Indian Railways Discount Ticket: இந்தியாவில் ரயில்வே நெட்வொர்க் மிகவும் பெரியது. தினமும் இதில் கோடிக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் விமானம் டாக்ஸி போன்று போக்குவரத்து வசதிகளை விட ரயிலில் பயணிப்பது மக்களுக்கு சவுகரியம் என்பது தான். இரண்டாவது காரணம் ரயில் கட்டணம் குறைவு, அதுமட்டுமின்றி ரயிலில் பயணிப்பது மிகவும் பாதுகாப்பானது, அதனுடன் வேகமாகவும் இதில் பயணிக்க முடியும். அதேசமயம் பேருந்துகளில் இல்லாத பல வசதிகள் ரயில்களில் உள்ளன. அந்த வகையில் தற்போது இந்திய ரயில்வேயில் தினம்தோறும் கோடிக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர். அதிலும் சில பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத்தில் ரயில்வே தள்ளுபடியை வழங்கி வருகின்றது. ஆனால் இந்த வசதி யாருக்கு கிடைக்கும், எந்த பிரிவில் எத்தனை சலுகை வழங்கப்படும் என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெனரல், ஸ்லீப்பர் மற்றும் மூன்றாவது ஏசியில் 75% வரை தள்ளுபடி:
இந்நிலையில் தற்போது மாற்றுத்திறனாளிகள், மனநலம் குன்றியவர்கள் மற்றும் முற்றிலும் பார்வையற்றோர் உதவியின்றி ரயிலில் பயணிக்க முடியாத பயணிகளுக்கு ரயில் டிக்கெட்டுகளில் தற்போது தள்ளுபடி வழங்கப்படும். அத்தகைய பயணிகளுக்கு பொதுவாக, ஸ்லீப்பர் மற்றும் மூன்றாம் வகை ஏசியில் 75 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும். அதேசமயம் இரண்டாவது மற்றும் முதல் வகை ஏசியில் 50 சதவீதம் வரை டிக்கெட்டில் தள்ளுபடி வழங்கப்படும். அத்தகைய நபருடன் செல்லும் எஸ்கார்ட் ரயில் டிக்கெட்டுகளில் (IRCTC) அதே தள்ளுபடியைப் பெறுவார்கள். செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடு
உள்ளவர்களுக்கு ரயில் டிக்கெட்டில் 50 சதவீதம் சலுகை வழங்கப்படும். அத்தகைய நபருடன் செல்லும் எஸ்கார்ட் ரயில் டிக்கெட்டுகளில் அதே தள்ளுபடியைப் பெறுவார்கள்.


அதேசமயம் இந்த பயணிகள் ராஜ்தானி மற்றும் சதாப்தி போன்ற ரயில்களில் பயணம் செய்தால், அனைத்து வகையான டிக்கெட்டுகளிலும் 25% தள்ளுபடியை பெறுவார்கள். 


மேலும் படிக்க | Income tax notice: இந்த வழிகளில் பண பரிமாற்றம் செய்தால் வருமான வரி நோட்டீஸ் வரும் ஜாக்கிரதை


இந்த பயணிகளுக்கு ரயில் டிக்கெட் விலையில் தள்ளுபடி கிடைக்கும்:
மறுபுறம் புற்றுநோய், தலசீமியா, இதய நோயாளிகள், சிறுநீரக நோயாளிகள், ஹீமோபிலியா நோயாளிகள், காசநோயாளிகள், எய்ட்ஸ் நோயாளிகள், ஆஸ்டோமி நோயாளிகள், இரத்த சோகை, அப்லாஸ்டிக் அனீமியா நோயாளிகளுக்கும் ரயில்வே டிக்கெட்டில் (Indian Railway Ticket Concession) தள்ளுபடி வழங்கப்படும்.


அதேபோல் ரயிலில் பயணம் செய்யும் மாணவர்கள், போர் விதவைகள், IPKF இன் விதவைகள், கார்கில் தியாகிகளின் விதவைகள், பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் கொல்லப்பட்ட பாதுகாப்பு வீரர்களின் விதவைகள், தேசிய விருது பெற்ற ஆசிரியர்கள், தொழிலாளர் விருது பெற்ற தொழில்துறை தொழிலாளர்களுக்கு கிடைக்கும். பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் வீரமரணம் அடைந்த காவலர்கள். போலீஸ் அதிகாரிகளின் விதவைகள், போலீஸ் பதக்கம் வென்றவர்கள், துரோணாச்சார்யா விருது பெற்ற பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்கள் போன்றவர்களுக்கும் விதிகளின்படி ரயில் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது.


அதனுடன் கலைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் 50% முதல் 75% சலுகை பெறலாம். அலோபதி மருத்துவர்கள் ராஜ்தானி / சதாப்தி/ ஜன் சதாப்தி ரயில்களின் அனைத்து வகுப்புகளிலும் 10% சலுகை பெறலாம். செவிலியர்கள் 25% சலுகைக் கட்டணத்தில் பயணிக்கலாம். இந்த தள்ளுபடி அடிப்படைக் கட்டணத்தில் மட்டுமே கிடைக்கும், மற்ற வசதிகளில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | Mutual Fund: SIP: பரஸ்பர நிதியத்தில் முதலீடு... ‘இந்த’ தவறுகளை செய்யாதீங்க..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ