EPFO Wage Ceiling Hike: பிஎஃப் உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு விரைவில் EPFO ​​இன் கீழ், ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை ரூ.15,000 லிருந்து ரூ.21,000 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய அரசு இந்த சம்பள வரம்பை ரூ.6,500 -இலிருநு ரூ.15,000 ஆக உயர்த்தியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சம்பள வரம்பு ரூ.15,000 ஆனதற்கு எதிர்ப்பு தெரிவித்த சில ஊழியர்களும் ஊழியர் அமைப்புகளும், சம்பள வரம்பை ரூ.25,000 ஆக உயர்த்த கோரிக்கை விடுத்து வருகின்றனர். இப்போது அந்த பாதையில் ஒரு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 


EPFO ​​தொடர்பாக மற்றொரு பெரிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிடக்கூடும். EPFO இல் நிறுவனங்கள் சேர்வதற்கான குறைந்தபட்ச ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது பற்றிய முடிவையும் இபிஎஃப்ஓ எடுக்கக்கூடும். தற்போது, ​​இந்த எண்ணிக்கை 20 ஆக உள்ளது, இது 10 முதல் 15 ஆக குறைக்கப்படலாம். அதன் பலனால், சிறிய நிறுவனங்களும் இனி EPFO ​​இல் சேர முடியும்.


மேலும் படிக்க | சரசரவென குறையும் தங்கம் விலை.... மேலும் குறையுமா... நிபுணர்கள் கூறுவது என்ன


EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஓய்வு பெறும் போது கிடைக்கும் பலன்கள் 


EPFO-ன் கீழ் நாடு முழுவதும் உள்ள ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதிய உச்சவரம்பு ரூ.21,000 ஆக மாற்றப்பட்டால், ஓய்வுபெறும் போது இந்த பலன் கிடைக்கும். இது ஓய்வூதியம் மற்றும் இபிஎஃப் தொகையில் (EPF Amount) நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். இபிஎஃப் சந்தாதாரர்களின் (EPF Subscribers) பங்களிப்பும் அதிகரிக்கும்.


EPF Contribution: ஊதிய வரம்பு அதிகரித்தால் இபிஎஃப் பங்களிப்பு அதிகரிக்கும்


- ஊழியர் வருங்கால வைப்பு நிதியின் கீழ் குறைந்தபட்ச சம்பள வரம்பு கடந்த 2014 -இல் மாற்றப்பட்டது. 
- அப்போது குறைந்தபட்ச ஊதிய வரம்பு ரூ.6,500 -இல் இருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டது. 
- எனினும், கடந்த 10 ஆண்டுகளாக இந்த வரம்பில் எந்த மாற்றமும் செய்யபப்டவில்லை.
- இது தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் தற்போதைய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆய்வு செய்து வருவதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
- குறைந்தபட்ச சம்பள வரம்பை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அரசாங்கம் நம்புகிறது.
- அரசு, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான ஊழியர்களின் எண்ணிக்கையின் வரம்பை அதிகரிக்கும் முனைப்பு காட்டி வருகின்றது.
- சம்பள வரம்பு ரூ.15,000 -இலிருந்து ரூ.21,000 ஆக உயர்த்தப்பட்டால், தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் இபிஎப் பங்களிப்பு அதிகரிக்கும்.
- இந்த திட்டத்தை அரசு நிறைவேற்றினால் ஓய்வூதிய தொகை உயர்த்தப்படும். 
- இதனால், பணியாளர்கள் ஓய்வு பெற்ற பிறகு அதிக தொகை கிடைக்கும். 


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு கிரிஸ்துமஸ் பரிசு? அடிப்படை ஊதியத்துடன் 53% அகவிலைப்படி இணைக்கப்படுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ