EPFO Higher Pension: PF உறுப்பினர்களுக்கு ஒரு முக்கியமான புதுப்பிப்பு வந்துள்ளது. இந்தியா முழுவதிலும் உள்ள 97,640 இபிஎஃப் உறுப்பினர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம், 1995 -இன் கீழ் அதிக ஊதியத்தில் ஓய்வூதியம்  (PoHW) மூலம் நன்மை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து இந்த பதிவில் காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

EPF Subscribers: இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு உயர் ஓய்வூதியம்


- இந்த முயற்சி நவம்பர் 2022 -இல் உச்ச நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. 


- தகுதியான நபர்கள் அவர்களின் அதிக ஊதியத்தின் அடிப்படையில் ஓய்வூதியம் பெற இந்த தீர்ப்பு அனுமதிக்கிறது.


- இந்த பயனாளிகளில், 8,401 நபர்களுக்கு ஏற்கனவே ஓய்வூதியம் வழங்குவதற்கான உத்தரவுகள் (PPOs) வழங்கப்பட்டுள்ளன.


- மேலும் 89,235 நபர்களுக்கு கோரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


- இந்த நோட்டீஸ்கள், நிலுவைத் தொகையை மாற்றுவதற்காக வருங்கால பயனாளிகளுக்கு, அதாவது இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members) அனுப்பப்படும் ஒரு முறையான கோரிக்கையாகும்.


- இது அதிக ஊதியத்தில் ஓய்வூதியம் பெறுவதற்கான ஒரு முன்நிபந்தனை என்பது குறிப்பிடத்தக்கது.


EPS 95 Higher Pension: பயனாளிகள் மற்றும் வகைகளின் பிரிவு


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பிலிருந்து (EPFO) பெறப்பட்ட தரவின் மூலம், பயனாளிகளின் தெளிவான வகைப்பாட்டை புரிந்துகொள்ள முடிகின்றது. 


- ஆகஸ்ட் 7 ஆம் தேதி நிலவரப்படி, 2014 க்கு முந்தைய பிரிவில் இருந்து ஓய்வு பெற்ற இரண்டு பேருக்கு மட்டுமே அதிக ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது.


- மீதமுள்ள 8,399 PPO -க்கள் செப்டம்பர் 1, 2014 -இன் படி, பணியில் இருந்த நபர்களுக்கு வழங்கப்பட்டன.


- கோரிக்கை நோட்டீஸ் பெற்ற 89,235 பேரில், 16 பேர் 2014க்கு முன் ஓய்வு பெற்றவர்கள், 89,219 பேர் 2014க்கு பிந்தைய உறுப்பினர்கள்.


Pension on Higher Wages: பெறப்பட்ட மற்றும் நிராகரிகப்பட்ட விண்ணப்பங்கள்


- இபிஎஃப்ஓ அதிக ஊதியத்தில் ஓய்வூதியம் பெற மொத்தம் 17,48,775 விண்ணப்பங்களைப் பெற்றது. 


- இந்த விண்ணப்பங்களில், செப்டம்பர் 1, 2014 நிலவரப்படி உறுப்பினர்களாக இருந்த நபர்களிடமிருந்து சுமார் 13.38 லட்சம் விண்ணப்பங்கள் வந்தன.


மேலும் படிக்க | அகவிலைப்படி உயர்வு உண்டு, ஆனால் ‘அது’ இல்லை: ஊழியர்களுக்கு மகிழ்ச்சியிலும் ஒரு ஏமாற்றம்


- இதில் சுமார் 1.48 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.


- இவற்றில் நிராகரிக்கப்பட்ட 1.12 லட்சம் விண்ணப்பங்கள், 2014ஆம் ஆண்டுக்கு முன் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களிடமிருந்து வந்தவை.


2014 க்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களில் கணிசமான அளவு ஊழியர்கள் PoHW, உயர் ஓய்வூதிய நன்மைக்கு தகுதியற்றவர்கள் என்பதை இது காடுகிறது. இதன் காரணமாக அந்த பிரிவில் அதிக நிராகரிப்பு விகிதம் உள்ளது. 


Higher Pension: நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள்


- சுமார் 3.14 லட்சம் விண்ணப்பங்கள் இன்னும் EPFO ​​க்கு அனுப்ப்படாமல் முதலாளிகள் / நிறுவனங்களிடம் நிலுவையில் உள்ளன என்பதையும் இந்த தரவு எடுத்துக்காட்டுகிறது.


- முதலாளி / நிறுவனத்தின் தரப்பில் ஏற்படும் இந்த தாமதங்கள் தகுதியான நபர்களுக்கான PoWH நன்மைகளை செயலாக்குவதில் தடையாக உள்ளன.


-  இதற்கிடையில், EPFO ​​ஏற்கனவே சுமார் 14.3 லட்சம் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


- நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் மந்தமான கதியில் செயலாக்கப்படுவது, அதிக ஊதியத்தில் ஓய்வூதியம் வழங்குவதற்கான செயல்முறையின் ஒட்டுமொத்த காலக்கெடுவை பாதிக்கலாம்.


- இதனால், இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ள முதலாளிகள் மற்றும் பணியாளர்கள் என இரு தரப்பும் பாதிக்கப்படுவார்கள். 


உயர் ஓய்வூதியத்திற்கான இந்த முன்முயற்சியானது தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய பலன்களை (Pension Benefits) மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. எனினும் இதன் செயல்பாட்டில்  பல இடங்களில் ஏற்படும் தாமதங்களால் பல சவால்களும் இருக்கின்றன. 


மேலும் படிக்க | ‘ஒரே நாடு, ஒரே தங்க விலை’ விரைவில்.... GJC செயலாளர் கொடுத்த ஹிண்ட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ