LPG Gas Cylinder: வீட்டிற்கு வெளியே படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் ஐந்து கிலோ எரிவாயு சிலிண்டர்களைப் பயன்படுத்துகிறார்கள். பலருக்கு 14 கிலோ எல்பிஜி சிலிண்டர் தேவைபடுவது இல்லை. அவர்களுக்கு எரிவாயு நிறுவனங்கள் ஐந்து கிலோ சிலிண்டர்களை வழங்குகின்றன. ஐந்து கிலோ எரிவாயு சிலிண்டரை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச்செல்வது மிகவும் எளிதானது. எனவே, மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெரும்பாலும் இந்த ஐந்து கிலோ சிலிண்டரரைப் பயன்படுத்துகின்றனர். ஐந்து கிலோ LPG சிலிண்டர்களும் வீட்டு விநியோக எரிவாயு நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகின்றன. உங்கள் அருகிலுள்ள விநியோகஸ்தரைத் தொடர்புகொள்வதன் மூலம் உங்கள் வீட்டு விநியோகத்தை நீங்கள் செய்யலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

14 கிலோ எல்பிஜி சிலிண்டர் (LPG Cylinder) வாங்க, அடையாள அட்டையுடன் முகவரி ஆதாரத்தையும் காட்ட வேண்டும். ஆனால் உங்கள் அடையாள அட்டையைக் காண்பிப்பதன் மூலம் ஐந்து கிலோ எரிவாயு சிலிண்டரை வாங்க முடியும். இந்த சிலிண்டரின் (Cylinder) விலை ஒவ்வொரு இடத்திற்கு ஏற்ப மாறுபடும்.


ALSO READ | 7 ஆண்டுகளில் இருமடங்கு LPG சிலிண்டர் விலை அதிகரிப்பு!


இந்தியன் ஆயிலின் 5 கிலோ சிலிண்டர் 
இந்தியன் ஆயில் (IOC) 5 கிலோ சிலிண்டருக்கு 'சோட்டு' என்று பெயரிட்டப்பட்டுள்ளது. உங்கள் அடையாள அட்டையைக் காண்பிப்பதன் மூலம் மட்டுமே நீங்கள் இந்த சிலிண்டரை பெற முடியும். 1800-22-4344 என்ற தொலைபேசி எண்ணில் அழைப்பதன் மூலம் 5 கிலோ சிலிண்டர் வீட்டிற்கு டெலிவரி செய்யப்படும். நீங்கள் அதை 2 மணி நேரத்திற்குள் பெறலாம். இதற்காக 25 ரூபாய் டெலிவரி கட்டணம் செலுத்த வேண்டும். இந்த சேவையைப் பெற, நீங்கள் அடையாளத்திற்கான ஆதாரத்தை (POI) வழங்க வேண்டும்.


பாரத் பெட்ரோலியத்துடன் சிலிண்டர்களை எவ்வாறு பெறுவது
பாரத் பெட்ரோலியத்தின் வலைத்தளத்தின்படி, சிறிய சிலிண்டர்களுக்கான ஆர்டரை 24 மணி நேர கட்டணமில்லா எண்ணில் பதிவு செய்யலாம். ஆர்டருக்குப் பிறகு காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை டெலிவரி செய்யப்படும். ஆர்டர் முன்பதிவு செய்த பிறகு, இணைப்பு மற்றும் சிலிண்டர் 2 மணி நேரத்திற்குள் நிரப்பப்பட்டு வாடிக்கையாளரின் வீட்டிற்கு வழங்கப்படும்.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR