Income Tax Notice: இன்றைய காலகட்டத்தில் அனைவரிடமும் வங்கிக்கணக்கு உள்ளது. வங்கித் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள, சம்பள வர்க்கத்தினர், வணிகர்கள் என அனைத்து தரப்பு மக்களும் ஒரு சேமிப்பை கணக்கையாவது வைத்துக்கொண்டுள்ளனர். பெரும்பாலும் நிலையான வருமானம் உள்ள அனைவரும் சேமிப்பு கணக்கை துவங்குகிறார்கள். ஏனெனில், இதில் அவர்களுக்கு வட்டியும் கிடைக்கின்றது. எனினும் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் நபர்களுக்கென்று சில விதிகள் உள்ளன. இவற்றை மீறினால் வருமான வரித்துறையின் கவனம் நம் மீது திரும்பக்கூடும்.
வருமான வரி செலுத்தும் அனைவரும் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். சில வருமான வரி விதிகளை பற்றி வரி செலுத்துவோர் தெரிந்து வைத்திருப்பது மிக அவசியமாகும். குறிப்பாக, ரொக்கத்தில் கொடுக்கல் வாங்கலில் அவ்வப்போது ஈடுபடும் நபர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், உங்களுக்கு வருமான வரி நோட்டீஸ் வர வாய்ப்புள்ளது. வருமான வரித்துறை (Income Tax Department) நோட்டீஸ் அனுப்பக்கூடிய ஐந்து முக்கியமான பரிவர்த்தனைகளை பற்றி வரி செலுத்துவோர் (Taxpayers) தெரிந்துகொள்ள வேண்டியது மிக அவசியமாகும். இவற்றை குறித்து கேட்க வருமான வரித்துறை உங்களை விசாரணைக்கும் அழைக்கலாம். இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
வங்கியில் 10 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக டெபாசிட் செய்தால் நோட்டீஸ் வரலாம்
CBDT விதிகளின்படி, ஒரு நிதியாண்டில் ஒருவர் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தால், அதை வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டியது அவசியமாகும். ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளில் (Bank Account) ரூ.10 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால், வருமான வரி நோட்டீஸ் வரலாம்.
எஃப்டியில் 10 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டால்
ஒரே நிதியாண்டில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட FDகளில் ரூ.10 லட்சம் பணத்தை டெபாசிட் செய்தால், நோடீஸ் வரக்கூடும். இதில் வருமான வரித்துறை பணத்தின் ஆதாரத்தை வெளியிட நோட்டீஸ் அனுப்புகிறது. ஆகையால், பிக்சட் டெபாடிட்டில் (Fixed Deposit) பெரும்பாலான தொகையை காசோலை மூலம் டெபாசிட் செய்வது நல்லது.
மேலும் படிக்க | SIP: பரஸ்பர நிதியத்தில் முதலீடு... ‘இந்த’ தவறுகளை செய்யாதீங்க..!!
ரொக்கமாக கொடுத்து சொத்து அல்லது மியூசுவல் ஃபண்டுகளை வாங்கினால்
சொத்து வாங்க ரூ.30 லட்சம் அல்லது அதற்கு மேல் பண பரிவர்த்தனை நடந்தால், சொத்து பதிவாளர் வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வருமான வரித்துறை உங்கள் பணத்திற்கான மூலத்தை பற்றி கேட்கக்கூடும். நீங்கள் மியூச்சுவல் ஃபண்டுகள் (Mutual Funds), பத்திரங்கள் அல்லது கடன் பத்திரங்களை ரொக்கமாகச் செலுத்தி வாங்கினாலும், உங்களிடம் கேள்விகள் கேட்கப்படலாம்.
கிரெடிட் கார்டு கட்டணம் செலுத்த ரூ.1 லட்சத்திற்கு மேல் ரொக்கமாக கட்டினால்
ஒரு வருடத்தில் ரூ.1 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட கிரெடிட் கார்டு பில் தொகையை ரொக்கமாக செலுத்தினால், அந்த பணம் எங்கிருந்து வந்தது என வருமான வரித்துறை கேள்வி எழுப்பலாம். இது தவிர, கிரெடிட் கார்டு பில் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேல் செலுத்தினாலும், அந்த தொகை வந்ததன் மூலத்தை பற்றி வருமான வரித்துறையினர் கேள்வி எழுப்பலாம்.
மேலும் படிக்க | பெண்களை தொழில் முனைவோராக மாற்றும் சூப்பர் ஐடியாக்கள்! கை நிறைய சம்பாதிக்கலாம்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ