இன்று எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை: புதிய நிதியாண்டு தொடங்கி ஒரு மாதம் கடந்துவிட்டது. புதிய நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து பலர்புதிய விதிகள்(புதிய விதிகள்) அமலுக்கு வந்துள்ளன. இப்போது மே மாதம் வருகிறது. மே மாதத்தில் சில புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. அதன்படி மாதத்தின் முதல் நாளான இன்று எண்ணெய் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வழங்கியுள்ளன. அதன்படி மே 1ம் தேதி எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டது. இந்த விலை குறைப்பை வணிக கேஸ் சிலிண்டர்களின் அரசு எண்ணெய் நிறுவனங்கள் செய்துள்ளன. அதன்படி சென்னையில் வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் 19 கிலோ சிலிண்டர் விலையானது ரூ.171.50 குறைக்கப்பட்டுள்ளது.இதனால் வணிக சிலிண்டரின் விலையானது ரூ.2021.50 என விலை நிர்ணையம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனுடன், விமான எரிபொருள் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதிய கட்டணங்கள் மே 1 அதிகாலை முதல் அமலுக்கு வந்தன
எண்ணெய் நிறுவனங்கள் விமான எரிபொருளின் விலையை ரூ.2,415 வரை குறைத்துள்ளன. புதிய கட்டணங்கள் மே 1 முதல் அமலுக்கு வந்துள்ளன. இருப்பினும், வீட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் வணிக கேஸ் சிலிண்டரில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் டெல்லியில் முன்னதாக ரூ. 2028க்கு கிடைத்த சிலிண்டர் தற்போது ரூ.1856.50க்கு கிடைக்கும். அதேபோல், கொல்கத்தாவில் ரூ.2132க்கு பதிலாகன் இனி ரூ.1960.50க்கு கிடைக்கும்.


மேலும் படிக்க | அம்ரித கலசம் திட்டத்தை மீண்டும் தொடங்கிய SBI; வாய்ப்பை தவற விடாதீர்கள்!


மும்பை மற்றும் சென்னையின் விலை நிலவரம்
மும்பையைப் பற்றி பேசுகையில், இங்கு சிலிண்டர் முன்பு 1980 ரூபாயாக இருந்தது, தற்போது 1808.50 ரூபாயாக குறைந்துள்ளது. அதே நேரத்தில் சென்னையில் ரூ.2192.50க்கு இருந்த சிலிண்டரின் விலை தற்போது ரூ.2021.50 ஆக் விற்பனை செய்யப்படும். அதேபோல் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களிடமிருந்து ATF இன் (விமான எரிபொருள் விலை ரூ.2415.25 குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இனி வரும் காலங்களில் விமானக் கட்டணங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சமீபத்திய ATF விலைகள்
ஏடிஎஃப் விலை டெல்லியில் கிலோ லிட்டர் ரூ.95935.34 ஆகவும், மும்பையில் ரூ.89348.60 ஆகவும், கொல்கத்தாவில் கிலோ லிட்டர் ரூ.102596.20 ஆகவும், சென்னையில் கிலோ லிட்டர் ரூ.99828.54 ஆகவும் குறைந்துள்ளது. இதன் காரணமாக விமான டிக்கெட்டுக்களின் விலை குறையும் என்று கூறப்படுகிறது.


பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில் சென்னையில் 345 ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. சென்னையில் இன்று (மே 1) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கும் ரூ.94.24க்கும் விற்பனையாகிறது.


மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 1.20 லட்சம் கிடைக்கும்... முழு விவரம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ