ராஜ்தானி-சதாப்தியில் பயணம் செய்பவர்களுக்கு ஜாக்பாட், புதிய அறிவிப்பு வெளியீடு
Vande Bharat Chair Car: கடந்த நாட்களில் வெளியான தகவலின் படி, ரயில்வே தரப்பில் இருந்து ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று செய்திகள் வெளியாகின. தற்போது அதற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்: நீங்களும் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதன்படி பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, ரயில்வே துறையால் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த நாட்களில் வெளியான தகவலின் படி, ரயில்வே தரப்பில் இருந்து ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று செய்திகள் வெளியாகின. தற்போது அதற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்துள்ளார். அந்த வகையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி - மார்ச் மாதத்திற்குள் வந்தே பாரத் ரயில்கள் வந்தே சேர் கார், வந்தே மெட்ரோ மற்றும் வந்தே ஸ்லீப்பர் ஆகிய 3 வடிவங்களில் இருக்கும் என்று ரயில்வே அமைச்சர் கூறியுள்ளார்.
வந்தே பாரதின் அதிகபட்ச வேகம் மணிக்கு 160 கி.மீ ஆகும்
வரும் காலத்தில் சதாப்தி, ராஜ்தானி மற்றும் உள்ளூர் ரயில்களுக்குப் பதிலாக வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். இந்த உள்நாட்டு 'செமி-ஹாய் ஸ்பீட்' ரயில்கள் சென்னையில் உள்ள இண்டீக்ரல் கோச் ஃபேக்ட்ரியில் தயாரிக்கப்படுகின்றன. அத்துடன் வந்தே பாரத் ரயில்களுக்கு அதிகபட்சமாக மணிக்கு 160 கி.மீ வேகத்தில் ரயில் செல்லும் வகையில் அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் ரயில் பாதைகள் மேம்படுத்தப்படும் என்று ரயில்வே அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் படிக்க | இந்திய ரயில்வே: ரயில் என்ஜின்கள் எவ்வளவு மைலேஜ் கொடுக்கிறது எனத் தெரியுமா..!!
வந்தே பாரத் ரயில்கள் மூன்று வடிவங்களைக் கொண்டிருக்கும்
டேராடூனில் இருந்து டெல்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலுக்கு வந்தே பாரத் தொடங்கப்பட்ட பிறகு, அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், 'வந்தே பாரத் ரயில் மூன்று வடிவங்களைக் கொண்டுள்ளது. 100 கி.மீ.க்கு குறைவான பயணத்திற்கு வந்தே மெட்ரோ, 100-550 கி.மீ.க்கு வந்தே சேர் கார் மற்றும் 550 கி.மீ.க்கு மேல் பயணிக்க வந்தே ஸ்லீப்பர். மேலும் வருகிற 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி-மார்ச்க்குள் மூன்று வடிவங்களும் தயாராகிவிடும்.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் வந்தே பாரத் ரயில் பரிசாக வழங்கப்படும்
இந்த ரயிலின் இயக்கத்தின் மூலம், டேராடூன்-புது டெல்லி சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரம் 6 மணி 10 நிமிடங்களில் இருந்து 4.5 மணி நேரமாக குறைக்கப்படும். அதோடு அடுத்த ஆண்டு ஜூன் நடுப்பகுதியில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வந்தே பாரத் ரயில் பரிசாக வழங்கப்படும் என்று வைஷ்ணவ் கூறினார். இந்த ரயில்கள் அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது என்றார்.
வந்தே பாரத் அதிகபட்சமாக மணிக்கு 160 கிமீ வேகத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பாதையின் திறனுக்கு ஏற்ப அவை மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படும். மேலும் வந்தே பாரத் ரயில்களில் பயணிகளுக்கு 4ஜி-5ஜி wi-fi சேவையை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே அமைச்சர் வைஷ்ணவ் கூறினார். ரயில்வேயால் 4ஜி-5ஜி டவர்கள் விரைவாக நிறுவப்பட்டு வருவதாக தெரிவித்தார். பல இடங்களில் அவை பொருத்தப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறதாம்.
மேலும் படிக்க | ரயிலில் பயணிக்க போறீங்களா? கட்டாயம் இந்த செய்தியை உடனே படியுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ