EPS Pension: இபிஎஃப் உறுப்பினரா நீங்கள்? இபிஎஸ் மூலம் ஓய்வூதியம் பெறுகிறீர்களா? அனைவருக்கும் ஒரு நல்ல செய்தி உள்ளது. இபிஎஃப் -இன் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது.
இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members) ஒரு மிகப்பெரிய நிவாரணம் கிடைத்துள்ளது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள ஓய்வூதியதாரர்கள் இனி தங்கள் ஓய்வூதியத்தை எந்த வங்கி அல்லது அதன் கிளையிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும். இந்த வசதி 1 ஜனவரி 2025 முதல் பொருந்தும். இந்த புதிய செயல்முறை காரணமாக EPFO இன் 78 லட்சத்திற்கும் அதிகமான இபிஎஸ் ஓய்வூதியதாரர்கள் (EPS Pensioners) பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Centralized Pension Payments System
செப்டம்பரில், மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம், 1995 க்கான மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியக் கட்டண முறையின் (CPPS) முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தது. இதன் மூலம், ஓய்வூதியம் பெறுவோர், இந்தியா முழுவதும் எந்த வங்கி அல்லது எந்த கிளை மூலமாகவும் ஓய்வூதியத்தைப் பெறலாம். ஜனவரியில் நடைமுறைக்கு வரவுள்ள மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியக் கொடுப்பனவு முறையின் (CPPS) சோதனை ஓட்டத்தின் கீழ், அக்டோபர் மாதத்தில் ஜம்மு, ஸ்ரீநகர் மற்றும் கர்னால் பகுதிகளில் உள்ள சுமார் 49,000 இபிஎஸ் ஓய்வூதியதாரர்களுக்கு சுமார் 11 கோடி ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெள்ளிக்கிழமை சமீபத்தில் தெரிவித்தார்.
CPPS: ஓய்வூதியத்தின் பலனை எவ்வாறு பெறுவது?
பொதுவாக பணி ஓய்வு பெற்ற பின்னர், ஓய்வூதியதாரர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று விடுகிறார்கள். சிலர் வங்கிக் கணக்குகளை மற்ற வங்கிகள் அல்லது கிளைகளுக்கு மாற்றிக்கொள்கிறார்கள். CPPS -இன் மூலம் இப்படிப்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். CPPS -இன் மூலம் ஓய்வூதியதாரர் ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்குச் சென்ற பிறகும் அல்லது வங்கி அல்லது கிளையை மாற்றிய பின்னரும் PPO எனப்படும் ஓய்வூதியம் செலுத்தும் உத்தரவை (Pension Payment Order) மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது. மேலும் நாடு முழுவதும் உள்ள எந்த வங்கிக் கிளையிலிருந்தும் அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும்.
தற்போதுள்ள ஓய்வூதியம் வழங்கும் முறையில் EPFO இன் ஒவ்வொரு பிராந்திய/பிராந்திய அலுவலகமும் 3-4 வங்கிகளுடன் மட்டுமே தனித்தனி ஒப்பந்தங்களை மேற்கொள்ள முடியும். அந்த வகையில், CPPS என்பது ஒரு முன்னுதாரண மாற்றமாக இருக்கும். இதன் கீழ், ஓய்வூதியம் பெறுபவர்கள் ஓய்வூதியம் தொடங்கும் போது வங்கிக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. ஓய்வூதியம் வழங்கப்பட்டவுடன் அது ஓய்வூதியதாரர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும். ஓய்வூதியம் பெறுவோர் நாட்டிலுள்ள எந்த வங்கியில், எந்த கிளையில் வேண்டுமானாலும் ஓய்வூதியம் பெற முடியும்.
மேலும் படிக்க | டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறையலாம்... ஆனால்... SBI கூறும் முக்கிய தகவல்
CPPS System: சிபிபிஎஸ் அமைப்பு என்றால் என்ன?
- CPPS அமைப்பு இந்தியா முழுவதும் ஓய்வூதியம் வழங்கப்படுவதை உறுதி செய்யும். மேலும் ஓய்வூதியம் பெறுபவர் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் சென்றாலும் அல்லது அவரது வங்கி அல்லது கிளையை மாற்றினாலும், ஓய்வூதியம் செலுத்தும் ஆணையை (PPO) ஒரு அலுவலகத்திலிருந்து மற்றொரு அலுவலகத்திற்கு மாற்ற வேண்டிய அவசிம் இருக்காது.
- ஓய்வுக்குப் பிறகு சொந்த ஊருக்குச் செல்லும் ஓய்வூதியதாரர்களுக்கு இது ஒரு பெரிய நிவாரணமாக இருக்கும்.
- EPFO இன் தற்போதைய தகவல் தொழில்நுட்ப நவீனமயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக, புதிய CPPS அமைப்பு ஜனவரி 2025 க்குள் முழுமையாக செயல்படுத்தப்படும்.
- இது EPFO இன் 78 லட்சத்திற்கும் அதிகமான EPS ஓய்வூதியதாரர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
- EPFO, இபிஎஸ் ஓய்வூதியதாரர்களுக்கான சேவைகளை மேம்படுத்துவதில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
- இதில் புதிய CPPS அமைப்பு ஒரு முக்கிய முனேற்றமாக பார்க்கப்படுகின்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ