SpiceJet வழங்கும் அசத்தல் ஆஃபர்... சென்னை டூ அயோத்யா விமான கட்டணம் ரூ.1622 மட்டுமே!

SpiceJets Special Offer: விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் (SpiceJet) ராமர் கோயில் தரிசனத்துக்கு சிறப்பான சலுகையை வழங்கியுள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 22, 2024, 07:41 PM IST
SpiceJet வழங்கும் அசத்தல் ஆஃபர்... சென்னை டூ அயோத்யா விமான கட்டணம் ரூ.1622 மட்டுமே! title=

விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் (SpiceJet) ராமர் கோயில் தரிசனத்துக்கு சிறப்பான சலுகையை வழங்கியுள்ளது. ஏர்லைன்ஸ் நிறுவனம் நாட்டின் பல முக்கிய இடங்களிலிருந்து விமான டிக்கெட்டுகளை வெறும் 1622 ரூபாய்க்கு அறிவித்துள்ளது. நிறுவனம் அளித்த தகவலின்படி, ஸ்பைஸ்ஜெட் பிப்ரவரி 1, 2024 முதல் முக்கியமான இந்திய நகரங்களை இணைக்கும் அயோத்திக்கு விமானங்களை அறிவித்துள்ளது. இதன் கீழ், சென்னை, அகமதாபாத், டெல்லி, மும்பை, பெங்களூரு, ஜெய்ப்பூர், பாட்னா மற்றும் தர்பங்கா ஆகிய இடங்களில் இருந்து அயோத்திக்கு விமானங்கள் இயக்கப்படும். இந்தச் சிறப்புச் சலுகையில் அயோத்திக்கு மற்றும் அங்கிருந்து புறப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய  விமானங்களுக்கு பொருந்தும்.

நீங்கள் எப்போது முன்பதிவு செய்யலாம், எப்போது பயணம் செய்யலாம்?

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அளித்த தகவலின்படி, ஜனவரி 22 முதல் ஜனவரி 28 வரை அயோத்திக்கு ஸ்பைஸ்ஜெட் விமானங்களை முன்பதிவு செய்ய முடியும். அதே நேரத்தில், இந்த முன்பதிவில் நீங்கள் ஜனவரி 22 முதல் செப்டம்பர் 30, 2024 வரை பயணிக்க முடியும்.

முன்பதிவு விவரங்கள்

1. சலுகை விவரங்கள்: *விமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது

2. டிக்கெட் முன்பதிவு சலுகை: ஜனவரி 22 முதல் ஜனவரி 28, 2024 வரை கிடைக்கும்.

3. பயணத் தேதிகள்: ஜனவரி 22, 2024 முதல் செப்டம்பர் 30, 2024 வரையிலான பயணக் காலத்திற்கு செல்லுபடியாகும்.

4. குறிப்பிட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச, நேரடி ஒருவழி விமானங்களில் மட்டுமே விற்பனைச் சலுகை கிடைக்கும்.

5. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த சலுகையின் கீழ் வரையறுக்கப்பட்ட இருக்கைகள் கிடைக்கும்.

6. குழு முன்பதிவுகளுக்கு இந்த சலுகை பொருந்தாது.

7. முன்பதிவு ரத்துசெய்யப்பட்டால், ரத்து கட்டணம் வசூலிக்கப்பட்டு பணம் திரும்பப் பெறப்படும்.
இந்தச் சலுகையை வேறு எந்தச் சலுகையுடனும் இணைக்க முடியாது.

மேலும் படிக்க | அயோத்தி குழந்தை ராமர் முழு அலங்காரத்தில்... பிரதிஷ்டைக்கு பின் வெளியான புகைப்படங்கள் உள்ளே!

அயோத்திக்கு அதிக நேரடி விமானங்களைத் தொடங்க ஸ்பைஸ்ஜெட் திட்டம்

இந்தியாவின் முக்கிய நகரங்களை அயோத்தியுடன் இணைக்கும் புதிய விமானங்களை பிப்ரவரி 1, 2024 முதல் தொடங்குவதாக ஸ்பைஸ்ஜெட் அறிவித்துள்ளது. பிப்ரவரி 1 முதல் தேசிய தலைநகரான அகமதாபாத், ஜெய்ப்பூர், பாட்னா மற்றும் தர்பங்காவிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானங்களைத் தொடங்கும் என்று ஸ்பைஸ்ஜெட் ஜனவரி 19 அன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. முன்னதாக, சென்னை, பெங்களூரு மற்றும் மும்பையில் இருந்து அயோத்திக்கு இடைநில்லா விமான சேவையை விமான நிறுவனம் அறிவித்தது.

மேலும் படிக்க | 3 ஏசி மற்றும் 3 ஏசி எகானமிக்கும் என்ன வித்தியாசம்? கட்டாயம் படிக்கவும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News