Ration Update: ரேஷன் கார்டுதாரர்களுக்கு செம நியூஸ்.. புதிய ஆர்டர் வெளியீடு
One Nation One Ration Update: ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்க ரேஷன்தாரர்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால், வேலைக்காக சொந்த ஊர்களை விட்டு, வேறு மாவட்டங்களுக்கு இடம் பெயர்ந்ந்துள்ள பயனாளிகள் மிகப்பெரிய பலனை பெற்று வருகிறார்கள்.
ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம்: நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக அரசு தரப்பிலிருந்து ரேஷன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு மட்டுமல்லால், மாநில அரசுகளும் ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. இதில் உணவு தானியங்கள் மட்டுமல்லாமல், நிதியுதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் :
ரேஷன் கார்டு வைத்திருக்கும் மக்கள் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை வாங்க வேண்டும் என்பதற்காகவே மத்திய அரசால் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் (One Nation Onae Ration) அறிமுகம் செய்யப்பட்டது. ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் தற்போது கோடிக்கணக்கான மக்கள் பலனடைந்து வருகிறனர், அத்தகைய சூழ்நிலையில், தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் ரேஷன் கடைகளிலிருந்து முக்கிய கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவின் எந்த மாநிலத்தை சேர்ந்தவரும், எங்கும் சென்றாலும் ரேஷன் பொருட்களை பெறலாம் என்ற நோக்கத்துடன் மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டமானது கடந்த கொரோனா தொற்று காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஏனெனில் ஊரடங்கு போடப்பட்ட நேரத்தில் சொந்த மாநிலத்தை விட்டு பிற பகுதிகளில் வந்து வசிக்கும் சிலருக்கு தேவையான உணவு பொருட்களை வாங்கிக்கொள்ள முடியாமல் போனது. இதனால் தான் இந்த திட்டம் அப்போது செயல் படுத்தப்பட்டது.
விரல் ரேகையை சரிபார்த்து ரேஷன் பொருட்கள் விநியோகம் :
இந்நிலையில் தற்போது இந்த ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருவதால் அனைத்து ரேஷன் கடைகளிலும், இ-ஸ்கேல் என்று சொல்லப்படும் எலக்ட்ரானிக் பாய்ண்ட் ஆஃப் சேல் சாதனங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது ரேஷன் அட்டை தாரர்களின் விரல் ரேகையை சரிபார்த்த பிறகு தான் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும் இந்த முடிவால் ரேஷன் எடையில் எவ்வித குளறுபடியும் இருக்காது. மேலும் எந்த ஒரு பயனர்களுக்கும் குறைவான ரேஷன் கிடைக்காது என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக ரேஷன்தாரர்களுக்கு குட் நியூஸ் :
எனவே இனி தமிழகத்திற்குள்ளும், எந்த ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்க ரேஷன்தாரர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இதனால், வேலைக்காக இனி வேறு மாவட்டங்களுக்கு சென்றாலும் ரேஷன் அத்தைதாரர்கள் மிகப்பெரிய பலனை பெற்று வருகிறார்கள்.
இருப்பினும், தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் மூலமாக பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் முறையாக வழங்கப்படுவதில்லை என்று புகார்கள் அவ்வப்போது எழுந்த நிலையில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை முறையாக வழங்கப்பட வேண்டும் என்றும், மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கூடுதல் ரேஷன் பொருட்கள் :
இதற்கிடையில் தற்போது மற்றொரு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதன்படி ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை குறைவாக உள்ளதால் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ், ரேஷன் கடைகளுக்கு கூடுதலாக அரிசி, சர்க்கரையை அனுப்புமாறு, தமிழக அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் கூறியுள்ளனர்.
கைரேகை பதிய வரும்படி கட்டாயப்படுத்தக்கூடாது :
இதனிடையே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழக ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு கட்டாயம் எனக் கூறி பொதுமக்களை உடனே ரேஷன் கடைகளுக்கு வரச் சொல்லி வற்புறுத்தக் கூடாது என ரேஷன் கடை ஊழியர்களுக்கு தமிழக அரசின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ