தபால் அலுவலகத் திட்டம்: பெண்களின் வாழ்க்கையில் பணத்தைச் சேமிப்பது முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு இல்லத்தரசி அல்லது வேலை செய்யும் பெண் இருவருக்கும் சேமிப்பு அவசியம். மத்திய அரசு பெண்களுக்காக தபால் துறை மூலம் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய ஒரு திட்டத்தைப் பற்றி தான் இன்று நாம் காணப் போகிறோம். இதுவரை லட்சக்கணக்கான பெண்கள் இத்திட்டத்தின் பலனைப் பெற்றுள்ளனர். இந்தத் திட்டத்தில் நீண்ட காலம் முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை. குறுகிய காலத்தில் கூட பெரும் லாபம் ஈட்ட முடியும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திட்டத்தைப் பற்றி இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்:
தபால் அலுவலகத்தின் இந்த சிறப்புத் திட்டத்தின் பெயர் “மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ்” (Mahila Samman Savings Certificate). பெண்களை தன்னிறைவுபடுத்தும் வகையில் மத்திய அரசு இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தில் பெண்கள் அதிகபட்சமாக ரூ.2 லட்சத்தை 2 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாம். இது பாதுகாப்பான முதலீட்டு விருப்பமாகவும் கருதப்படுகிறது, இது சந்தை அபாயத்திலிருந்து பாதுகாப்பை வழங்குகிறது. தற்போது இந்த திட்டத்திற்கு அரசு 7.5% வட்டி தருகிறது. இந்தத் திட்டத்தில் வரிவிலக்கின் பலனும் உள்ளது. அதேபோல் 10 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு ஜாக்பார்ட்! ரூ.8000 வரை அதிகரிக்கும் சம்பளம்?


சுகன்யா சம்ரித்தி திட்டம் vs மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ்:
பெண்களை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்ற, சுகன்யா சம்ரித்தி யோஜனா என்ற திட்டத்தையும் அரசு செயல்படுத்தி வருகிறது. இது ஒரு நீண்ட கால முதலீட்டுத் திட்டம் ஆகும். மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்துடன் ஒப்பிடும்போது, ​​சுகன்யா சம்ரித்தி அதிக வட்டியை வழங்குகிறது, அதன் பலனை அனைவரும் பெற முடியாது. சுகன்யா சம்ரிதி யோஜனா 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு மட்டுமே கிடைக்கும். பயனாளி 21 ஆண்டுகள் நிறைவடையும் போது திட்டம் முதிர்ச்சியடைகிறது. அதேசமயம் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் ஒரு குறுகிய கால சேமிப்பு திட்டமாகும்.


இதுதான் சரியான கணக்கீடு:
ஒரு பெண் மொத்தமாக ரூ.2 லட்சம் முதலீடு செய்தால். 7.5 வட்டி விகிதத்தின்படி, ஒருவருக்கு முதல் ஆண்டில் ரூ.15,000 மற்றும் இரண்டாவது ஆண்டில் ரூ.16,126 கிடைக்கும். ரூ.2 லட்சம் முதலீட்டில், இரண்டே ஆண்டுகளில் சுமார் ரூ.31 ஆயிரம் வட்டியைப் பெறலாம்.


எங்கு துவங்கலாம்: 
நாட்டிலுள்ள 1.59 லட்சம் தபால் அலுவலகங்கள் மற்றும் வங்கிகளின் முக்கிய கிளைகள் மூலம் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம் என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இது 2023 ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. நாட்டிலுள்ள 1.59 லட்சம் அஞ்சல் நிலையங்களிலும், இந்த மகளிர் சம்மான் சேமிப்புச் சான்றிதழ்கள் கிடைக்கும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கான, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.


அஞ்சலகத்தில் கணக்கு தொடங்குவது எப்படி?


1) தபால் அலுவலகத்துக்கு செல்லவும்
2) கணக்கு திறப்பு விண்ணப்பத்தை நிரப்பி சமர்பிக்கவும்
3) ஆவணச் சான்றாக ஆதார், பான் கார்டு ஆகியவற்றை அளிக்க வேண்டும்.
4) டெபாசிட் பணத்தை செக் ஆக அஞ்சலகத்தில் முதலீடு செய்யலாம்.
5) படிவத்தில் நாமினியை கட்டாயம் பூர்த்தி செய்ய வேண்டும்.


மேலும் படிக்க | SpiceJet வழங்கும் அசத்தல் ஆஃபர்... சென்னை டூ அயோத்யா விமான கட்டணம் ரூ.1622 மட்டுமே!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ