வங்கி நிலையான வைப்பு விகிதங்கள்: முதலீட்டாளர்கள் நிலையான மற்றும் லாபகரமான விருப்பங்களைத் தேடுவதால், நிலையான வைப்புத்தொகைகள் (FDகள்) ஒரு பிரபலமான தேர்வாக வெளிப்படுகின்றன. நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி தற்போது ஒரே வாரத்தில் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை இரண்டாவது முறையாக திருத்தியுள்ளது. முன்னதாக சில நாட்களுக்கு முன்பு தான், இந்த தனியார் வங்கி அதாவது ஐசிஐசிஐ வங்கி மொத்த நிலையான வைப்பு வட்டியை உயர்த்தியது. தற்போது நேற்று அதாவது பிப்ரவரி 17ஆம் தேதி மீண்டும் ஒருமுறை ரூ.5 கோடிக்கு குறைவான டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை மாற்றியுள்ளது. இந்நிலையில் தற்பொழுது எவ்வளவு வட்டி விகிதம் உயர்ந்துள்ளது என்பதைக் காண்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிட்டர்ன் எவ்வளவு கிடைக்கும்னு இங்க பாருங்க:
ஐசிஐசிஐ வங்கி தற்போது பொது மக்களுக்கு ரூ.2 கோடிக்கும் குறைவான நிலையான வைப்புகளுக்கு 3% முதல் 7.20% வரை வட்டியை வங்கி வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் 3.50% முதல் 7.75% வரை இருக்கும். அதேசமயம் ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடிக்கும் குறைவான எஃப்டிகளுக்கு, பொதுமக்கள் 4.75% முதல் 7.40% வரை வட்டி பெறுவார்கள்.


இத்தனை நாட்களுக்கு ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 7 சதவீதம் வட்டி கிடைக்கும்:
15 மாதங்கள் முதல் 18 மாதங்களுக்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் மற்றும் 18 மாதங்கள் முதல் 2 ஆண்டுகளுக்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு வங்கி அதே வட்டியை வழங்குகிறது, விகிதங்கள் 7.20% ஆகும். 2 ஆண்டுகள் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு 7% வட்டியும், 3 ஆண்டுகள் 1 நாள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கும், 5 வருட வரி சேமிப்பு டெபாசிட்டுகளுக்கும் கிடைக்கும்.


மேலும் படிக்க | Life Insurance Corporation: குழந்தைகளுக்கான புதிய பாலிசியை அறிமுகம் செய்தது LIC: முழு விவரம் இதோ 


அதேசமயம் 2 ஆண்டுகள் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு, 3 ஆண்டுகள் 1 நாள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கும், 5 வருட வரி சேமிப்பு டெபாசிட்டுகளுக்கு 7 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. மறுபுறம் மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதங்கள் 0.50% அதிகமாகி  7.50 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.


இந்த நாட்கள் கொண்ட FD இல் முதலீடு செய்து 6% வரை வருமானம் பெறுங்கள்:
மறுபுறம் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸ்ட் டெபாசிட்டுகளுக்கு 6.90% வட்டியும், 1 ஆண்டு முதல் 389 நாட்கள் வரையிலான ஃபிக்ஸ்ட் டெபாசிட்டுகளுக்கு 6.70% வட்டியும், 390 நாட்கள் முதல் 15 மாதங்களுக்கும் குறைவான ஃபிக்ஸ்ட் டெபாசிட்டுகளுக்கு 6.70% வட்டியும் வழங்கப்படுகிறது. அதேசமயம் 271 நாட்கள் முதல் 289 நாட்கள் வரை ஃபிக்ஸ்ட் டெபாசிட்டுகளுக்கும், 290 நாட்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவான ஃபிக்ஸ்ட் டெபாசிட்டுகளுக்கும் 6% வட்டி வழங்கப்படுகிறது. 2 கோடி ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரையிலான ஃபிக்ஸ்ட் டெபாசிட்டுகளுக்கு  6.85 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.


மேலும் படிக்க | ரயில் டிக்கெட் கன்பர்ம் ஆன பின்னர் பணம் செலுத்தும் வசதி.... IRCTCயின் i-Pay!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ