அரசு வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு அதிர்ச்சி, உடனே படிக்கவும்
Punjab National Bank: உங்களுக்கும் அரசு வங்கியில் கணக்கு இருந்தால், ஆகஸ்ட் 31க்கு பிறகு பணப் பரிவர்த்தனை செய்ய முடியாது. இதுகுறித்து பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB Customer) வாடிக்கையாளர்களுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி: நாட்டின் அரசு (Government Bank) வங்கி ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. உங்களுக்கும் அரசு வங்கியில் கணக்கு இருந்தால், ஆகஸ்ட் 31க்கு பிறகு பணப் பரிவர்த்தனை செய்ய முடியாது. ஆம்... இது குறித்து பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு (PNB Customer) நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. நாடு முழுவதும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின் கணக்குகளை பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) கொண்டுள்ளது. இதுவரை KYC விவரங்களை (KYC Details) புதுப்பிக்காத அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வங்கி ஒரு முக்கிய அப்டேட்டை வழங்கியுள்ளது. மேலும் இவர்கள் அனைவருக்கும் வங்கி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது.
ஆகஸ்ட் 31 வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது
இந்நிலையில் KYC அப்டேட் செய்வதற்கான காலக்கெடுவை தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கி வழங்கியுள்ளது. அதன்படி வருகிற ஆகஸ்ட் 31, 2023க்குள் இந்தப் பணியை வாடிக்கையாளர்கள் முடிக்க வேண்டும். குறிப்பிட்ட தேதிக்குள் இந்தப் பணியை முடிக்காத வாடிக்கையாளர்கள் வங்கிப் பரிவர்த்தனைகளில் சிக்கலைச் சந்திக்க நேரிடும்.
மேலும் படிக்க | மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: இவர்களுக்கு பழைய ஓய்வூதியம்... வந்தது உத்தரவு
இதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் 2ம் தேதி வெளியிடப்பட்டது
இது தொடர்பாக லாடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி, 2023 அன்று பஞ்சாப் நேஷனல் வங்கி தகவல் ஒன்றை வெளியிட்டது. அதில், KYC புதுப்பிக்கப்படாத (KYC Update) அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், அவர்களின் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு வங்கியால் நோட்டீஸ் அனுப்பப்படும் என்று கூறிபபட்டுள்ளது. இதனுடன், அவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு செய்தியும் அனுப்பப்படும். மேலும் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி ஆகஸ்ட் 31, 2023க்கு முன் தங்கள் KYC தகவலை புதுப்பிக்குமாறு வங்கி தனது வாடிக்கையாளர்களை வலியுறுத்தியுள்ளது.
ரிசர்வ் வங்கி இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வழங்கிய அறிவுறுத்தல்களின்படி, அனைத்து வாடிக்கையாளர்களும் KYC ஐ புதுப்பிக்க வேண்டியது கட்டாயம் ஆகும். ஜூலை 31 வரை உங்கள் KYC ஐ நீங்கள் புதுப்பிக்கவில்லை என்றால், வங்கிக்குச் சென்று இந்த வேலையைச் செய்துகொள்ளலாம். இது தவிர, KYC ஐ வங்கியின் இணையதளம் மூலமாகவும் புதுப்பிக்க முடியும்.
இதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்
கேஒய்சியைப் புதுப்பிக்க வாடிக்கையாளர்களுக்கு அடையாள அட்டை, முகவரிச் சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், பான் கார்டு, வருமானச் சான்றிதழ் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் ஆகியவை தேவைப்படும். இது தவிர, இந்த விவரங்களில் மாற்றம் இல்லை என்றால், நீங்கள் வங்கியில் சுய அறிவிப்பை வழங்க வேண்டும்.
KYC நிலையை இப்படி சரிபார்க்கவும்
>> இதற்கு நீங்கள் ஆன்லைன் பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) இணையதளத்தில் சான்றுகளுடன் உள்நுழைய வேண்டும்.
>> Individual Settings சென்று KYC Status என்பதைக் கிளிக் செய்யவும்.
>> உங்கள் KYC ஐ நீங்கள் புதுப்பிக்க வேண்டும் என்றால், அதன் விவரம் திரையில் தோன்றும்.
PNB KYC: மொபைல் மூலம் e-KYC
மொபைல் மூலம் e-KYC ஐ செய்து முடிக்க, வாடிக்கையாளர் IBS/PNB ONE module பயன்படுத்தி, அவர்களின் தற்போதைய முகவரி, ஆண்டு வருமானம் மற்றும் வருடாந்திர வருவாய் மற்றும் OTP அடிப்படையிலான ஆதார் அங்கீகாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய சுய-அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.
வாடிக்கையாளர்கள் ஐடி அல்லது முகவரியில் எந்த மாற்றமும் இல்லை போன்ற சுய அறிவிப்பைச் சமர்ப்பிப்பதன் மூலம் PNB இன் எந்த கிளையிலும் தங்கள் KYC ஐப் புதுப்பிக்கலாம்.
மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அப்டேட்... இனி ஓய்வூதியம் எக்குத்தப்பாக உயரும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ