Sun Transit in Capricorn: 2025 ஆண்டின் முதல் சூரியப் பெயர்ச்சி ஜனவரி 14ம் தேதியன்று அன்று நிகழும். தனுசு ராசியில் சஞ்சரிக்கும் சூரியன் மகர ராசியில் பெயர்ச்சி ஆகும் போது தமிழ் மாதமாக தை மாதம் பிறக்கும். இந்நிலையில், தை மாத அதிர்ஷ்ட ராசிகளை அறிந்து கொள்வோம்.
தை மாதத்தில் சூரியன் மகர ராசியில் சஞ்சாரம் செய்வதால், தை மாதம் மகர மாதம் என்றழைக்கப்படுகிறது. மேலும், இம்மாதம் செவ்வாய் பெயர்ச்சி, சுக்கிரன் பெயர்ச்சியும் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்நிலையில், தை மாத கிரகபெயர்ச்சிகள் யாருக்கெல்லாம் சாதகமாக இருக்கிறது என பார்க்கலாம்.
சூரியன் பெயர்ச்சி 2025: ஜோதிடத்தில் சூரியன் கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படுகிறார். சூரிய பகவான் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றிக் கொள்கிறார். சூரியன் சஞ்சாரத்தில் தமிழ் மாதம் பிறக்கிறது. சூரியன் மகர ராசியில் சஞ்சாரம் செய்யும் நாளில் தை மதம் பிறக்கிறது.
தை மாத பலன்கள்: தற்போது சூரிய கிரகம் தனுசு ராசியில் உள்ள நிலையில், 2025 ஜனவரி 14ம் தேதியன்று காலை 08:55 மணிக்கு மகர ராசிக்குள் நுழைகிறார். தை மாத பிறப்பான மகர சங்கராந்தியன்று மகரத்தில் நுழையும் சூரியன் பிப்ரவரி 11, 2025 வரை மகர ராசியில் சஞ்சரிப்பார்.
செவ்வாய் பெயர்ச்சி 2025: சூரியனுக்கு பிறகு, ஜனவரி 21, 2025 அன்று செவ்வாய் மிதுன ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். செவ்வாய் வக்ர நிலையில் மிதுனத்தில் நுழைகிறார். ஜோதிடத்தின் படி, வக்ர நிலையில் இருக்கும் கிரகங்கள் மிகவும் வீரியமாக இருக்கும்.
அதிர்ஷ்ட ராசிகள்: சூரியன் பெயர்ச்சி, செவ்வாய் கிரகத்தின் வக்ர நிலை இரண்டும், குறிப்பாக 4 ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். ஆற்றல் மற்றும் உற்சாகத்திற்கு காரணமான கிரகம் செவ்வாய் மற்றும் கிரகங்களின் ராஜாவான சூரியனின் சஞ்சாரம் காரணமாக பலனைப் பெறும் அதிர்ஷ்ட ராசிகளை அறிந்து கொள்ளலாம்.
மேஷம்: சூரியன் மற்றும் செவ்வாய் பெயர்ச்சி காரணமாக மேஷ ராசியினர் முழு ஆற்றலுடன் செயல்படுவார்கள். இது உங்களுக்கு சாதமான பலன்களைத் தரும். கடின உழைப்புக்கு முழு பலன் கிடைக்கும். ஆனால், அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள்.
ரிஷபம்: சூரியன் மற்றும் செவ்வாய் பெயர்ச்சி காரணமாக ரிஷப ராசியினர் அனைத்து வேலைகளையும் விரைந்து முடிப்பார்கள். இந்த காலகட்டத்தில் பணப் பலன்களையும் சுப பலன்களையும் பெறுவீர்கள். ஆனால், பேச்சைக் கொஞ்சம் கட்டுப்படுத்த வேண்டும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மனதிற்கு சந்தோஷம் தரும் நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
துலாம்: சூரியன் மற்றும் செவ்வாய் பெயர்ச்சி காரணமாக துலாம் ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெறுவார்கள். பணியிடத்தில் சிறப்பாக செயல்படுவார்கள். வேலை சம்பந்தமாக பயணம் செய்யும் வாய்ப்பு. அது பயனுள்ளதாக அமையும். பழைய முதலீடுகளிலிருந்து நல்ல இலாபம் கிடைக்கும்.
கும்பம்: சூரியன் மற்றும் செவ்வாய் பெயர்ச்சி காரணமாக கும்ப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்கள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். நீண்ட நாட்களாக குழப்பத்தில் இருந்த உங்கள் காதல் வாழ்க்கை இப்போது சீராகும். மாணவர்களும் இந்த காலகட்டத்தில் சிறப்பாக செயல்படுவார்கள். உத்தியோகம், கல்வி சம்பந்தமான வேலைகளிலும் ஆதாயம் உண்டாகும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.