வெறும் ரூ.20 சேமித்து கோடீஸ்வரராகலாம்: நடுத்தர வர்க்கத்தின் கனவு நிஜமாகும்
Investment Tips: மியூசுவல் ஃபண்டுகளில் எஸ்ஐபி மூலம் முதலீடு செய்து, ஒருவர் கோடீஸ்வரராகும் கனவை நிஜமாக்கிக்கொள்ளலாம். முக்கிய விஷயம் என்னவென்றால், இதற்கு ஒரு நாளைக்கு 20 ரூபாய் மட்டும் சேமித்தால் போதும்.
சரியான முதலீட்டின் மூலம் பணக்காரராகும் டிப்ஸ்: மனித வாழ்க்கையில் பணம் ஒரு மிக முக்கிய அம்சமாக விளங்குகிறது. உனவு, உடை, இருப்பிடம் என நமது அன்றாட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள அனைவருக்கும் பணம் தேவை. அனைவருக்கும் பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும். தங்கள் வங்கிக்கணக்கில் கோடிக்கணக்கான பணம் இருக்க வேண்டும் எனற விருப்பம் இருக்கும். எனினும், நடுத்தர வர்க்கத்தினருக்கு அதிக அளவு பணம் ஈட்டுவது அத்தனை சுலபமல்ல.
கோடீஸ்வரராக வேண்டும் என்ற நடுத்தர வர்க்கத்தினரின் கனவை நிஜமாக்க, பல தரப்பு அமைப்புகளால் பல முதலீட்டு திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மியூசுவல் ஃபண்டுகளில் எஸ்ஐபி மூலம் முதலீடு செய்து, ஒருவர் கோடீஸ்வரராகும் கனவை நிஜமாக்கிக்கொள்ளலாம். முக்கிய விஷயம் என்னவென்றால், இதற்கு ஒரு நாளைக்கு 20 ரூபாய் மட்டும் சேமித்தால் போதும்.
எத்தனை நாட்களுக்கு முதலீடு செய்ய வேண்டும்
தினமும் வெறும் 20 ரூபாய் சேமித்தால் கோடீஸ்வரராகலாம்!! ஆம், இது உண்மைதான்!! மியூச்சுவல் ஃபண்டுகளில் தினமும் ரூ.20 முதலீடு செய்து ரூ.10 கோடி டெபாசிட் செய்யலாம். ஆனால், இதைச் செய்ய, எப்படி முதலீடு செய்வது என்பது குறித்து சரியான திட்டமிடல் இருக்க வேண்டும். தினமும் வெறும் 20 ரூபாய் சேமித்து நீங்கள் எப்படி கோடீஸ்வரராக முடியும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
மேலும் படிக்க | Best SIP: மாதம் 5000 ரூபாய் முதலீடு செய்து 20 ஆண்டுகளில் 1 கோடி வருமானம் பெறலாம்
SIP மூலம் மில்லியனர் ஆகலாம்
20 வயதிலிருந்து ஒரு நாளைக்கு 20 ரூபாய் மட்டும் சேமித்தால், ஒரு மாதத்தில் இந்தத் தொகை 600 ரூபாயாகிவிடும். மியூச்சுவல் ஃபண்டுகளில் ஒவ்வொரு மாதமும் ரூ.600 எஸ்ஐபி செய்யுங்கள். இந்த முதலீட்டை 40 ஆண்டுகள் வரை செய்ய வேண்டும்.
மொத்தத்தில் எவ்வளவு வருமானம் கிடைக்கும்
இந்த வகையில் முதலீடு செய்தால், ஒவ்வொரு ஆண்டும் 15 சதவீதம் வருமானம் கிடைக்கும். அதன்படி, 40 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுக்கு மொத்தம் ரூ.1.88 கோடி கிடைக்கும். இந்த 40 ஆண்டுகளில் நீங்கள் முதலீடு செய்யும் தொகையின் அளவு ரூ.2,88,00 மட்டுமே!! ரூ.600 எஸ்ஐபியில் 20 சதவீதம் வருமானம் கிடைத்தால், 40 ஆண்டுகளில் மொத்தம் ரூ.10.21 கோடியை நீங்கள் குவிப்பீர்கள்.
மியூச்சுவல் ஃபண்டுகள் இன்றைய காலகட்டத்தில் பிரபலமான முதலீட்டு விருப்பமாக உள்ளன. இதில் முதலீட்டாளர் தனது வசதிக்கேற்ப முதலீட்டு விருப்பத்தைப் பெறுகிறார். இதில் மொத்தமாகவும் முதலீடு செய்யலாம் அல்லது முறையான முதலீட்டுத் திட்டம் (எஸ்ஐபி) மூலம் மாதந்தோறும் முதலீடு செய்யலாம்.
எஸ்ஐபியில் உள்ள வசதி என்னவென்றால், நீங்கள் மாதம் வெறும் ரூ.100 மட்டுமே முதலீடு செய்யதாலும் போதும். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அதில் உங்கள் முதலீட்டை அதிகரிக்கலாம். மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது சந்தையின் ஏற்ற இறக்கத்தால் பாதிக்கப்படுகிறது.
மேலும் படிக்க | Best SIP: பம்பர் வருமானம் பெற இந்த 3 எஸ்ஐபி-களில் முதலீடு செய்யுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ