இந்திய ரயில்வேயின் புதிய கால அட்டவணை: இந்திய இரயில்வே நாட்டிற்குள் பயணம் செய்வதற்கான எளிய, விரைவான மற்றும் செலவு குறைந்த வழியை வழங்குகிறது. மேலும் ஆயிரக்கணக்கான பயணிகள் நீண்ட தூரத்தை கடக்க ரயிலில் பயணம் செய்கிறார்கள். அந்த வகையில் நீங்களும் அடிக்கடி  இரயில் பயணம் மேற்கொள்ளும் நபரா? அப்படியென்றால், இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் தற்போது ரயில்வே துறை ஒரு பெரிய முக்கிய மாற்றத்தை செய்ய திட்டமிட்டுள்ளது. அந்தவகையில் இனி வரும் நாட்களில் டெல்லி, பஞ்சாபிலிருந்து கேரளாவுக்குச் செல்ல உங்களுக்கு ஏதேனும் திட்டம் இருந்தால், இந்த செய்தியை உடனடியாக தெரிந்துக்கொள்ளுங்கள், ஏனெனில் தற்போது மீண்டும் பல ரயில்களின் நேரத்தை ரயில்வே மாற்றியுள்ளது. இந்த மாற்றம் டெல்லியில் இருந்து கேரளா செல்லும் பல ரயில்களின் ஏற்பட்டுள்ளது. எனவே பயணிகள் தங்களின் பயணத்தை மேற்கொள்ளும் முன் இந்த செய்தியை கட்டாயம் ஒரு முறை படிக்கவும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜூன் 10 முதல் புதிய அட்டவணை அமலுக்கு வருகிறது


இந்த நிலையில் இது தொடர்பாக தகவல் அளித்த இந்திய ரயில்வே, ரயில்களின் அட்டவணையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் வருகிற ஜூன் 10, 2023 முதல் அக்டோபர் 31, 2023 வரை பொருந்தும் என்று தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க | FD பணம் போடுவதை விட அதிக லாபத்தை கொடுக்கும் அரசு திட்டங்கள் - முழு விவரம்


* ரயில் எண் 12617 - எர்ணாகுளம் ஜங்ஷன் - ஹஸ்ரத் நிஜாமுதீன் டைனிக் மங்களா லட்சத்தீவு எக்ஸ்பிரஸின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இப்போது இந்த ரயில் அதன் நேரத்திற்கு 3.15 மணி நேரத்திற்கு முன் புறப்படும். அதேபோல் எர்ணாகுளத்தில் இருந்து 10.10 மணிக்கு புறப்படும்.


* ரயில் எண் 12618 - ஹஸ்ரத் நிஜாமுதீன் - எர்ணாகுளம் ஜங்ஷன் மங்கள லட்சத்தீவு டெய்லி எக்ஸ்பிரஸ் எர்ணாகுளம் ஜங்ஷனை  10.25 மணிக்கு சென்றடையும்.


* ரயில் எண் 12431 திருவனந்தபுரம் சென்ட்ரல் - ஹஸ்ரத் நிஜாமுதீன் ட்ரை-வாராந்திர ராஜ்தானி எக்ஸ்பிரஸ் அதன் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு 4 மணி நேரம் 35 நிமிடங்கள் பின்னால் இயக்கப்படும். இந்த ரயில் செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் புறப்படும். இந்த ரயில் திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து 14.40 மணிக்கு புறப்படும்.


* ரயில் எண் 12432 - ஹஸ்ரத் நிஜாமுதீன்-திருவனந்தபுரம் சென்ட்ரல் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் - 2 மணி 15 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். இந்த ரயில் ஞாயிறு, செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் திருவனந்தபுரம் சென்ட்ரலை 01.50 மணிக்கு சென்றடையும்.


* ரயில் எண் 22149 - எர்ணாகுளம் ஜங்ஷன் - புனே ஜங்ஷன் இருவார விரைவு ரயிலின் நேரமும் மாற்றப்பட்டுள்ளது. இப்போது இந்த ரயில் 3 மணி நேரம் முன்னதாக புறப்படும். ஞாயிறு மற்றும் வெள்ளிக்கிழமைகளில் எர்ணாகுளம் ஜங்ஷனிலிருந்து புறப்படும்.


* ரயில் எண் - 22655 எர்ணாகுளம் ஜங்ஷன் - ஹஸ்ரத் நிஜாமுதீன் சூப்பர் பாஸ்ட் ரயில் 3 மணி நேரத்திற்கு முன்னதாக புறப்படும்.


* ரயில் எண் - 12217 கொச்சுவேலி-சண்டிகர் இரு வாராந்திர சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் 4 மணி நேரம் 20 நிமிடங்கள் முன்னதாக புறப்படும். திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் கொச்சுவேலியிலிருந்து புறப்படும்.


* ரயில் எண் - 12483 கொச்சுவேலி-அமிர்தசரஸ் வாராந்திர சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் 4 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு முன்னதாக புறப்படும்.


* ரயில் எண் - 20923 திருநெல்வேலி ஜங்ஷன் - காந்திதாம் ஜங்ஷன் வாராந்திர ஹம்சஃபர் சூப்பர்பாஸ்ட் 2 மணி 45 நிமிடங்களுக்கு முன்பு புறப்படும்.


மேலும் படிக்க | கிரெடிட் கார்டு, தனிநபர் கடன், பிபிஎஃப், எம்எஃப்: எதில் கடன் பெறுவது உங்களுக்கு ஏற்றது?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ