடப்படவில்லை.
மேலும் படிக்க | விஆர்எஸ் வாங்குவது நல்லதா? யாருக்கு இது பலனளிக்கும்? யாருக்கு பிரச்சனை?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ