மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அப்டேட்: தேசிய ஓய்வூதிய திட்டத்தில் வரும் லாபகரமான் மாற்றம்
National Pension Scheme: ஓய்வூதிய திட்டப் பிரச்சினை தற்போது அரசியல் ரீதியாக ஒரு வாக்கு சேகரிக்கும் உத்தியாக மாறி விட்டது. மத்திய அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என பல நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
புது தில்லி: தேசிய ஓய்வூதிய திட்டம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வரும் உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஊழியர்கள் கடைசியாக பெற்ற சம்பளத்தில் குறைந்தபட்சம் 40-45% ஐ ஓய்வூதியமாகப் பெறுவதை உறுதிசெய்யும் வகையில், இந்த ஆண்டு இறுதிக்குள் தேசிய ஓய்வூதியத் திட்டத்தை (என்பிஎஸ்) மத்திய அரசு திருத்தம் செய்ய வாய்ப்புள்ளது என தகவல் வெளிவந்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஓய்வூதிய திட்டப் பிரச்சினை தற்போது அரசியல் ரீதியாக ஒரு வாக்கு சேகரிக்கும் உத்தியாக மாறி விட்டது. மத்திய அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என பல நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். பல எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு (OPS) மாறி வருகின்றன. பழைய ஓய்வூதிய திட்டத்தில், பணி ஓய்வு பெறும்போது ஊழியர்கள் பெற்ற ஊதியத்தில் 50% தொகை ஓய்வூதியமாக கிடைக்கின்றது. தற்போதைய சந்தையுடன் இணைக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம், 2004 இல் தொடங்கப்பட்டது. இதில் ஓபிஎஸ் -இல் இருப்பது போல உத்தரவாதமான அடிப்படைத் தொகைகள் எதுவும் வழங்கப்படுவதில்லை. மற்றொரு சர்ச்சைக்குரிய விஷயம் என்னவென்றால், எபிஎஸ் (NPS) -இல் ஊழியர்களின் 10% பங்களிப்பும் அரசாங்கத்தின் 14% பங்களிப்பும் இருக்கும். ஆனால் பழைய ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்கள் பங்களிக்கத் தேவையில்லை.
மாற்றியமைக்கப்பட்ட புதிய ஓய்வூதியத் திட்டமானது அதிக வருமானத்தை வழங்குவதற்காக "ஆக்சுரியல் கணக்கீடுகளில்" சில மாற்றங்களைக் கொண்டிருக்கும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஊழியர் மற்றும் முதலாளியின் (இங்கு மத்திய மற்றும் மாநில அரசுகள்) பங்களிப்புகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
தேசிய ஓய்வூதிய திட்டத்தில் (National Pension Scheme) ஓய்வூதியம் பெறுபவர்கள் ஓய்வுபெறும் போது 60% கார்பஸைத் திரும்பப் பெறலாம் (இதற்கு வலி கிடையாது). மீதமுள்ள 40% க்கு அவர்கள் ஒரு வருடாந்திர திட்டத்தை வாங்கலாம். அதில் இருந்து செலுத்தப்படும் பணம் வரிக்கு உட்பட்டது.
ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், இமாச்சல பிரதேசம் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பழைய ஓய்வூதிய முறைக்கு திரும்பியுள்ளன. இது மாநில அரசாங்கங்களை திவால் நிலைக்கு தள்ளும் என்று சில பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளார்கள்.
தற்போதைய தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், கிட்டத்தட்ட 8.7 மில்லியன் மத்திய மற்றும் மாநில-அரசு ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 10% பங்களிக்கின்றனர். அதே நேரத்தில் அரசாங்கம் 14% செலுத்துகிறது. இறுதி பே-அவுட் அந்த நிதியால் பெறப்பட்ட வருமானத்தைப் பொறுத்தது. இது பெரும்பாலும் அரசாங்கக் கடன் கருவிகளில் முதலீடு செய்யப்படுகிறது.
மேலும் படிக்க | ரிசர்வ் வங்கி அளித்த புதிய வழிகாட்டுதல்: KYC குறித்து வந்த பெரிய அப்டேட்!!
பழைய ஓய்வூதிய முறையானது, ஊழியர்களின் (Central Government Employees) கடைசி ஊதியத்தில் 50% நிரந்தர ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. எனவே, இது ஒரு சிறந்த ஓய்வூதிய திட்டமாக கருதப்படுகிறது.
"அரசாங்கம் பழைய திட்டத்திற்குத் திரும்பப் போவதில்லை. ஆனால் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்படும். இதன் மூலம் உறுதிசெய்யப்பட்ட அடிப்படைத் தொகை கிடைக்கும்" என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல்கள் நடக்கவுள்ளன. ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசு, தற்போதைய ஓய்வூதிய முறையை மறுபரிசீலனை செய்ய டி.வி.சோமநாதன் தலைமையில் ஒரு குழுவை இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமைத்தது.
மாற்றப்பட்ட ஓய்வூதியத் திட்டம் சந்தை வருமானத்துடன் தொடர்ந்து இணைக்கப்படும். ஆனால் ஊழியர்கள் கடைசியாக பெற்ற சம்பளத்தில் குறைந்தபட்சம் 40% வழங்குவதற்கு அரசாங்கம் ஒரு முறையை உருவாக்கக்கூடும். இறுதியில், அடிப்படைத் தொகை எதுவாக இருந்தாலும், கொடுப்பனவுகள் குறைவாக இருந்தால், ஓய்வூதியத்தில் உள்ள பற்றாக்குறையை சரிசெய்ய அரசாங்கம் தலையிட வேண்டும் என்பதே இதன் பொருள். தற்போது, பணியாளர்கள் சராசரியாக 36%-38% வரை வருமானம் ஈட்டுகின்றனர்.
பழைய ஓய்வூதியத் திட்டம் நிதி ரீதியாகத் மாநிலங்களால் தாங்க முடியாத ஒரு திட்டம் என்றும் இது மாநில அரசாங்கங்களின் கடன்களை அதிகரிக்கலாம் என்றும் நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான பாரத ஸ்டேட் வங்கியின் குழு தலைமைப் பொருளாதார ஆலோசகர் சௌமியா காந்தி கோஷ் தெரிவித்துள்ளார். 2023-24ல், இந்தியாவின் மத்திய ஓய்வூதிய பட்ஜெட் ரூ.2.34 லட்சம் கோடியாக இருந்தது.
பல மாநிலங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசியல் ரீதியாக கவர்ச்சிகரமானதாக ஆக்குவது என்னவென்றால், அது ஓய்வு பெற்றவருக்கு ஒரு உறுதியான பலனை வழங்குகிறது. இதில் கடைசியாக பெறப்பட்ட அடிப்படை ஊதியத்தில் 50% ஓய்வூதியமாக வழங்கப்படும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களின் சம்பளத்தைப் போலவே, பணவீக்கத்தின் அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, பழைய திட்டத்தின் கீழ் ஓய்வூதியங்களிலும் அவ்வப்போது அகவிலைப்படி அதிகரிப்புகள் ஏற்படுகின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ