கிராஜுவிட்டி மற்றும் ஓய்வூதிய விதி: அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை, அதாவது கிராஜுவிட்டி தொடர்பான விதி அரசாங்கத்தால் மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தின் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசாங்கத்தின் இந்த எச்சரிக்கையை ஊழியர்கள் புறக்கணித்தால், அது அவர்களுக்கு மிகவும் கடுமையானதாக இருக்கும். அந்தவகையில் தற்போது இந்த விதிகளில் மோடி அரசு சார்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த மார்ச் 2023 ஆம் ஆண்டில் அரசாங்கத்தால் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாத அகவிலைப்படி அறிவிக்கப்பட்டது. அதன் நிலுவைத் தொகை கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது. இப்போது அகவிலைப்படி உயர்வு செப்டம்பர் அல்லது அக்டோபரில் மீண்டும் அரசால் அறிவிக்கப்படும். ஆனால், இதயனிடையே தற்போது அரசாங்கத்தால் ஒரு அரசாணை வெளியிடப்பட்டது. அதில் ஊழியர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பணியிடத்தில் பணிபுரியும் பணியாளர்கள் அலட்சியமாக இருப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதன் கீழ் அவர்களது ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை நிறுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிராஜுவிட்டி மற்றும் ஓய்வூதியம் நிறுத்தப்படும்
இந்த நிலையில் இனி பணியிடத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் அலட்சியமாக செயல்பட்டால், அவர்களது ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை நிறுத்தப்படும். தற்போது இந்த உத்தரவு மத்திய அரசின் அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தும். ஆனால் இனி வரும் காலங்களின், கூடிய விரைவில் மாநில அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்தப்படலாம்.


மேலும் படிக்க | செபி உத்தரவு: ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் தலைவரின் அதிகாரப்பூர்வ அறிக்கை


புதிய விதிகள் சேர்க்கப்பட்டன
மத்திய சிவில் சேவைகள் (ஓய்வூதியம்) விதிகள் 2021 இன் கீழ், அரசாங்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. மத்திய ஊழியர் பணியின் போது ஏதேனும் கடுமையான குற்றம் அல்லது அலட்சியம் செய்தது தெரியவந்தால், பணி ஓய்வுக்குப் பிறகு, அவரது கிராஜுவிட்டி மற்றும் ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் தவறு செய்த ஊழியர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


யார் நடவடிக்கை எடுப்பார்கள்
* ஓய்வுபெற்ற பணியாளரின் அப்பாயிண்ட்மெண்ட் அதாரிடியில் பங்குகொண்டிருந்த பிரெசிடெண்ட்டுக்கு இந்த உரிமை வழங்கப்பட்டுள்ளது.
* சம்பந்தப்பட்ட அமைச்சகம் அல்லது துறையுடன் தொடர்புடையவர்கள், அதன் கீழ் ஓய்வுபெறும் ஊழியர் நியமிக்கப்பட்டுள்ளார்.
* ஒரு ஊழியர் தணிக்கை மற்றும் கணக்குத் துறையில் இருந்து ஓய்வு பெற்றிருந்தால், குற்றவாளி ஊழியர்களின் ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையை நிறுத்தி வைக்க சிஏஜிக்கு உரிமை உண்டு.


எப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
* இந்த விதியின்படி, இந்த ஊழியர்கள் தங்கள் சேவையின் போது ஏதேனும் துறை அல்லது நீதித்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், அது குறித்த தகவல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்க வேண்டியது அவசியம்.
* ஒரு ஊழியர் ஓய்வு பெற்ற பிறகு மீண்டும் நியமிக்கப்பட்டால், அவருக்கும் அதே விதிகள் பொருந்தும்.
* ஒரு ஊழியர் ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையை செலுத்தியிருந்தால். இதற்குப் பிறகு, அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவரிடமிருந்து முழு அல்லது பகுதியளவு ஓய்வூதியம் அல்லது பணிக்கொடையை திரும்பப் பெறப்படலாம்.
* அதிகாரம் விரும்பினால், பணியாளரின் ஓய்வூதியம் அல்லது பணிக்கொடையை நிரந்தரமாக அல்லது சிறிது காலத்திற்கு நிறுத்தலாம்.


மேலும் படிக்க | வீட்டு கடன் பெற வேண்டுமா? இந்த வழிகளில் எளிமையாக பெறலாம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ