வந்தே சாதாரண் ரயில்: ரயில் பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி உள்ளது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு பல தடங்களில் பயணித்துக்கொண்டு இருக்கும் வந்தே பாரத் ரயில் பார்ப்பதற்கு மிக அழகாகவும் மாஸாகவும் பல வசதிகளுடனும் இருக்கின்றது. கூடுதலாக, இது மிக வேகமாக இலக்கை சென்றடையும் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும், இதன் கட்டணங்கள் சற்று அதிகமாக இருப்பதால், அனைவராலும் இதில் பயணிக்க முடிவதில்லை. ஆனால், இனி கவலை வேண்டாம்!! பொதுமக்களுக்காக வந்தே பாரத் சாதாரண் ரயிலை (Vande Sadharan Train) இயக்க இந்திய ரயில்வே முழு வீச்சில் தயாராகி வருகிறது. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, இந்த ரயிலை இயக்க முடிவு செய்யப்பட்டு, தற்போது அதன் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயிலின் கட்டணம் வந்தே பாரத் ரயிலை விட குறைவாக இருக்கும் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதிக கட்டணம் காரணமாக பலர் இந்த வந்தே பாரத் ரயிலில் பயணிக்க முடியவில்லை என ரயில்வே தெரிவித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, 'வந்தே சாதாரன்' ரயிலை இயக்க ரயில்வே முடிவு செய்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரயில் பெட்டிகளை தயாரிக்கும் பணி தொடங்கியது


இந்த ரயிலுக்கான பெட்டிகள் தயாரிக்கும் பணி நடந்து வருவதாக வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ரயிலின் பெட்டிகள் சென்னையில் உள்ள இன்டக்ரல் கோச் பேக்டரியில் (ஐசிஎஃப்) தயாரிக்கப்பட்டு வருகிறது. இது விரைவில் தயாரிக்கப்பட்டு சில மாதங்களில் தயாராகிவிடும்.


வந்தே சாதாரண் ரயிலில் என்ன மாதிரியான வசதிகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்: 


என்ன மாதிரியான வசதிகள் கிடைக்கும்?


வந்தே பாரத் சாதாரண் ரயிலில் 24 LHB பெட்டிகள் நிறுவப்படும். பயோ வேக்யூம் டாய்லெட்கள், பயணிகள் தகவல் அமைப்பு மற்றும் சார்ஜிங் பாயின்ட்கள் போன்ற அம்சங்கள் இதில் கிடைக்கும். இதனுடன் ரயிலில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். இது தவிர, தானியங்கி கதவு அமைப்பு வசதியும் கிடைக்கும்.


ரயிலில் நிறுத்தங்கள் குறைவாக இருக்கும்


இந்த ரயில்களின் மிக விசேஷமான விஷயம் என்னவென்றால், அவற்றின் வேகம் மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ்களை விட அதிகமாக இருக்கும். இதனுடன் நிறுத்தங்களும் குறைவாக இருக்கும். இது தவிர, தானியங்கி கதவுகள் வசதியும் கிடைக்கும்.


மேலும் படிக்க | பங்குச்சந்தையின் புதிய ரிகார்ட் பிரேக்! இதுவரை இல்லாத உச்சத்தில் இந்திய பங்குச்சந்தை


ரயில்வே அமைச்சக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்


ரெயில்வே அமைச்சக அதிகாரி ஒருவர் தகவல் அளித்தபோது, ​​வந்தே பாரத் ரயிலுக்கும் சாதாரண் வந்தே பாரத் ரயிலுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்வது அவசியம் என்று கூறியிருந்தார். இந்த ரயிலும் சதாப்தி மற்றும் ஜன் சதாப்தி போன்று இருக்கும். சதாப்தி ரயில் தொடங்கப்பட்டபோது, ​​அதன் கட்டணம் அதிகமாக இருந்தது, ஆனால் பின்னர் பொதுமக்களுக்காக, ரயில்வே ஜன் சதாப்தி ரயிலை தொடங்கியது, அதன் கட்டணம் குறைவாக இருந்தது. அதேபோல் இப்போது குறைந்த கட்டணத்தில் பயணிகள் வந்தே பாரத் ரயில் பயணம் போன்ற ஒரு பயணத்தை அனுபவிக்க வந்தே சாதாரண் ரயில் தொடங்கப்படுகிறது.


கட்டணம் எவ்வளவு இருக்கும்?


ஏழைப் பயணிகளும் வந்தே பாரத் ரயிலில் பயணிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ரயில்வே இந்த ரயிலை ஏழை மக்களுக்காக உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பயணிக்கும் ஏழை எளிய மக்கள் இந்த ரயிலில் அனைத்து வசதிகளையும் பெற முடியும். இந்த ரயிலின் கட்டணம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸை விட மிகக் குறைவாக இருக்கும். தற்போது, ​​கட்டணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வரவில்லை. சாதாரண் வந்தே பாரத் ரயில் குறிப்பாக சாமானியர்களுக்காக உருவாக்கப்பட்டு வருகிறது.


மேலும் படிக்க | ரத்தன் டாட்டா முதல் ஷிவ் நாடார் வரை... நன்கொடை வழங்குவதில் சிறந்த இந்திய தொழிலதிபர்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ