மூத்த குடிமக்களுக்கு அடிச்சது செம ஜாக்பாட்.. ரயில்வே டூர் அப்டேட் இதோ

IRCTC Tour Package: ஷீரடி சாய்பாபா கோவிலுடன் ஜோதிர்லிங்கத்தை தரிசிக்க விரும்பினால் இதற்காக IRCTC இன் சிறப்பு சுற்றுலா பேக்கேஜைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 7, 2024, 03:12 PM IST
  • சுற்றுலாப் பேக்கேஜுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.
  • IRCTC இணையதளமான irctctourism.com ஐப் பார்வையிடலாம்.
  • இந்த இடங்களை பார்வையிடும் வாய்ப்பை பெறுவீர்கள்.
மூத்த குடிமக்களுக்கு அடிச்சது செம ஜாக்பாட்.. ரயில்வே டூர் அப்டேட் இதோ title=

IRCTC Tour Package: இந்திய ரயில்வேயின் நிறுவனமான IRCTC, பல சுற்றுலாத் தலங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களைப் பார்வையிடும் வாய்ப்பை வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்தத் தொடரில், இப்போது ஷீரடி சாய்பாபா கோவிலுடன் இணைந்து ஜோதிர்லிங்கங்களை தரிசனம் செய்வதற்கான பேக்கேஜை IRCTC அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பேக்கேஜில், பாரத் கௌரவ் டூரிஸ்ட் ரயிலில் (Bharat Gaurav Tourist Train) பயணிக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இந்த பேக்கேஜில் ஒரு நபருக்கான கட்டணமாக வெறும் ரூ.20,899 செலுத்தினால் போதும்.

இந்த ஆன்மிக ரயில் பயணம் அடுத்த மாதம் ஜூன் 10 ஆம் தேதி பீகாரில் உள்ள பெட்டியாவில் தொடங்கி ஜூன் 20 ஆம் தேதி பெட்டியாவுக்குத் திரும்பும். இந்த டூர் பேக்கேஜ் 10 இரவுகள் மற்றும் 11 பகல்கள் கொண்டது. பெட்டியா ரயில் நிலையத்தைத் தவிர, சகௌலி, ரக்சால், சீதாமர்ஹி, சமஸ்திபூர், முசாபர்பூர், ஹாஜிபூர், பாட்லிபுத்ரா, அர்ரா, பக்சர், தில்தார்நகர் மற்றும் தீன் தயாள் உபாத்யாய் நிலையங்களில் இருந்து பயணிகள் ஏறலாம்/இறங்கலாம். அதுமட்டுமின்றி IRCTC இணையதளமான irctctourism.com ஐப் பார்வையிடுவதன் மூலம் பயணிகள் இந்த சுற்றுலாப் பேக்கேஜுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க | Loan Balance Transfer: உங்கள் கடனை வேறொரு வங்கிக்கு மாற்ற வேண்டும் என நினைத்தால், இதை கண்டிப்பாக தெரிந்துக்கொள்ளுங்கள்

டூர் பேக்கேஜின் சிறப்பு அம்சங்கள் | Highlights of the tour package:டூர் பேக்கேஜின் சிறப்பு அம்சங்கள் | Highlights of the tour package:
பேக்கேஜ் பெயர்- பாரத் கௌரவ் ஷிர்டி & ஜோதிர்லிங்க யாத்ரா எக்ஸ் பெட்டியா (EZBG17) [Bharat Gaurav  Shirdi & Jyotirlinga Yatra Ex Bettiah (EZBG17)].
சுற்றுப்பயணம் - 11 பகல் /10 இரவுகள்
சுற்றுப்பயணம் தேதி: 10.06.2024 முதல் 20.06.2024 வரை
பயண முறை- பாரத் கௌரவ் சுற்றுலா ரயில்
உணவுத் திட்டம் - காலை தேநீர், காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு
புறப்படும் தேதி- ஜூன் 10, 2024
இருக்கைகளின் எண்ணிக்கை- 820

 

இந்த இடங்களை பார்வையிடும் வாய்ப்பை பெறுவீர்கள் | Destinations and visits covered :
உஜ்ஜைன்: ஓங்காரேஸ்வரர் ஜோதிர்லிங்கம், மகாகாலேஸ்வரர் ஜோதிர்லிங்கம்
சோமநாத்: சோம்நாத் ஜோதிர்லிங்கம்
துவாரகா: துவாரகாதீசர் கோயில் மற்றும் நாகேஸ்வரர் ஜோதிர்லிங்கம்
 ஷீரடி: சாயி தரிசனம், ஷனி ஷிங்னாபூர் கோவில்
நாசிக்: திரிம்பகேஸ்வரர் ஜோதிர்லிங்கம்

TOUR PRICE (Per person price in Indian Rupees inclusive of GST): 

Category

Per pax package cost

Economy

Rs. 20899/-

மேலும் படிக்க | IRCTC Singapore -Malaysia Tour Package: குறைந்த செலவில் சிங்கப்பூர் - மலேஷியா டூர் போகலாம்... அசத்தலான IRCTC பேக்கேஜ்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News