‘ஒரே நாடு, ஒரே தங்க விலை’ விரைவில்.... GJC செயலாளர் கொடுத்த ஹிண்ட்

Gold Rate: தங்கம் விலை ஏறினாலும் இறங்கினாலும், அதை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை என்றும் குறைவதில்லை. இந்த நிலையில், தங்க நகை பிரியர்களுக்கும், முதலீடாக தங்கத்தை வாங்குபவர்களுக்கும் ஒரு முக்கிய அப்டேட் வந்துள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 23, 2024, 05:01 PM IST
  • தங்க நகை பிரியர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட்.
  • ஒரே நாடு ஒரே தங்க விலை.
  • அகில இந்திய ரத்தினம் மற்றும் ஆபரண உள்நாட்டு கவுன்சில்கூறியது என்ன?
‘ஒரே நாடு, ஒரே தங்க விலை’ விரைவில்.... GJC செயலாளர் கொடுத்த ஹிண்ட் title=

Gold Rate: தங்கம் என்பது நம் நாட்டு மக்களுடன் பின்னிப்பிணைந்து விட்ட ஒரு விஷயமாகும். ஆபரணமாக அணிந்து அழகு பார்ப்பதற்கும், முதலீடாக வாங்கி வைப்பதற்கும், பங்குச் சந்தையில் வாங்கி விற்று பணம் ஈட்டவும், கவுரவத்தின் அடையாளமாகவும், ஒவ்வொருவர் இதை ஒவ்வொரு விதத்தில் வைத்திருக்க விரும்புகிறார்கள். அனைத்து வித விசேஷங்களிலும் தங்கத்துக்கே முன்னுரிமை அளிக்கப்படுகின்றது.

One Nation One Gold Rate

தங்கம் விலை ஏறினாலும் இறங்கினாலும், அதை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை என்றும் குறைவதில்லை. இந்த நிலையில், தங்க நகை பிரியர்களுக்கும், முதலீடாக தங்கத்தை வாங்குபவர்களுக்கும் ஒரு முக்கிய அப்டேட் வந்துள்ளது. GJC எனப்படும் அகில இந்திய ரத்தினம் மற்றும் ஆபரண உள்நாட்டு கவுன்சில் (The All India Gem and Jewellery Domestic Council) செவ்வாய்கிழமை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போது மாறுபட்டு இருக்கும் உள்நாட்டு தங்கத்தின் விலையை ஒரே விலையாக வைப்பதை நோக்கமாகக் கொண்ட ‘ஒரே நாடு ஒரே தங்க விலை' என்ற திட்டத்தை அமல்படுத்தவுள்ளதாகவும், அதற்கான பணிகளை செய்து வருவதாகவும் கவுன்சில் தெரிவித்தது. 

"நாம் ஒரே விலையில்தான் தங்கத்தை இறக்குமதி செய்கிறோம். ஆனால் உள்நாட்டு சில்லறை விற்பனை விலைகள் ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு வேறுபடுகின்றன. நாடு முழுவதும் ஒரே விலை நிலவ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்," என்று GJC செயலாளர் மிதேஷ் தோர்டா கூறினார். அக்டோபர் 22 முதல் டிசம்பர் 9 வரை நடக்கும் 'லக்கி லக்ஷ்மி' வருடாந்திர தங்க விழாவின் துவக்க விழாவில் அவர் இதை தெரிவித்தார். 

மேலும் படிக்க | PF உறுப்பினர்களுக்கு அப்டேட்: நிறுவனங்களுக்கான முக்கிய விதிகளை மாற்றியது EPFO

கவுன்சில், அதன் உறுப்பினர்களுடன் ஏற்கனவே 50 க்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்தியுள்ளதாகவும், இந்த முன்முயற்சியில் சேர, சுமார் 8,000 நகை வியாபாரிகளை ஒன்று சேர்த்துள்ளதாகவும் கூறியுள்ளது.

அரசாங்கத்திடமும் இது பற்றி தெரிவிக்கபட்டுள்ளது. எனினும், GJC தற்போது தொழில் பங்குதாரர்களை இதற்கு சம்மதம் தெரிவிக்க வைக்கும் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது.

"நாங்கள் ஏற்கனவே எங்கள் உறுப்பினர்களுக்கு வாட்ஸ்அப் ஒளிபரப்பு குழுக்கள் மூலம் பரிந்துரைக்கப்பட்ட கட்டணத்தை வழங்கி வருகிறோம். இது படிப்படியாக குறைந்தது 4-5 லட்சம் நகைக்கடைகளை அடைவதே எங்கள் இலக்கு" என்று தோர்டா கூறினார். குஜராத்தில் செயல்படுத்துவது குறிப்பாக சவாலானதாக இருந்தது என அவர் தெரிவித்தார்.
 
GJC, சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் உட்பட 3,500 உறுப்பினர்களுடன் 2005 இல் நிறுவப்பட்டது. நாடு முழுதும் ஒரே தங்க விலையை நிர்ணயிப்பதற்கான இந்த செயல்முறையை, GJC 6 மாதங்களுக்குள் சீரமைக்கும் நோக்கோடு செயல்பட்டு வருகிறது. 

கவுன்சில் அதன் 4,200 இணைந்த சங்கங்களுடன், அதன் இணைப்பில் உள்ள கடைகள் மற்றும் தனிப்பட்ட நகைக்கடைகள் என இரு தரப்பு வணிகர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. 

Lucky Lakshmi Festival: லக்கி லக்ஷ்மி திருவிழா

- லக்கி லக்ஷ்மி திருவிழாவில் 1,500 சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் 8-9 செயின் ஸ்டோர்கள் பங்கேற்பார்கள்.
- இதில் ரூ.10 கோடி மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
- 25,000 ரூபாய்க்கு மேல் தங்கம் வாங்கும் வாடிக்கையாளர்கள் திருவிழாக் காலத்தில் நிச்சயமான பரிசுகளைப் பெறுவார்கள்.
- இந்த வெளியீட்டு விழாவில் GJC மூத்த  உறுப்பினர்களுடன் பாலிவுட் நடிகை முக்தா கோட்சே கலந்து கொண்டார்.

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு VRS குறித்த முக்கிய அப்டேட்: மிஸ் பண்ணிடாதீங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News