வங்கி எஃப்டிக்களின் வட்டி குறையலாம்! முதலீடு செய்ய சரியான நேரம் இது!
Dinesh Kumar Khara On SBI FD Rates : FDயில் முதலீடு செய்ய சிறந்த நேரம்... இந்த மாதம் முதல் வட்டி விகிதங்கள் குறைக்கப்படலாம் என எஸ்பிஐ தலைவர் கணிப்பு!
வலுவான பொருளாதார வளர்ச்சிக்கு மத்தியில் பணவீக்கத்தில் கவனம் செலுத்தி, ரிசர்வ் வங்கி அதன் முக்கிய கொள்கை விகிதமான ரெப்போ விகிதத்தை தொடர்ந்து எட்டாவது முறையாக அதே அளவில் வைத்துள்ளது. இந்த நிலையில் இனி வரும் மாதங்களில் வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என எஸ்பிஐ தலைவர் தெரிவித்துள்ளார். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த 2022 ஆம் ஆண்டில் ரெப்போ விகிதத்தை அதிகரிக்கும் செயல்முறையை தொடங்கிய ஆர்பிஐ, ஓராண்டுக்கு மேலாகியும் அதை உயர்த்தவில்லை.
ரெப்போ விகிதம்
ஆனால் ரெப்போ விகிதத்தின் அதிகரிப்பின் விளைவு வட்டி விகிதங்கள் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது. இது தொடர்பாக பேசிய ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (State Bank of India (SBI)) தலைவர் தினேஷ் குமார் காரா, டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்கள் மிக உயர்ந்த மட்டத்தில் இருப்பதாகவும், நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் இது குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.
அக்டோபர் மாதத்தில் ரெப்போ விகிதம் குறையலாம்
நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் இருந்து இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India (RBI)) வட்டி விகித சுழற்சியை தளர்த்தலாம் என்றும் நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கி தெரிவித்துள்ளது. கடந்த வாரம், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), பொருளாதார வளர்ச்சி வலுவாக இருக்கும் நிலையில், பணவீக்கத்தில் கவனம் செலுத்தி, அதன் முக்கிய கொள்கை விகிதமான ரெப்போ விகிதத்தை தொடர்ந்து எட்டாவது முறையாக அதே அளவில் வைத்துள்ளது.
மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கான பம்பர் திட்டம்: ஜாக்பாட் வட்டி, அசத்தலான வருமானம்
எதிர்வரும் அக்டோபரில் தொடங்கும் மூன்றாவது காலாண்டில் பணவீக்கம் 4 சதவீதத்தை நோக்கி நகரும் வாய்ப்பு இருக்கும் நிலையில், ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தில் சில மாற்றங்களை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வட்டி விகிதங்களைக் குறைத்த மத்திய வங்கிகள்
சுவிட்சர்லாந்து, சுவீடன் மற்றும் கனடா போன்ற வலுவான பொருளாதாரங்களைக் கொண்ட சில மத்திய வங்கிகள் 2024 ஆம் ஆண்டில் வட்டி விகிதங்களைக் குறைக்கத் தொடங்கியுள்ளன. மறுபுறம், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதக் குறைப்பு எதிர்பார்ப்புகள் முன்னதாகவே அதிகமாக இருந்தன. ஆனால் தற்போது அந்த எதிர்பார்ப்புகள் குறைந்துள்ளன. வங்கி அமைப்பில் வட்டி விகிதங்களைப் பொறுத்த வரையில், அவை ஏற்கனவே உயர்ந்த நிலையில் இருப்பதாக எஸ்பிஐ தலைவர் காரா கூறினார்.
இனிமேல் வட்டி விகிதத்தில் சில சிறிய மாற்றங்களைக் காணலாம்... நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் வட்டி விகிதங்களில் சரிவை சந்திக்கலாம் என்று நினைக்கிறேன். கடந்த மாதம், தேர்ந்தெடுக்கப்பட்ட குறுகிய கால முதிர்வு FDகளுக்கான வட்டி விகிதம் 0.75 சதவீதம் வரை உயர்த்தியது. ரீடெய்ல் எஃப்டியின் கீழ், 46 முதல் 179 நாட்கள் வரையிலான டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 0.75 சதவீதம் அதிகரித்து 5.50 சதவீதமாக உள்ளது. முன்னதாக இது 4.75 சதவீதமாக இருந்தது. என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ