National Pension Scheme: தேசிய ஓய்வூதிய திட்டமான NPS உறுப்பினர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. NPS -இன் புதிய விதிகள் ஓய்வு பெறும் சந்தாதாரர்களுக்கு அதிக நிவாரணம் அளிக்கும் வகையில் அமையவுள்ளன. ஜூலை மாதம் 23 ஆம் தேதி இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் NPS -இல் சில முக்கிய மாற்றங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகின. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

NPS -இல் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்


பட்ஜெட்டில் மத்திய அரசு என்பிஎஸ் விதிகளில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது. புதிய விதியின்படி, தேசிய ஓய்வூதிய முறையின் கீழ், இப்போது என்பிஎஸ் உறுப்பினர்களின் (NPS Members) நிறுவனங்கள் / முதலாளிகள் ஊழியர்களின் NPS -க்கு பங்களிக்க ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் 14 சதவீதத்தை பங்களிக்க வேண்டும். முன்னதாக இந்த வரம்பு 10 சதவீதமாக இருந்தது. 


அதாவது இப்போது என்பிஎஸ்ஸில் உங்கள் பங்களிப்பு முன்பை விட அதிகரிக்கும். இது கையில் கிடைக்கும் சம்பளத்தில் சிறு தாக்கத்தை ஏற்படுத்தலாம். எனினும், ஓய்வூதியக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். என்பிஎஸ் சந்தாதாரர்களின் (NPS Subscribers) மாதாந்திர ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய நிதி 40 சதவீதம் அதிகரிக்கலாம். பின்வரும் கணக்கீட்டின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். 


NPS Calculator: 14% என்பிஎஸ் பங்களிப்பில் ஓய்வூதியம் மற்றும் கார்பஸுக்கான கால்குலேட்டர்


ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். ஒருவரது வயது 30 என வைத்துக்கொள்வோம். அவரது அடிப்படைச் சம்பளம் ரூ. 35000 எனில், NPS -இன் புதிய விதியின்படி, அவர் ஒவ்வொரு மாதமும் 14 சதவீதம் என்ற விகிதத்தில் NPS -இல் ரூ.4900 செலுத்த வேண்டும். இந்த பங்களிப்பை 60 வயது வரை அதாவது 30 ஆண்டுகள் வரை அவர் செய்தால், என்ன கணக்கீடு என இங்கே காணலாம்.


NPS இல் கணக்கு தொடங்கிய வயது: 30


அடிப்படை சம்பளம்: ரூ.35000


அடிப்படை சம்பளத்தில் 14%: ரூ.4900


NPS இல் மாதாந்திர முதலீடு: ரூ. 4900


முதலீட்டின் மதிப்பிடப்பட்ட வருமானம்: ஆண்டுக்கு 10%


30 ஆண்டுகளில் மொத்த முதலீடு: ரூ.17,64,000


30 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்த கார்பஸ்: ரூ 1,11,68,695


ஆனுவிடி கொள்முதல்: 40%


ஆனுவிடியின் மதிப்பிடப்பட்ட வருமானம்: ஆண்டுக்கு 8%


60 வயதில் மாதாந்திர ஓய்வூதியம்: ரூ.29,783


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ ஹைக்: எவ்வளவு? எப்போது? இதோ விவரம்


NPS Calculator: 14% என்பிஎஸ் பங்களிப்பில் ஓய்வூதியம் மற்றும் கார்பஸுக்கான கால்குலேட்டர்


இதையும் ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்ளலாம். ஒருவரது வயது 30 என வைத்துக்கொள்வோம். அவரது அடிப்படைச் சம்பளம் ரூ. 35000 எனில், NPS -இன் பழைய விதியின்படி, அவர் ஒவ்வொரு மாதமும் 10 சதவீதம் என்ற விகிதத்தில் NPS -இல் ரூ.3500 செலுத்த வேண்டும். இந்த பங்களிப்பை 60 வயது வரை அதாவது 30 ஆண்டுகள் வரை அவர் செய்தால், என்ன கணகீடு என இங்கே காணலாம்.


NPS இல் கணக்கு தொடங்கிய வயது: 30 


அடிப்படை சம்பளம்: ரூ.35000


அடிப்படை சம்பளத்தில் 10%: ரூ..3500


NPS இல் மாதாந்திர முதலீடு: ரூ.3500


முதலீட்டின் மதிப்பிடப்பட்ட வருமானம்: ஆண்டுக்கு 10%


30 ஆண்டுகளில் மொத்த முதலீடு: ரூ.12,60,000


30 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்த கார்பஸ்: ரூ.79,77,639


ஆனுவிடி கொள்முதல்: 40%


ஆனுவிடியில் மதிப்பிடப்பட்ட வருமானம்: ஆண்டுக்கு 8%


60 வயதில் மாதாந்திர ஓய்வூதியம்: ரூ.21,274


ஓய்வூதியம் மற்றும் கார்பஸில் எவ்வளவு வித்தியாசம்?


- இரண்டு வழியிலும், ஓய்வூதியம், மாதம் ரூ.21274 -இலிருந்து ரூ.29783 ஆக அதிகரிக்கிறது. அதாவது, புதிய விதிகளின்படி, ஊழியர்களின் ஓய்வூதியம் 40 சதவீதம் அதிகரித்துள்ளது.


- அதேபோல், ஓய்வு பெறும்போது பெறப்படும் மொத்தத் தொகையும் ரூ.47.86 லட்சத்தில் இருந்து ரூ.67 லட்சமாக உயர்கிறது. அதாவது மொத்தத்தொகையிலும் சுமார் 40 சதவீதம் அதிகரிப்பு இருக்கிறது. 


மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு முக்கிய அப்டேட்: மீண்டும் ரயில் டிக்கெட் கட்டணத்தில் சலுகையா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ