காற்று மாசுபாடு... நுரையீரலை சுத்தம் செய்ய உதவும் டீடாக்ஸ் பானங்கள்
Detox Drink for Pollution: காற்றில் மாசு அதிகமாக உள்ள இடங்களில் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது மிக அவசியம். இதற்கு உடலில் உள்ள நச்சுகளை நீக்கும் பானங்கள், அதாவது டீடாக்ஸ் பானங்களை பருக வேண்டும்.
Detox Drink for Pollution: குளிர்காலம் தொடங்கும் முன் பொதுவாக நாட்டின் பல இடங்களில் காற்றில் உள்ள மாசின் அளவு மிக அதிகமாகி விடுகின்றது. சில இடங்களில் இது மிக அதிகமாகவும், சில இடங்களில் குறைவாகவும் இருக்கும். டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களின் காற்று ஏற்கனவே விஷமாக மாறத் தொடங்கியுள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாடு மக்களின் நுரையீரலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது தவிர, இது உடல் ஆரோக்கியத்தையும் எதிர்மறையாக பாதிக்கின்றது.
காற்றில் மாசு அதிகமாக உள்ள இடங்களில் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது மிக அவசியம். இதற்கு உடலில் உள்ள நச்சுகளை நீக்கும் பானங்கள், அதாவது டீடாக்ஸ் பானங்களை பருக வேண்டும். டிடாக்ஸ் பானங்களில் பல நன்மைகள் உள்ளன. இவை உங்கள் உடலில் சேரும் அழுக்குகளை நீக்குகின்றன. காற்றில் மாசின் அளவு அதிகமாக உள்ள இடங்களில் வசிப்பவர்கள், இங்கே குறிப்பிடப்பட்டுள்ள டீடாக்ஸ் பானங்களை உட்கொள்ளலாம்.
பீட்ரூட் சாறு
மாசுபாட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க பீட்ரூட் சாறு குடிக்கலாம். பீட்ரூட் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இரத்தத்தை அதிகரிக்கவும், சுத்திகரிக்கவும் இது உதவுகிறது. பீட்ரூட் சாறை அப்படியே குடிப்பது பிடிக்கவில்லை என்றால், இதை ஆப்பிளுடன் கலந்து சாறு செய்து குடிகலாம். நறுக்கிய பீட்ரூட் மற்றும் ஆப்பிள் துண்டுகளைச் சேர்த்து அவற்றின் சாறு எடுத்து குடிக்கலாம். சுவையை அதிகரிக்க இதில் எலுமிச்சை சாறும் பிழியலாம்.
இஞ்சி மற்றும் எலுமிச்சை டிடாக்ஸ் தேநீர்
காற்றில் உள்ள விஷ நச்சுகளைத் தவிர்க்க, இஞ்சி மற்றும் எலுமிச்சை டீயையும் குடிக்கலாம். இது உடலில் உள்ள நச்சுகளை நீக்க உதவுகின்றது. இதை செய்ய, இஞ்சி, வெந்நீர், எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். நறுக்கிய இஞ்சியை ஒரு கிளாஸில் போட்டு அதில் வெந்நீரை கலக்கவும். சிறிது நேரம் அப்படியே விட்டு, பின்னர் அதில் தேன் மற்றும் எலுமிச்சை சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
பச்சை ஸ்மூத்தி
மாசினால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க, பச்சை ஸ்மூத்தியை உட்கொள்ளலாம். இது கீரை மற்றும் வாழைப்பழத்தை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதைச் செய்ய, கீரை மற்றும் 1 வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1 ஸ்பூன் பாதாம் பால் சேர்க்கவும். அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைக்கவும்.
மஞ்சள் பால்
மாசுபாட்டால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகளை சமாளிக்க, மஞ்சள் பால் குடிக்கலாம். இதை தயார் செய்வது மிக எளிதாகும். மஞ்சள் தூள், கருப்பு மிளகு, தேன் மற்றும் தேங்காய்ப்பால் ஆகியவற்றைக் கொண்டு இந்த பாலை தயாரிக்கலாம். மஞ்சளில் ஆண்டி-ஆக்சிடெண்ட் பண்புகளும், குர்குமின் என்ற தனிமமும் உள்ளன. இவை உடலில் உள்ள நச்சுகளை நீக்கி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | அதிகாலை 3-5 மணிக்குள் தூக்கம் கலைகிறதா? முக்கிய காரணங்கள் - உஷார்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ