இந்திய ரயில்வேயின் வந்தே பாரத் ரயில்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஓர் ரயில் சேவை. முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் தற்போது 46 வழித்தடங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த எண்ணிக்கையை விரிவாக்கும் செய்யும் முயற்சியில் இந்திய ரயில்வே மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.
இந்திய ரயில்வே விரைவில் ஒன்பது புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (Vande Bharat Express) ரயில்களை, பல வழித்தடங்களில் இயக்க உள்ளதாக என்று ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. சென்னையில் உள்ள ICF தொழிற்சாலையில் (Integral Coach Factory - ICF) தற்போது இந்த ஒன்பது ரயில்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. மொத்தம் ஒன்பது வந்தே பாரத் ரயில்கள் பயன்பாட்டிற்கு வரும் நிலையில், ஐந்து வழித்தடங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதில் தமிழ்நாட்டிற்கும் சில வந்தே பாரத் ரயில் வழித்தடங்கள் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் புதிய வழித்தடங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆலோசிக்கப்பட்டு வரும் புதிய வந்தே பாரத் ரயில் பாதைகள்
1. விஜயவாடா - சென்னை சென்ட்ரல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
2. திருநெல்வேலி - சென்னை எழும்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
3. பூரி - ரூர்கேலா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
4. பாட்னா-ஹவுரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
5. ஜெய்ப்பூர்-சண்டிகர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
6. இந்தூர் - ஜெய்ப்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
7. ஜெய்ப்பூர் - உதய்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
வந்தே பாரத் ரயில்கள் - இந்தியாவின் முதல் அரை-அதிவேக ரயில்கள் - அவை உலகத் தரம் வாய்ந்த பயணிகள் வசதிகளுடன் பொருத்தப்பட்டிருப்பதால், பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. தற்போது, இந்தியா முழுவதும் 50 வழித்தடங்களை உள்ளடக்கிய 25 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்கள் இயங்குகின்றன - நான்கு வடக்கு மண்டலத்திலும், மூன்று தெற்கு மற்றும் மத்திய மண்டலங்களிலும், இரண்டு மேற்கு, மேற்கு மத்திய மற்றும் வடமேற்கு ரயில்வே மண்டலங்களிலும், இயக்கப்படுகின்றன. இது தவிர, தென்கிழக்கு மத்தியிலும் தலா ஒன்று, கிழக்கு, கிழக்கு கடற்கரை பகுதி, தென் மத்திய, தென்கிழக்கு, வடகிழக்கு எல்லைப்பகுதி, கிழக்கு மத்திய, தென்மேற்கு மற்றும் வடகிழக்கு இரயில்வே ஆகிய வழித்தடங்களும் இதில் அடங்கும்.
மேலும் படிக்க | இனி சென்னை - பெங்களூரு சீக்கிரமே போகலாம்... செம வேகத்தில் இனி ரயில்கள் பறக்கும்!
வந்தே பாரத் முதல் ரயில் சேவை
நாட்டிலேயே முதன்முறையாக 2019 ஆம் ஆண்டு டெல்லி மற்றும் வாரணாசி இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி நாடு முழுவதும் மொத்தம் 25 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில், சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூரு வழியாக மைசூருவுக்கும், சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கும் இரண்டு வந்தே பாரத் ரயில் சேவைகள் தற்போது இயக்கப்படுகின்றன.
வந்தே பாரத் ரயில் கட்டண குறைப்பு
முன்னதாக இரு மாதஙக்ளுக்கு முன்பு வந்தே பாரத் ரயிலுக்கு நாட்டின் குறிப்பிட்ட ஒரு சில பகுதிகளில் மிகுந்த அதிக வரவேற்பு இருந்தாலும், குறிப்பிட்ட சில பகுதிகளில் வரவேற்பே இல்லாத நிலையும் இருக்கின்றது. குறிப்பிட்ட சில பகுதிகளில் இயங்கிக் கொண்டிருக்கும் வந்தே பாரத் ரயில்கள் அதிக காலியான இருக்கைகளுடன் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதன் விளைவாக வரவேற்புக் குறைந்துக் காணப்படும் வழித்தடங்களில் ரயில் கட்டணத்தைக் குறைக்க இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளது.
மேலும் படிக்க | ரயில் ஏசி இருக்கை டிக்கெட் கட்டண குறைப்பு! ஆனால் சில நிபந்தனைகள் உண்டு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ