ஓய்வூதிய புதுப்பிப்பு: நீங்கள் ஒரு மத்திய அரசு ஊழியரா? உங்கள் குடும்பத்தில் யாராவது மத்திய அரசு பணிகளில் இருக்கிறார்களா? அப்படியென்றால் இது உங்களுக்கு முக்கியமான செய்தியாக இருக்கும். தேசிய ஓய்வூதிய திட்டம் அதாவது என்.பி.எஸ்-க்கு எதிராக ஏராளமான ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதைத் தொடர்ந்து தற்போது ஊழியர்களின் ஓய்வூதியத்திற்கான புதிய ஃபார்முலாவை அரசாங்கம் தயாரித்துள்ளது. தற்போதுள்ள சந்தையுடன் இணைக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் மாற்றப்படும் என்றும், அதற்கு பதிலாக ஊழியர்கள் கடைசியாக பெற்ற ஊதியத்தில் 40% முதல் 45% வரை குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் அறிக்கை தெரிவிக்கின்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குழு அமைக்கப்பட்ட பிறகு புதுப்பிப்பு வந்தது


ஓய்வூதியம் தொடர்பான குழுவை அரசு அமைத்த பிறகு இந்தப் புதுப்பிப்பு வந்துள்ளது. இது குறித்து அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. அடுத்த ஓராண்டில் மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல்கள் மற்றும் 2024 மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கருதப்படுகிறது.


இப்போது ஊழியர்கள் 10% பங்களிப்பு செய்கிறார்கள்


கடந்த சில நாட்களாக நடந்து வரும் ஊழியர்களின் போராட்டம், பழைய ஓய்வூதிய திட்டத்துக்கான கோரிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, 2004 -இல் அமல்படுத்தப்பட்ட ஓய்வூதிய முறையை பரிசீலிக்க அரசு முடிவெடுத்துள்ளது. இதனுடன் தேசிய ஓய்வூதியத் திட்டம் (என்பிஎஸ்) குறித்து அறிக்கை அளிக்க ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. தற்போதைய தேசிய ஓய்வூதியத் திட்டத்தில், ஊழியர்கள் அடிப்படை சம்பளத்தில் 10% பங்களிக்கப்படுகின்றது. மேலும், அரசாங்கம் 14% பங்களிக்க வேண்டும்.


பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 50% உத்தரவாத ஓய்வூதியம்


என்பிஎஸ் -இன் கீழ் உள்ள ஊழியர்களின் ஓய்வூதியம் சந்தையில் இருந்து வரும் வருமானத்தைப் பொறுத்தது. அதேசமயம், பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (OPS) கீழ், கடைசியாக பெறப்பட்ட ஊதியத்தில் 50% உத்தரவாத ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. தற்போதுள்ள ஓய்வூதியத் திட்டத்தை மாற்றியமைக்க அரசாங்கம் தயாராகி வருவதாக ராய்ட்டர்ஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | Old Pension Scheme சூப்பர் அப்டேட்: முக்கிய கூட்டம்.... விரைவில் ஊழியர்களுக்கு நல்ல செய்தி


40% முதல் 45% வரை ஓய்வூதியம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது


புதிய விதி அமலுக்கு வந்த பிறகு, ஊழியர்கள் தங்களது கடைசி சம்பளத்தில் 40% முதல் 45% வரை ஓய்வூதியமாகப் பெற முடியும் என்று அறிக்கை கூறுகிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் கொண்டு வரும் எண்ணம் அரசுக்கு இல்லை என நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.


ஓய்வூதிய அமைப்பில் உருவாக்கப்படும் புதிய முறை பழைய ஓய்வூதிய முறைக்கு திரும்பிய மாநிலங்களின் கவலைகளை நீக்கும் என்று நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த காலங்களில், ராஜஸ்தான், ஜார்கண்ட், சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் பழைய ஓய்வூதிய முறையை மீட்டெடுப்பதாக அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 


ஊழியர்கள் தற்போது முந்தைய சம்பளத்தில் சுமார் 38 சதவிகிதத்தை ஓய்வூதியமாக பெறுகிறார்கள் என்று அதிகாரி கூறினார். 40 சதவிகித வருமானத்திற்கு அரசாங்கம் உத்தரவாதம் அளித்தால், வெறும் 2% பற்றாக்குறையைதான் சந்திக்க வேண்டும் என்று மற்றொரு அதிகாரி கூறினார். இருப்பினும், ஓய்வூதியத் தொகையில் சரிவு ஏற்பட்டால், செலவு அதிகரிக்கும்.


என்பிஎஸ் திட்டத்தின் நன்மைகள்


என்பிஎஸ் -இன் கீழ், வருமான வரித் துறையின் பிரிவு 80C மற்றும் 80CCD இன் கீழ் வரி விலக்கு கோரலாம். என்பிஎஸ் திட்டம் முதலீட்டாளர்களுக்கு அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப ஓய்வூதிய நிதிகள் மற்றும் முதலீட்டு விருப்பங்களை தேர்வு செய்ய அனுமதிப்பதன் மூலம் அவர்களுக்கு நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.


மேலும் படிக்க | Old Pension சூப்பர் செய்தி: மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்... முழு வேகத்தில் நடவடிக்கைகள்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ