வங்கி கடன் விதிகளில் மாற்றம்: ரிசர்வ் வங்கி அளித்த முக்கிய அப்டேட் இதோ
RBI on Loans: EMI அல்லது கடன் காலம் அல்லது இரண்டிலும் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், அதன் தகவல் சரியான வழிகள் மூலம் கடன் வாங்குபவர்களுக்கு உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடன் விகிதங்கள்: இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில் EMI அடிப்படையிலான தனிநபர் கடன்களுக்கான ஃப்ளோட்டிங்க் வட்டி விகிதங்களை மீட்டமைக்க புதிய விதிகளை வெளியிட்டது. மத்திய வங்கியின் கூற்றுப்படி, வங்கிகள் மற்றும் NBFCகள் உட்பட அனைத்து ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களும் (REs), பெஞ்ச்மார்க் வட்டி விகிதத்தில் ஏதேனும் மாற்றம் இருந்தால், அது கடனின் EMI, கடன் காலம் அல்லது இரண்டையும் பாதிக்கும் என்பதை கடன்களை வாங்கும் நேரத்தில் கடன் வாங்குபவர்களுக்கு தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்.
ரிசர்வ் வங்கி தெரிவித்தது என்ன?
வட்டி விகிதங்கள் காரணமாக EMI அல்லது கடன் காலம் அல்லது இரண்டிலும் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், அதன் தகவல் சரியான வழிகள் மூலம் கடன் வாங்குபவர்களுக்கு உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தெரிவித்துள்ளது.
ஃப்ளோட்டிங்கில் இருந்து நிலையான விகிதத்திற்கு மாறும்போது என்ன, எவ்வளவு வசூலிக்கப்படும், கடன் பெற்றவர் கடன் காலத்தில் எத்தனை முறை மாறலாம் என்பதை நிதி நிறுவனங்கள் தங்கள் கொள்கையில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது. வட்டி விகிதங்களை மீட்டமைக்கும் நேரத்தில், நிறுவனம் கடன் வாங்குபவர்களுக்கு அவர்களின் குழு-அங்கீகரிக்கப்பட்ட கொள்கையின்படி நிலையான விகிதத்திற்கு மாறுவதற்கான விருப்பத்தை வழங்கும்.
தற்போது இருக்கும் விதிகள்
தற்சமயம், நிதி நிறுவனங்கள் கடன் வாங்குபவர்களிடம், வட்டி விகிதத்தின் அதிகரிப்பு காரணமாக அவர்களின் கடன் காலம் அல்லது EMI நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மட்டுமே கூறுகின்றன. இந்த நேரத்தில், கடன் வாங்குபவர்களுக்கு எந்த விருப்பமும் அளிக்கப்படுவதில்லை. இருப்பினும், ஒருவர் தனது விருப்பப்படி கடன் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய தனிப்பட்ட முறையில் நிதி நிறுவனத்தை அணுகலாம்.
இந்த உத்தரவு ஏன் பிறப்பிக்கப்பட்டது
பல ஆண்டுகளாக, பல இக்கட்டான சூழல்களை நாம் இதில் பார்த்துள்ளோம். எடுத்துக்காட்டாக, ஒருவருக்கு 50 வயதாகி இருக்கும். அவரது கடன் அடுத்த 15 ஆண்டுகளுக்கு நிலுவையில் இருக்கும். இதற்கிடையில் விகிதங்களின் அதிகரிப்பு காரணமாக கடன் காலம் மேலும் 15 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கும். அத்தகைய சூழ்நிலையில், 80 வயதைத் தாண்டிய பிறகும், கடன் என்ற வாள் அவர் மீது தொங்கிக்கொண்டு இருக்கும். ஆனால், ஒருவர் பணம் ஈட்டும் வயது 60 அல்லது அதிகபட்சமாக 65 வயது வரை என கருதப்படுகின்றது. இந்த நிலையில், 80 வயதில் ஒருவர் எப்படி கடனை கட்டுவார்?
வாடிக்கையாளர்கள் கட்டும் EMI வட்டி விகிதத்தின் அதிகரிப்பை ஈடுசெய்யாமல் போகலாம், இதனால் கடன் வாங்கியவரின் நிலை இன்னும் மோசமாவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சபீபத்திய மாற்றத்தின் மூலம், ரிசர்வ் வங்கியின் நோக்கம் இதுபோன்ற குறைபாடுகளை கட்டுப்படுத்துவதாகும்.
மேலும் படிக்க | UPI Lite: பின் நம்பர், இன்டர்நெட் இல்லாமல் இனி இவ்வளவு தொகையை நீங்கள் அனுப்பலாம்!
புதிய விதிகள் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்
புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்படுவதால் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த நேரத்தில் அதிக வட்டி விகிதங்களை தவிர்க்க முடியாது. மேலும், ஃப்ளோட்டிங் விகிதத்திற்குப் பதிலாக நிலையான விகிதக் கடனைத் தேர்ந்தெடுப்பது நல்ல முடிவாகத் தெரியவில்லை. ஏனெனில் இரண்டுக்கும் இடையேயான விலை வித்தியாசம் குறைந்தது 500 அடிப்படை புள்ளிகள் ஆகும்.
எடுத்துக்காட்டாக, டிசம்பர் 2021 இல் வட்டி விகிதங்கள் மிகக் குறைவாக இருந்தபோது, வீட்டுக் கடன்களுக்கான ஃப்லோட்டிங் விகிதம் 6.5 சதவீதத்தில் தொடங்கியது. அந்த நேரத்தில் நிலையான விகிதம் 11-12 சதவீதமாக இருந்தது. எனவே, இந்த அறிவுறுத்தலை நல்ல விகிதங்களில் லாக் செய்வதற்கு மாற்றாகப் பயன்படுத்த முடியாது. மேலும், கடனை மூடுவது ஒரு கடினமான செயல் மற்றும் பல செலவுகளை உள்ளடக்கியது. எனவே, கடன் செலுத்தும் முறையை மாற்றுவதற்கான முடிவு நீண்ட மற்றும் கடினமான செயலாக இருக்கும்.
சிறந்த விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்
நிலுவையில் உள்ள தொகை மற்றும் கடன் காலம் மிக நீண்டதாக இல்லாவிட்டால், கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தும் வகையில் அதிக EMI-களை ஒருவர் செலுத்தலாம். அவருக்கு/அவளுக்கு மாத வருமானத்தில் சிக்கல் இருந்தால், நீண்ட கால விருப்பத்திற்கு செல்வது நல்லது.
மேலும் படிக்க | 60 வயசுக்காரங்களுக்கு குட் நியூஸ்! வங்கி டெபாசிட்களுக்கு 9% வட்டி தரும் வங்கிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ