மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்ட பலன்கள்: அமைச்சரவை ஒப்புதல்

Old Pension Scheme: மாநில அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. மகாராஷ்டிரா அரசாங்கம் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலனை அதன் ஊழியர்களுக்கு வழங்கப்போவதாக தெரிவித்துள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 14, 2024, 09:01 AM IST
  • மத்திய அரசு ஊழியர்களும் பல மாநில அரசு ஊழியர்களும் பல மாதங்களாக பழைய திட்டத்திற்காக பல வித போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
  • பல மாநில அரசாங்கங்கள் தங்களது ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளன.
  • எனினும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இதில் இன்னும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்ட பலன்கள்: அமைச்சரவை ஒப்புதல்

Old Pension Scheme: மத்திய அரசு ஊழியர்களும் பல மாநில அரசு ஊழியர்களும் பல மாதங்களாக பழைய திட்டத்திற்காக பல வித போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பல மாநில அரசாங்கங்கள் தங்களது ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளன. எனினும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இதில் இன்னும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை .

Add Zee News as a Preferred Source

இதற்கிடையில் மகாராஷ்டிரா மாநில அரசு ஊழியர்களுக்கு (State Government Employees) ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. மகாராஷ்டிரா அரசாங்கம் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலனை அதன் ஊழியர்களுக்கு வழங்கப்போவதாக தெரிவித்துள்ளது. எனினும், இந்த பலன் அனைத்து ஊழியர்களுக்கும் கிடைக்காது. 2005, நவம்பர் மாதத்திற்கு முன்னதாக பணிக்கான விண்ணப்பம் வெளியிடப்பட்டு, ஆனால், அதற்கு பின்னர் பணி நியமனம் பெற்ற ஊழியர்களுக்கு ஓபிஎஸ் -இன் கீழ் பலன்களை பெற வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று அரசாங்கம் மற்றும் செமி கவர்ண்மெண்ட் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை மேற்கொண்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

பழைய ஓய்வூதியத் திட்டம் (Old Pension Scheme) தொடர்பான இந்த முன்மொழிவிற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 2005 க்கு பிறகு பணியமர்த்தப்பட்ட சில ஊழியர்களும் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலனை பெற தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. மகாராஷ்டிரா மாநில ஊழியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் விசுவாஸ் கட்டர் அமைச்சரவையின் இந்த முடிவு 26,000 மாநில அரசு ஊழியர்களுக்கு பலனளிக்கும் என்று கூறினார்.

எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?

அரசாங்கத்தின் இந்த முடிவிற்கு பிறகு மாநில அரசின் (State Government) 26,000 ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலனை பெறுவார்கள். 2005 நவம்பர் மாதத்திற்கு முன்னர் பணயில் சேர்ந்த சுமார் 9.5 லட்சம் மாநில அரசு ஊழியர்கள் ஏற்கனவே பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலனை பெற்று வருகிறார்கள். பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஊழியர்கள் கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக அளிக்கப்படும். இந்தத் திட்டத்தில் ஓய்வூதியம் (Pension) பெற ஊழியர்கள் எதுவும் பங்களிப்பு அளிக்கத் தேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | PF கணக்கில் பணம் எவ்வளவு இருக்கு... மிக சுலபமாக அறியும் வழிமுறைகள் இதோ..!!

உயிர்கள் அளிக்க வேண்டிய ஆவணங்கள் என்ன?

தற்போது பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (OPS) கீழ் சேர்க்கப்பட்டுள்ள 26,000 ஊழியர்கள் அடுத்த ஆறு மாதத்திற்குள் பழைய ஓய்வதையும் திட்டம் மற்றும் தேசிய ஓய்வூதிய அமைப்பு (National Pension Scheme) ஆகிய இரண்டிற்குள் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் என்றும், அதற்கடுத்த 2 மாதங்களுக்குள் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அமைச்சரவை தெரிவித்துள்ளது. 2005 ஆம் ஆண்டு மாநில அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது. இதற்குப் பிறகு பணியில் சேர்ந்து ஊழியர்களுக்கு தேசிய ஓய்வூதிய அமைப்பின் பலன் வழங்கப்பட்டது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தின் நன்மைகள் என்ன

புதிய ஓய்வூதிய திட்டத்தின் (New Pension Scheme) கீழ் ஓய்வூதியம் பெற மாநில அரசு ஊழியர்கள் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 10 சதவீதத்தை பங்களிக்க வேண்டும். இதற்கு மாநில அரசும் தனது பங்களிப்பை வழங்குகிறது. பின்னர் இந்தத் தொகையானது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) அங்கீகரிக்கப்பட்ட பலவகையான ஓய்வூதிய நிதிகளில் செய்யப்படும். இந்த தொகையின் மற்றொரு பகுதி பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும்.

மேலும் படிக்க | காதலர் தினத்தன்று ‘இந்த’ தொழில் செய்தால் செம லாபம் பார்க்கலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News