Sleep Issue | சிலருக்கு அதிகாலை 3-5 மணிக்குள் திடீரென தூக்கம் கலைந்து விழித்துக் கொள்ளும் பழக்கம் இருக்கும். அது ஏன்?
Sleep Issue Reason Tamil | இரவு தூக்கத்தின்போது திடீரென விழித்துக் கொள்ளும் பழக்கம் இருந்தால் அதனை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆரோக்கியத்துடன் நேரடி தொடர்பு இருக்கலாம்.
சிலருக்கு அதிகாலையில் தூக்கம் கலைந்துவிடும். குறிப்பாக 3-5 மணிக்குள் தூக்கம் கலைந்து விழித்துக் கொள்வார்கள். இதற்கு நேரடியான ஆரோக்கிய பிரச்சனைகள் தொடர்பு இருக்கிறது
குறிப்பாக ஹார்மோன் மற்றும் இரத்த சர்க்கரை ஏற்ற இறக்கங்களுடன் தொடர்புடையது என மருத்துவர்கள் கருதுகின்றனர். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்து உடலில் கார்டிசோல் மற்றும் அட்ரினலின் போன்ற மன அழுத்த இரசாயனங்களை வெளியிடுவதற்கு காரணமாகிறது.
இது தூண்டுதல் விளைவுகளைக் கொண்டுள்ளது. இந்த ஹார்மோன்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த கல்லீரல் மற்றும் தசைகளில் உள்ள குளுக்கோஸை வெளியிட உதவுகின்றன, அவை தூக்கத்தையும் சீர்குலைக்கும்.
இப்படியான பிரச்சனைகள் இருப்பவர்கள் படுக்கைக்கு முன்பு சிற்றுண்டி ஏதாவது எடுத்துக் கொள்ளலாம். தேன், தேங்காய் எண்ணெய் கலவையை கூட லைட்டாக சாப்பிட்டு தூங்கலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஏனென்றால் இந்த சிற்றுண்டி ரத்தத்தில் சர்க்கரை அளவை குறையாமல் வைத்துக் கொள்ளும்.
அதிகாலை தூக்கம் கலைவதற்கு பின்னால் உள்ள மற்றொரு காரணம், நாள்பட்ட மன அழுத்தம். இதன் காரணமாக கார்டிசோலின் அளவு அதிகரிக்கலாம். மன அழுத்த ஹார்மோன் என்று அடிக்கடி குறிப்பிடப்படும் கார்டிசோல் நமது உடலின் ஆற்றல் நிலைகள், நோயெதிர்ப்பு மண்டலம் மற்றும் தூக்கம்-விழிப்பு சுழற்சியைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கை கொண்டுள்ளது.
அதிக கார்டிசோல் அளவுகளால், அதிகாலையில் திடீரென விழித்துக் கொள்வீர்கள். மன அழுத்தத்தைத் தணிக்க, ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள், தியானம் மேற்கொள்வது அவசியம். கார்டிசோல் அளவைக் குறைப்பதன் மூலம், அதிகாலையில் சீக்கிரம் எழுவதற்கான வாய்ப்பைக் குறைக்கலாம்.
வயதானதால் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களும் நள்ளிரவில் விழித்தெழும். தூக்கத்தைக் கட்டுப்படுத்தும் மெலடோனின் என்ற ஹார்மோன், வயதாகும்போது நமது உடலால் சிறிய அளவிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது.
மாதவிடாய் சுழற்சியுடன் தொடர்புடைய ஹார்மோன் கூட தூக்க மாற்றங்களுக்கு வழிவகுக்கின்றன. அதனால், தூக்கம் சுழற்சி பாதிக்கப்பட்டால் உடனடியாக உங்கள் வாழ்க்கை முறையில் மாற்றங்களை கொண்டு வந்து ஆரோக்கியமாக இருப்பதை உறுதிசெய்யுங்கள்.