Income Tax 2.0 Portal: புதிய வரி செலுத்தும் முறை மற்றும் மொபைல் செயலி அதன் மேம்பட்ட மின்-தாக்கல் இணையதளத்தில் இன்று முதல் (ஜூன் 18, வெள்ளிக்கிழமை) செயல்படுத்தப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய நேரடி வரி வாரியம் (CBDT) முன்னதாக ஒரு அறிக்கையில் இதை தெரிவித்திருந்தது. “வரி செலுத்துவோர் (Tax Payers) சிரமப்படுவதைத் தவிர்ப்பதற்காக அட்வான்ஸ் வரி தவணை தேதிக்குப் பிறகு, புதிய வரி செலுத்தும் முறை 2021 ஜூன் 18 அன்று தொடங்கப்படும். வரி செலுத்துவோர் பல்வேறு அம்சங்களை அறிந்துகொள்ள ஏதுவாக மொபைல் செயலியும் போர்ட்டலின் ஆரம்ப வெளியீட்டிற்குப் பின்னர் வெளியிடப்படும். ” என்று தெரிவிக்கப்பட்டது.


வருமான வரி அறிக்கையை தாக்கல் (ITR Filing) செய்வதற்கான செயல்முறை இப்போது இன்னும் வசதியாகி விடும். ஒருவர் தன்னுடைய மொபைல் போனின் மூலமே வருமான வரி தாக்கல் செய்யும் செயல்முறையை செய்து முடிக்கலாம். 


இந்தியாவின் வருமான வரித் துறை தனது ட்விட்டர் கணக்கு மூலம் இந்த புதிய வளர்ச்சியைப் பற்றி முன்னதாக அறிவித்தது. வருமான வரி மின்-தாக்கல் போர்டல் 2.0 ஒரு புதிய மொபைல் செயலியையும் கொண்டிருக்கும் என்று முன்னர் வருமான வரித் துறை அறிவித்திருந்தது.


ALSO READ:New I-T e-filing portal: பல அம்சங்கள் செயல்படவில்லை; பயனர்கள் அவதி


புதிய ஐடிஆர் இ-ஃபைலிங் போர்ட்டலுடன், மொபைல் ஆப் வசதியும் ஜூன் 7, 2021 அன்று தொடங்கப்பட்டது


தொலைபேசிகள் பரவலாகப் பயன்படுத்தப்படுவதால், புதிய ஐடி ரிட்டர்ன் இ-ஃபைலிங் போர்ட்டல் மற்றும் புதிய மொபைல் செயலி ஆகியவை வரி செலுத்துவோருக்குப் பயன்படுத்த எளிதாக இருக்கும் என்று வருமான வரித்துறை கூறியுள்ளது. ஐடிஆர் படிவம், முன் நிரப்பப்பட்ட வருமான வரி விவரங்கள், சரல் வருமான வரி வசதி, ரீஃபண்ட் கிளெயிம் மற்றும் பிற வசதிகள் போன்ற தகவல்களை சேகரிக்க வரி செலுத்துவோருக்கு இது உதவும்.


மொபைல் செயலியில் பல அம்சங்கள் உள்ளன. இதில் உங்களுக்கு அருகிலுள்ள வரி வருவாய் தயாரிப்பாளரைக் கண்டறிய உதவி கிடைக்கும். உங்களுடைய வரிகளைக் கணக்கிடுவதற்கான உதவி கருவிகள் கிடைக்கும். ஆஸ்க் இட் என்ற ஒரு சேட் பாக்சும் (ASK IT - A ChatBot) இதில் உள்ளது. மேலும் டேக்ஸ் கியான் என்ற ஒரு விளையாட்டும்  (Tax Gyaan - A Game), இன்னும் பல அம்சங்களும் இதில் உள்ளன.   


இந்த மொபைல் செயலியை எப்படி நிறுவுவது


- +91 - 7306 52 52 52 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்ட் கால் கொடுக்கவும்


- வருமான வரித்துறை (Income Tax Department) உங்களது மொபைல் போனுக்கு நிறுவல் இணைப்பை (installation link ) எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பும். 


போர்ட்டலில் இருந்து இதை எவ்வாறு நிறுவுவது


- https://www.incometaxindia.gov.in என்ற புதிய வருமான வரி மின்-தாக்கல் போர்டல் 2.0 ஐக்கு செல்லவும் 


- வரி செலுத்துவோர் சேவைகளில் (Taxpayer Services) கிளிக் செய்யவும்.


ALSO READ:Digital signature certificate என்றால் என்ன? எப்படி பெறுவது? என்ன முக்கியத்துவம்?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR