மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்: தேர்தலுக்கு முன் 2 குட் நியூஸ் வருது!!

7th Pay Commission, DA Hike: கொரோனா காலத்தில் முடக்கப்பட்டஅகவிலைப்படியின் நிலுவைத் தொகை பற்றி அரசாங்கம் இப்போது நல்ல செய்தி அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 14, 2024, 02:34 PM IST
  • மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய பரிசு கிடைக்கவுள்ளது.
  • ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு இருக்கும்.
  • 18 மாத அரியர் தொகை கிடைக்குமா?
மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்: தேர்தலுக்கு முன் 2 குட் நியூஸ் வருது!!

7th Pay Commission, DA Hike: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய பரிசு கிடைக்கவுள்ளது. இன்னும் சில நாட்களில் அவர்களுக்கு அரசிடமிருந்து மிக நல்ல செய்தி கிடைக்கும். மத்திய அரசாங்கம் அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பை மிக விரைவில் வெளியிட உள்ளது. இதன் மூலம் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Add Zee News as a Preferred Source

இது தவிர கொரோனா காலத்தில் முடக்கப்பட்டஅகவிலைப்படியின் நிலுவைத் தொகை பற்றியும் அரசாங்கம் இப்போது நல்ல செய்தி அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கிடைத்தால் ஊழியர்களுக்கு அது பம்பர் பரிசாக இருக்கும்.

அகவிலைப்படி அரியர் தொகையை பற்றி அரசாங்கம் இன்னும் அதிகாரப்பூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை. எனினும், இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் (Lok Sabha Election) நடக்க உள்ளதால் இந்த நேரத்தில் வாக்காளர்களை மகிழ்விக்கும் வகையில் இது குறித்த பெரிய அறிவிப்பை அரசு வெளியிடலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அகவிலைப்படி அதிகரிப்பு (DA Hike)

அகவிலைப்படியைப் (Dearness Allowance) பொறுத்தவரை மத்திய அரசு ஊழியர்கள் கடந்த சில மாதங்களாகவே பலவித நல்ல செய்திகளை பெற்று வருகிறார்கள். இந்த முறையும் ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் மூலம் ஊழியர்களின் மொத்த ஊதியத்தில் ஏற்றம் இருக்கும். 

சமீபத்தில் வெளிவந்த டிசம்பர் மாத ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்களின் அடிப்படையில் அகவிலைப்படியில் 4 சதவீத அதிகரிப்பு இருக்கும் என்பது தெளிவாகியுள்ளது. தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 46 சதவீத டிஏ (DA) பெற்ற வருகிறார்கள். ஓய்வூதியதாரர்களும் (Pensioners) 46 சதவீத அகவிலை நிவாரணத்தை பெற்று வருகிறார்கள். இப்போது அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கப்பட்டால் ,. ஊழியர்களின் அகவிலைப்படியும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணமும் 50% -ஐ எட்டும். 

மேலும் படிக்க | மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்ட பலன்கள்: அமைச்சரவை ஒப்புதல்

பொதுவாக ஒரு ஆண்டில் இரண்டு முறை அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி திருத்தம் செய்யப்படுகின்றது. கடந்த ஆண்டின் ஜூன் முதல் டிசம்பர் மாதம் வரையிலான ஏஐசிபிஐ எண்களின் அடிப்படையில் ஜனவரி அகவிலைப்படி தீர்மானிக்கப்படுன்றது. அதே போல் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான ஏஐசிபிஐ எண்களின் அடிப்படையில் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி உயர்வு தீர்மானிக்கப்படுகின்றது. 

18 மாத அரியர் தொகை கிடைக்குமா? (DA Arrears)

கொரோனா காலத்தில் உருவான அசாதாரண சூழ்நிலை காரணமாக அந்த நேரத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை முடக்கியது. நிலைமை சற்று சரியானவுடன் அகவிலைப்படி முடக்கம் நீக்கப்பட்டது. எனினும் ஜனவரி 1 2020 முதல் ஜூன் 30 2021 வரை முடக்கப்பட்ட அகவிலைப்படியின் நிலுவைத் தொகை இன்னும் ஊழியர்களுக்கு கிடைக்கவில்லை. இதை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்கள் (Central Government Employees) நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது தேர்தல்கள் வர உள்ள நிலையில் அரசாங்க இந்த கோரிக்கைக்கு செவி சாய்க்கும் என்று நம்பப்படுகின்றது. இந்த தொகையை அரசாங்கம் ஊழியர்களுக்கு அளித்தால், அவர்களின் கணக்கில் சுமார் 2 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும். இது ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணத்தை அளிக்கும்.

மேலும் படிக்க | PF கணக்கில் பணம் எவ்வளவு இருக்கு... மிக சுலபமாக அறியும் வழிமுறைகள் இதோ..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News