SIP முதலீட்டில் ஏகப்பட்ட லாபம்: இந்த அம்சங்களில் தெளிவு தேவை

SIP Calculation: மியூச்சுவல் ஃபண்டுகள், எஸ்ஐபி, முதலீடு பற்றிய புரளிகளால் நீங்களும் குழம்பியிருந்தால், இந்த செய்தியை நீங்கள் அவசியம் படிக்க வேண்டும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 14, 2022, 04:34 PM IST
  • எஸ்ஐபி பற்றிய பொதுவான கட்டுக்கதைகள்.
  • எஸ்ஐபி தொகையை மாற்ற முடியுமா?
  • எஸ்ஐபி உத்தரவாதமான வருமானத்தை அளிக்குமா?
SIP முதலீட்டில் ஏகப்பட்ட லாபம்: இந்த அம்சங்களில் தெளிவு தேவை title=

எஸ்ஐபி பற்றிய பொதுவான கட்டுக்கதைகள்: மியூச்சுவல் ஃபண்டுகள், எஸ்ஐபி, முதலீடு பற்றிய புரளிகளால் நீங்களும் குழம்பியிருந்தால், இந்த செய்தியை நீங்கள் அவசியம் படிக்க வேண்டும். இந்த பதிவின் மூலம் நீங்கள் தெளிவு பெறலாம். சிஸ்டமடிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான் (எஸ்ஐபி) எனப்படும் முறையான முதலீட்டுத் திட்டம் பற்றி பொதுவாக பரவும் சில புரளிகள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

புரளி 1: எஸ்ஐபி சிறு முதலீட்டாளர்களுக்கானது
உண்மை: எஸ்ஐபி என்பது சிறு முதலீட்டாளர்களுக்கு மட்டுமே என்று நீங்கள் நினைத்தால், அப்படி நினைப்பது முற்றிலும் தவறு. எஸ்ஐபி-ஐ சிறிய தொகையுடன் தொடங்கலாம், ஆனால் நீங்கள் தொகையை அதிகரிக்கவும் செய்யலாம். நீங்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் ரூ. 1 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையையும் எஸ்ஐபி மூலம் முதலீடு செய்யலாம்.

புரளி 2: இது ஒரு 'முதலீட்டு திட்டம்' மட்டுமே
உண்மை: எஸ்ஐபி என்பது முறையான முதலீட்டுத் திட்டமாகும். அதாவது இது ஒரு முதலீட்டு முறையாகும். இதன் மூலம் நீங்கள் சீரான இடைவெளியில் மியூசுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து நல்ல லாபத்தைப் பெறலாம். நாம் எஸ்ஐபி மூலம் முதலீடு செய்கிறோம், எஸ்ஐபி-இல் முதலீடு செய்யவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

புரளி 3: சந்தை ஏற்றத்தில் எஸ்ஐபி செய்ய வேண்டாம்
உண்மை: சந்தையில் வீழ்ச்சி ஏற்படும் போது எஸ்ஐபி செய்ய வேண்டும் என்றும், ஏற்றத்தில் செய்யக்கூடாது என்றும் மக்கள் மத்தியில் ஒரு கட்டுக்கதை உள்ளது. ஆனால் இது முற்றிலும் தவறானது. நீங்கள் நீண்ட காலத்திற்கு எஸ்ஐபி செய்யும் போது, ​​அது சந்தையின் நிலையற்ற தன்மையால் பாதிக்கப்படாது.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் ஏற்றம், முழு கணக்கீடு இதோ 

புரளி 4: எஸ்ஐபி தொகையை மாற்ற முடியாது
உண்மை: எஸ்ஐபி மூலம் செய்யப்படும் முதலீட்டின் அளவை உங்களால் மாற்ற முடியாது என்று நீங்கள் நினைத்தால், இந்தக் குழப்பத்திலிருந்து வெளியே வந்துவிடுங்கள். எஸ்ஐபி என்பது ஒரு நெகிழ்வான முதலீடாகும். இதில் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் முதலீட்டுத் தொகையை அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம். இதில், முதலீட்டின் கால அளவையும் கூட்டலாம் அல்லது குறைக்கலாம்.

புரளி 5: சந்தை வீழ்ச்சியடையும் போது எஸ்ஐபி-ஐ நிறுத்துங்கள்
உண்மை: பங்குச் சந்தையில் சரிவு ஏற்படும் போது, ​​எஸ்ஐபி நிறுத்தப்பட வேண்டும் என்று சிலருக்கு தோன்றலாம். ஆனால், அப்படி எந்த அவசியமும் இல்லை. வீழ்ச்சியடைந்த சந்தையில் முதலீடு செய்வதை நிறுத்தும்போதுதான் எஸ்ஐபி மூலம் முதலீடு செய்வதன் நோக்கம் தோல்வியடைகிறது. இந்த நேரத்தில் நீங்கள் நல்ல மியூசுவல் ஃபண்டுகளைத் தேர்ந்தெடுத்து வழக்கமான எஸ்ஐபி உடன் தொடரலாம்.

புரளி 6: பல ஆண்டுகளுக்கு ஒரே எஸ்ஐபி-ஐ வைத்திருக்க வேண்டும் 
உண்மை: பல ஆண்டுகளாக ஒரே எஸ்ஐபி தொகையைத் தொடரும்போது, ​​பெரும் லாபம் கிடைக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள். மாறாக அது அவ்வாறு இல்லை. உங்கள் எஸ்ஐபி இன் அளவை அவ்வப்போது அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் உங்கள் சம்பளம் அதிகரிக்கும் போது, ​​எஸ்ஐபி தொகையையும் அதிகரிக்க வேண்டும்.

புரளி 7: எஸ்ஐபி உத்தரவாதமான வருமானத்தை அளிக்கிறது
உண்மை: எஸ்ஐபி மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது உங்களுக்கு உத்தரவாதமான வருவாயை அளிக்கிறது என்று நீங்கள் நினைத்தால், அது முற்றிலும் இல்லை. உண்மையில், மியூசுவல் ஃபண்டுகளும் சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளன. எனவே சந்தையின் ஏற்றத்தாழ்வுகளால் உங்கள் வருமானமும் பாதிக்கப்படுகிறது.

மேலும் படிக்க | LIC IPO: மே 17 அன்று பை, செல், ஹோல்ட்? செய்ய வேண்டியது என்ன, நிபுணர்கள் கருத்து 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News