India's Top 5 Philanthropists: தான் சேர்த்த செல்வத்தை சமூக பணிகளுக்காக செலவிடுவதில் வெகுசிலரே ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், இந்தியாவின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருக்கும் தொழிலதிபர்களில் சிலர் தாராளமாக நன்கொடை அளிப்பதிலும் முன்னணியில் இருக்கின்றனர். அவர்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.

நாட்டின் மிகப்பெரிய நன்கொடையாளர்கள் பட்டியலில் டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவின் பெயர் முதலிடத்தில் உள்ளது. ஊடக அறிக்கையின்படி, ரத்தன் டாடா தனது வருமானத்தில் பெரும்பகுதியை நன்கொடையாக வழங்குகிறார். ஒவ்வொரு ஆண்டும் ரத்தன் டாடா சுமார் 1100 கோடி ரூபாய் நன்கொடை அளிக்கிறார்.
HCL நிறுவனர் ஷிவ் நாடார் நன்கொடை அளிப்பதில் முன்னணியில் உள்ளார். அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டில் ஷிவ் நாடார் மிகப்பெரிய பரோபகாரராக உருவெடுத்தார். கடந்த நிதியாண்டில் ஷிவ் நாடார் சுமார் ரூ.1161 கோடி நன்கொடை அளித்துள்ளார்.
அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியின் பெயரும் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. கௌதம் அதானி மற்றும் அவரது குடும்பத்தினர் 2022 ஆம் ஆண்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக சுமார் 60,000 கோடி ரூபாய் நன்கொடை அளிப்பதாக உறுதியளித்துள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
நன்கொடையாளர் பட்டியலில் முகேஷ் அம்பானியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அம்பானி கடைசியாக ரூ.411 கோடி நன்கொடை அளித்ததாக ஹுருன் இந்தியா தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி ஆசியாவின் பணக்காரர்களில் ஒருவர். அவரது நிகர சொத்து மதிப்பு சுமார் $92.1 பில்லியன் ஆகும்.
அசிம் பிரேம்ஜி, நந்தன் நிலேகனி மற்றும் அனில் அகர்வால் ஆகியோரின் பெயர்களும் நன்கொடையாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இவர்கள் உதவிகள் புரியும் விஷயத்திலும் மிகவும் முன்னனியில் இருக்கிறார்கள்.