PPF vs Mutual Funds: உங்களுக்கு ஏற்ற முதலீட்டு முறை எது? முழு கணக்கீடு இதோ

Investment Planning:பலர் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் திறன் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். இவற்றில் வரும் வருமானமும் அதிகமாக இருக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 21, 2022, 03:18 PM IST
  • பெரும்பாலான மக்களுக்கு சேமிப்புத் திட்டங்களை தேர்ந்தெடுப்பதில் பல குழப்பங்கள் இருக்கும்.
  • சேமிப்பை புத்திசாலித்தனமாக செய்தால், மிக விரைவில் கோடீஸ்வரர் ஆகலாம்.
  • உங்கள் வாழ்க்கை இலக்குகளுக்கு ஏற்ப முதலீட்டை திட்டமிட வேண்டும்.
PPF vs Mutual Funds: உங்களுக்கு ஏற்ற முதலீட்டு முறை எது? முழு கணக்கீடு இதோ title=

முதலீட்டுத் திட்டமிடல்: பெரும்பாலான மக்களுக்கு சேமிப்புத் திட்டங்களை தேர்ந்தெடுப்பதில் பல குழப்பங்கள் இருக்கும். நீங்கள் உங்கள் சேமிப்பை புத்திசாலித்தனமாக செய்தால், மிக விரைவில் கோடீஸ்வரர் ஆகலாம். இப்போது கேள்வி என்னவென்றால், உங்கள் வாழ்க்கை இலக்குகளை நிறைவேற்ற எந்த முதலீடுகளை செய்வது சிறந்ததாக இருக்கும்?

ஆபத்தா? வருமானமா? 
முதலீடு இரண்டு வழிகளில் செய்யப்படுகிறது. ஒன்று அதிலுள்ள ஆபத்துக்துகளை பார்த்து, அதற்கேற்றபடி முதலீடு செய்வது, மற்றொன்று, அதன் மூலம் கிடைக்கும் வருமானம் பார்த்து முதலீடு செய்வது. ஆனால் பலர் முதலீட்டு விஷயத்தில் ரிஸ்க் எடுக்க அச்சப்படுவதுண்டு. இப்படிப்பட்டவர்கள் தங்கள் பணத்தை பிபிஎஃப் போன்ற பாதுகாப்பான திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள். இதில் ரிஸ்க் குறைவாக இருக்கும். 

பலர் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் திறன் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். இவற்றில் வரும் வருமானமும் அதிகமாக இருக்கும். 

பிபிஎஃப் Vs மியூச்சுவல் ஃபண்டுகள்
இந்த பதிவில், பிபிஎஃப் மற்றும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் உள்ள முதலீடுகளை ஒப்பிட்டு உங்கள் இலக்குகளுக்கு ஏற்ப எந்த முதலீடு பயனுள்ளதாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யலாம். ஒரு உதாரணத்திற்கு, ஒவ்வொரு மாதமும் 10,000 ரூபாய் முதலீடு செய்து கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்பது உங்கள் இலக்கு என்று வைத்துக்கொள்வோம்.

மேலும் படிக்க | ஏடிஎம் கார்டுகள் இல்லாமல் பணம் எடுக்கும் வசதி - ஆர்பிஐ அதிரடி உத்தரவு! 

பிபிஎஃப் மூலம் கோடீஸ்வரர் ஆகலாம்
அக்டோபர்-டிசம்பர் 2020க்கான கால அளவுக்கு பிபிஎஃப்-இல் 7.1% வருமானம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு காலாண்டிலும் பிபிஎஃப் ரிடர்ண் விகிதங்களை அரசாங்கம் தீர்மானிக்கிறது. ஒரு கட்டத்தில், பிபிஎஃப்-இல் 12 சதவீத வருமானமும் கிடைத்தது. எனினும், இது 4 சதவீதமாகக் குறைந்த நேரமும் உண்டு. 

பிபிஎஃப் மூலம் கிடைக்கும் சராசரி வருமானம் 7.5%க்கு அருகில் உள்ளது என்று வைத்துக் கொள்வோம். உங்கள் வயது 30 ஆக இருந்து, இன்றிலிருந்து பிபிஎஃப்-இல் ஒவ்வொரு மாதமும் 10,000 ரூபாய் முதலீடு செய்யத் தொடங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். சராசரி வருவாய் விகிதம் 8% ஆக இருக்கும். பிபிஎஃப் முதலீடு மூலம் நீங்கள் கோடீஸ்வரராக மாற 27 ஆண்டுகள் ஆகும்.

பிபிஎஃப் மூலம் கோடீஸ்வரராக 

ஒவ்வொரு மாதமும் முதலீடு - ரூ. 10,000 
மதிப்பிடப்பட்ட வருவாய் விகிதம் - 7.5%
மொத்த முதலீடு - 32.40 லட்சம்
மதிப்பிடப்பட்ட வருவாய் - 72.70 லட்சம்
நிகர மதிப்பு - 1.05 கோடி
கால அளவு - 27 ஆண்டுகள்

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் கோடீஸ்வரர் ஆகலாம்
இப்போது நீங்கள் ஒவ்வொரு மாதமும் அதே அளவு ரூ 10,000 ஐ ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தால், என்ன நடக்கிறது என்று பாருங்கள். ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் நீண்ட காலத்திற்கு சராசரியாக 10-12 சதவீதம் லாபம் தருகின்றன. மியூச்சுவல் ஃபண்டுகள் பிபிஎஃப்-ஐ விட முதலீட்டில் அதிக வருமானத்தை அளிக்கின்றன. 

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒவ்வொரு மாதமும் இந்த தொகையை முதலீடு செய்தால் 20-21 வருடங்களில் கோடீஸ்வரர் ஆகிவிடுவீர்கள். அதாவது, மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு குறைந்தபட்சம் 6-7 ஆண்டுகளுக்கு முன்பு, உங்கள் கைகளில் ஒரு கோடி தொகை இருக்கும்.

மியூச்சுவல் ஃபண்ட் மூலம் கோடீஸ்வரராக 
ஒவ்வொரு மாதமும் முதலீடு - ரூ. 10,000 
மதிப்பிடப்பட்ட வருவாய் விகிதம் - 12%
மொத்த முதலீடு - 25.20 லட்சம்
மதிப்பிடப்பட்ட வருவாய் - 88.66 லட்சம்
நிகர மதிப்பு - 1.13 கோடி
கால அளவு - 21 ஆண்டுகள்

பிபிஎஃப்-இல் முதலீடு செய்யப்பட்ட தொகையும் அதிகமாக உள்ளது என்பதையும் கோடீஸ்வரராவதற்கான கால அளவும் அதிகமாக இருக்கும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். அதே சமயம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடும் குறைவாக உள்ளது, கோடீஸ்வரராக ஆகும் நேரமும் குறைவாக உள்ளது. ஏனெனில் இதில் வருமானம் அதிகமாக உள்ளது. அதாவது, மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது உங்களுக்கு சிறந்ததாக இருக்கும்.

பிபிஎஃப் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் இடையே உள்ள வேறுபாடு

- பிபிஎஃப் மியூச்சுவல் ஃபண்டில் உள்ள ஆபத்து மிகக் குறைவு / ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் ஷார்ட் டர்ம் அதாவது குறுகிய கால முதலீடுகளில் ஆபத்து இருக்கும்.

- பிபிஎஃப்-ல் 15 ஆண்டுகள் லாக் இன் பீரியட் உள்ளது / ELSS போன்ற ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு 3 ஆண்டுகள் மட்டுமே லாக்-இன் காலம் உள்ளது

- நீங்கள் பிபிஎஃப்-இல் முதலீடு செய்தால், சில நிபந்தனைகளுடன் 7 ஆண்டுகளுக்குப் பிறகுதான் சிறிய தொகையை எடுக்க முடியும் / மியூச்சுவல் ஃபண்டில் எப்போது வேண்டுமானாலும் பணத்தை திரும்பப் பெறலாம்

- 15 ஆண்டுகளுக்கு பிபிஎஃப்-இல் முதலீடு செய்வதன் மூலம் 80C இன் கீழ் 1.5 லட்சம் விலக்கு கிடைக்கும் / ELSS இல் 3 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தாலே 80C இன் கீழ் 1.5 லட்சம் விலக்கு கிடைக்கும்

பிபிஎஃப் மற்றும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் உள்ள வரிகள்
பிபிஎஃப் EEE பிரிவின் கீழ் வருகிறது. அதாவது முதலீடு, வருமானம் மற்றும் முதிர்வுத் தொகைக்கு இதில் வரி இல்லை. அதேசமயம் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் ஒரு நிதியாண்டில் லாபம் 1 லட்சத்திற்கு மேல் இருந்தால், 10 சதவிகிதம் நீண்ட கால மூலதன ஆதாய வரி வசூலிக்கப்படும். 

மேலும் படிக்க | PPF முதலீட்டு வரம்பு இரட்டிப்பாகும், வருமானமும் அதிகரிக்கும்: உபயோகமான டிப்ஸ் இதோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News