EPFO Update: இபிஎஃப் உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு சில முக்கிய அப்டேட்கள் வந்துள்ளன. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா இபிஎஃப்ஓ குறித்த சில அப்டேட்களை வழங்கியுள்ளார். அவற்றை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

EPF Subscribers: இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு அதிகரிக்கும் வசதிகள்


இந்த ஆண்டு மே-ஜூன் மாதத்திற்குள் இபிஎஃப்ஓ சந்தாதாரர்களுக்கு ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) மொபைல் செயலி (Mobile App) மற்றும் டெபிட் கார்டு (Debit Card) வசதியை வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.


EPFO ​​2.0: ஜனவரி இறுதிக்குள் பணிகள் முடிவடையும்


முழு தகவல் தொழில்நுட்ப அமைப்பையும் மேம்படுத்தும் EPFO ​​2.0 இன் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், ஜனவரி இறுதிக்குள் இது முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் மத்திய அமைச்சர் கூறினார். 


EPFO ​​3.0: எப்போது அறிமுகம்?


EPFO ​​2.0 -ஐத் தொடர்ந்து, EPFO ​​3.0 செயலி மே-ஜூன் மாதத்திற்குள் அறிமுகப்படுத்தப்படும். இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) இந்த செயலி மூலம் வங்கி வசதிகளைப் பெறுவார்கள். இதன் மூலம் முழு அமைப்பும் மையப்படுத்தப்பட்டு. க்ளைம் செட்டில்மென்ட் செயல்முறை மிகவும் எளிதாகிவிடும் என்பது இதன் தனிச்சிறப்பாகும். 


Reserve Bank of India: நிதி அமைச்சகத்துக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையில் பேச்சுவார்த்தை


EPFO ​​3.0 மூலம் சந்தாதாரர்களுக்கு வங்கி போன்ற வசதிகளை வழங்க ரிசர்வ் வங்கிக்கும் நிதி அமைச்சகத்திற்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தொழிலாளர் அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது அமலுக்கு வந்தவுடன், இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு டெபிட் கார்டுகள் கிடைக்கும். இதன் மூலம்  ஏடிஎம் -இல் இருந்து இபிஎஃப் தொகையை (EPF Amount) எடுக்க முடியும்.


மேலும் படிக்க | SIP: ரூ.10,000 முதலீட்டை ரூ.21 கோடியாக மாற்றிய சூப்பர் மியூச்சுவல் ஃபண்டு இது தான்


PF ATM Card: இந்த கார்ட் மூலம் எவ்வளவு தொகையை எடுக்க முடியும்?


பிஎஃப் ஏடிஎம் கார்டு மூலம் சந்தாதாரர்கள் தங்கள் முழு பங்களிப்புத் தொகையையும் எடுக்க முடியாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 


- இந்த கார்ட் மூலம் எடுக்கப்படும் தொகைக்கு வரம்பு நிறுவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


- எனினும், இந்த வரம்பிற்குள் பணத்தை எடுக்க, முன்பு இருந்ததைப் போல, EPFO ​​இலிருந்து முன் அனுமதி தேவைப்படாது. 
- அரசாங்கத்தின் இந்த முன்முயற்சி, EPFO ​​சந்தாதாரர்களுக்கு பெரிதும் பயனளிக்கும்.


- இபிஎஃப் கணகிலிருந்து (EPF Account) தொகையை எடுக்கும்போது படிவங்களை நிரப்பும்போதும், பிஎஃப் அலுவலகங்களுக்கு செல்வதிலும் சந்தாதாரர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் இனி நீக்கப்படும்.


அதிகரித்த வேலைவாய்ப்புகள்


2014 முதல் 2024 வரை நரேந்திர மோடி ஆட்சிக் காலத்தில் 17.19 கோடி பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். இந்த எண்ணிக்கை UPA அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இருந்த வேலைவாய்ப்பு புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடுகையில் ஆறு மடங்கு அதிகரிப்பைக் குறிக்கிறது.


மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு மத்திய அரசின் 3 முத்தான பரிசுகள்: எப்போது கிடைக்கும்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ