Indian Railways சூப்பர் செய்தி: பயணிகளுக்கு இலவச உணவு, விவரம் இதோ
Indian Railways: சில குறிப்பிட்ட ரயில்கள் தாமதமாகும்போது உணவு இலவசமாக கிடைக்கும். ரயில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானால் இந்திய ரயில்வே இலவச உணவு வழங்குகிறது.
இந்திய ரயில்வே: இந்தியாவில், ரயில்வே இணைப்பு நாட்டின் உள்கட்டமைப்பில் ஒரு முக்கிய பகுதியாகும். இந்திய இரயில்வே நாட்டிற்குள் பயணம் செய்வதற்கான எளிய, விரைவான மற்றும் செலவு குறைந்த வழியை வழங்குகிறது. மேலும் ஆயிரக்கணக்கான பயணிகள் நீண்ட தூரத்தை கடக்க ரயிலில் பயணம் செய்கிறார்கள். இருப்பினும், தினம் தினம் பலர் பயணம் செய்யும் ரயில்கள் சில நேரம் தங்கள் இலக்கை அடைய தாமதமாகலாம். இதுபோன்ற சூழ்நிலையில், ரயில்களுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்படும் என இந்திய ரயில்வேயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே இலவச உணவு வழங்குகிறது
பயணிகள் ரயில்களுக்காக அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலை அடிக்கடி நிகழ்கிறது. பெரும்பாலும் வானிலை காரணங்களாலோ, அல்லது விபத்துகள், தொழில்நுட்ப கோளாறு போன்ற எதிர்பாராத காரணங்களாலோ இப்படி நடக்கின்றது. இருப்பினும், சதாப்தி, ராஜ்தானி அல்லது துரந்தோவில் பயணம் செய்து, அவற்றில் ஏதேனும் தாமதமாக வந்தால், இந்திய ரயில்வே அளிக்கும் சிறப்புச் சேவையை பயணிகள் பயன்படுத்திக்கொள்ளலாம். அதாவது இந்த ரயில்கள் தாமதமாகும்போது உணவு இலவசமாக கிடைக்கும். ரயில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானால் இந்திய ரயில்வே இலவச உணவு வழங்குகிறது.
மதிய உணவு அல்லது இரவு உணவு நேரத்திற்கு ஏற்ப உணவு தயாரிக்கப்படும். மேலும், டீ, காபி, பிஸ்கட் போன்ற சிற்றுண்டிகளும் கிடைக்கும். ஐஆர்சிடிசி விதிகளின் கீழ் பயணிகளுக்கு இலவச உணவு உண்டு. உங்கள் ரயில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் தாமதமாக வந்தால் உங்களுக்கு இந்த வசதி கொடுக்கப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள் மட்டுமே இந்த சேவையை பயன்படுத்த முடியும். இந்த தகவல் ராஜ்தானி, துரந்தோ மற்றும் சதாப்தி போன்ற விரைவு ரயில்களில் பயணிப்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
மேலும் படிக்க | Indian Railways: நம் பெயரில் உள்ள ரயில் டிக்கெட்டை மற்றவருக்கு மாற்றுவது எப்படி?
ஐஆர்சிடிசி விதி என்ன தெரியுமா?
ஐஆர்சிடிசி விதிகளின்படி, பயணிகளுக்கு இலவச உணவு வசதி வழங்கப்படுகிறது. உங்கள் ரயில் 2 மணிநேரம் அல்லது அதற்கு மேல் தாமதமாக வரும்போது இந்த வசதி உங்களுக்கு வழங்கப்படும். இந்த வசதியை எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும். சதாப்தி, ராஜ்தானி மற்றும் துரந்தோ போன்ற விரைவு ரயில்களில் பயணிப்பவர்களுக்கு இந்த செய்தி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்திய ரயில்வேயின் இன்னும் சில விதிகளின் விவரங்கள்
ரயிலில் மதுபானம் கொண்டு செல்ல முடியுமா?
ரயிலில் மதுபானங்களை எடுத்துச் செல்வது நீங்கள் பயணிக்கும் மாநிலத்தைப் பொறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் அனைத்து மாநிலங்களுக்கும் மதுபானம் தொடர்பாக அவற்றின் சொந்த விதிகள் உள்ளன. அரசியல் சட்டத்தில், மதுபானம் தொடர்பான விதிகளை அந்தந்த மாநிலங்கள் தங்கள் சொந்த விதிகளுக்கு ஏற்ப உருவாக்கலாம் என்ற விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்
மது அருந்திவிட்டு ரயிலில் பயணம் செய்தாலோ, அல்லது மதுபானங்களை எடுத்துச்சென்றாலோ, அப்படி செய்பவர்கள் மீது இந்திய ரயில்வே சட்டம் 1989 பிரிவு 165ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர, ரயிலில் தடை செய்யப்பட்ட வேறு ஏதேனும் பொருட்களை யாரேனும் வைத்திருந்தால், அவர்களுக்கு 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். மறுபுறம், இந்த பொருளால் ஏதேனும் இழப்பு ஏற்பட்டால், அந்த நபர் அதையும் ஈடுசெய்ய வேண்டும்.
இரவில் போனை சார்ஜ் செய்ய முடியாது
இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ரயிலில் பயணிகள் தங்கள் ஸ்மார்ட்போன் அல்லது மடிக்கணினிகளை சார்ஜ் செய்ய இந்திய ரயில்வே தடை விதித்துள்ளது. ரயிலில் எந்த வித விபத்தும் ஏற்படாமல் இருக்க இந்திய ரயில்வே இப்படி செய்கிறது. மக்கள் பெரும்பாலும் தங்கள் தொலைபேசியை சார்ஜிங்கில் போட்டுவிட்டு அது முழுமையாக சார்ஜ் ஆனவுடன் சார்ஜை அணைக்க மறந்துவிடுகிறார்கள். சார்ஜிங்கில் போட்டுவிட்டு பயணிகள் தூங்கி விடுவதால், சார்ஜை மூட அவர்களுக்கு பல சமயம் நினைவிருப்பதில்லை.
மேலும் படிக்க | Indian Railways: இனி இவங்களுக்குதான் லோயர் பர்த்.. பயணிகளுக்கு முக்கிய அப்டேட்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ