FD பணம் போடுவதை விட அதிக லாபத்தை கொடுக்கும் அரசு திட்டங்கள் - முழு விவரம்

FD vs Government Schemes: வங்கிகளின் நிலையான வைப்புத்தொகையில் நீங்கள் பெறுவதை விட அதிக வட்டி செலுத்தும் சில அரசின் சேமிப்பு திட்டங்கள் உள்ளன.

Written by - Sudharsan G | Last Updated : May 31, 2023, 10:49 PM IST
  • 2022ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை வட்டி விகிதத்தில் 250 பிபிஎஸை ஆர்பிஐ உயர்த்தியது.
  • இதனால், வங்கிகள் FD திட்டத்தின் வட்டி விகிதத்தையும் உயர்த்தியது.
  • அரசு திட்டங்கள் மூத்த குடிமக்களுக்கும் நிதி பாதுகாப்பை அளிக்கிறது.
FD பணம் போடுவதை விட அதிக லாபத்தை கொடுக்கும் அரசு திட்டங்கள் - முழு விவரம் title=

FD vs Government Schemes: இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் அதிக வட்டி விகிதங்களை வழங்குவதாக கூறப்படும், நிலையான டெபாசிட் திட்டங்களை விரும்புகிறார்கள். இருப்பினும், நிலையான வைப்புத்தொகையில் நீங்கள் பெறுவதை விட அதிக வட்டி செலுத்தும் சில அரசின் சேமிப்பு திட்டங்கள் உள்ளன என்பது சிலருக்கு மட்டுமே தெரியும்.

கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் முதல், இந்திய ரிசர்வ் வங்கி நாட்டில் வட்டி விகிதத்தை 250 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது. அதன்பிறகு, பல தனியார் மற்றும் அரசு வங்கிகள் நிலையான வைப்புத்தொகை உட்பட பல சேமிப்புத் திட்டங்களின் மீதான விகிதங்களை உயர்த்தியுள்ளன. 

இருப்பினும், உங்கள் வங்கியின் நிலையான வைப்புத்தொகையுடன் ஒப்பிடும்போது ஒரு சில அரசு திட்டங்கள் அதிக வட்டியை செலுத்துகின்றன என்று கூறப்படுகிறது. ஒருமுறை முதலீட்டிற்குப் பிறகு, வட்டி விகிதம் காலம் முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கும் என்ற அர்த்தத்தில் இது லாபகரமானதாகிறது. இந்த திட்டங்கள் மூத்த குடிமக்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

மேலும் படிக்க | PPF vs SSY: பெண்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு சிறந்த திட்டம் எது?

கிசான் விகாஸ் பத்ரா

அத்தகைய திட்டங்களில் ஒன்று கிசான் விகாஸ் பத்ரா. கிசான் விகாஸ் பத்ரா என்பது அரசால் ஆதரிக்கப்படும் ஒரு சிறு சேமிப்பு சான்றிதழ் திட்டமாகும். இந்த நிலையான, விகித சிறு சேமிப்புத் திட்டம், 115 மாத முதிர்வு காலத்துடன் இந்திய அஞ்சல் அலுவலகத்தால் தொடங்கப்பட்டது. திட்ட காலம் முடிந்த பிறகு முதலீடு செய்யப்பட்ட தொகை இரட்டிப்பாகும்.  கிசான் விகாஸ் பத்ரா சான்றிதழ்கள் தற்போது சில பொதுத்துறை வங்கிகள் மற்றும் இந்திய தபால் நிலையங்கள் வழியாக வாங்குவதற்கு கிடைக்கின்றன. தற்போது, இந்த திட்டம் 7.5% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

தேசிய சேமிப்புச் சான்றிதழ் 

தேசிய சேமிப்புச் சான்றிதழ் என்பது நிலையான வருமான முதலீட்டுத் திட்டமாகும், இதை நீங்கள் எந்த தபால் நிலையத்திலும் எளிதாக திறக்கலாம். 5 ஆண்டுகள் என்ற நிலையான காலப்பகுதியுடன், திட்டத்தின் வட்டி விகிதம் 7 விகத்தில் இருந்து 7.7 விகிதமாக அதிகரித்துள்ளது. 2023, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை தனிநபர் முதலீடு செய்தால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு அதே வட்டி விகிதம் நீடிக்கும். 

சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) 

சுகன்யா சம்ரித்தி யோஜனா என்பது அரசின் ஆதரவு பெற்ற சிறுசேமிப்பு திட்டமாகும். இது அரசின் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் ஒரு பெண் குழந்தைக்கான பிரகாசமான எதிர்காலத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.60% முதல் 8% ஆக அதிகரித்துள்ளது (இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 8%). பிரிவு 80c இன் கீழ் வரி விலக்குகளைப் பெறவும் இந்தத் திட்டம் உதவுகிறது. 

பொது வருங்கால வைப்பு நிதி (PPF) '

பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது இந்தியாவில் உள்ள மிகவும் பிரபலமான மற்றும் நீண்ட கால சேமிப்பு திட்டங்களில் ஒன்றாகும், இது 7.1% அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது மற்றும் ஆண்டுதோறும் அதிகரிக்கப்படுகிறது. இந்த அரசாங்க ஆதரவு திட்டம் உத்தரவாதமான ஆபத்து இல்லாத வருவாயை வழங்குவதாக கருதப்படுகிறது. குறைந்த ஆபத்துள்ள வருமானம் கொண்ட நபர்களுக்கு ஏற்றது. இந்தத் திட்டத்தில் குறைந்தபட்ச முதலீட்டு காலம் 15 ஆண்டுகள் மற்றும் குறைந்தபட்ச தொகை 500 ஆகும். அதிகபட்ச முதலீட்டுத் தொகை ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் ஆகும்.

மேலும் படிக்க | IRCTC Tour Package: வெறும் 8000 ரூபாயில் 5 நாட்கள் ஊட்டியை சுற்றி பார்க்கலாம்!
 

Trending News