EPS Higher Pension: அதிக ஓய்வூதியம் குறித்து அரசு அளித்த பெரிய அப்டேட்
EPS Higher Pension: இபிஎஃப்ஓ, ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தில் அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பவர்களுக்கு ஜூன் 26 வரை காலக்கெடுவை நீட்டித்துள்ளது.
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ (EPFO), ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தில் அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பவர்களுக்கு ஜூன் 26 வரை காலக்கெடுவை நீட்டித்துள்ளது. சில காலத்திற்கு முன்பு, இபிஎஸ் பங்களிப்பு மற்றும் அதிக வட்டி எவ்வாறு மதிப்பிடப்படும் என்பது குறித்து இபிஎஃப்ஓ ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் போதுமான இருப்பு இருந்தால், கடந்த நிலுவைத் தொகை ஊழியர்களின் ஓய்வூதியத் திட்ட (இபிஎஸ்) கணக்கிற்கு மாற்றப்படும். பற்றாக்குறை இருந்தால், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் பணியாளர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை எடுத்துக்கொள்ளலாம். அதிக ஓய்வூதியத்திற்கான விண்ணப்பம் இபிஎஃப்ஓ ஆல் அங்கீகரிக்கப்பட்டவுடன், அது EPF இலிருந்து EPS கணக்கிற்கு மாற்றப்படும் அல்லது வரவு வைக்கப்படும். ஆனால் இபிஎஃப் கணக்கில் இருந்து வட்டி பெறப்படும்.
முழு நிலுவைத் தொகை கணக்கிடப்படும். ஆகையால் இபிஎஃப்ஓ சுற்றறிக்கையின்படி, ஓய்வூதியம் பெறுபவர் அல்லது பணியாளருக்கு செலுத்த வேண்டிய தொகை மற்றும் EPF கணக்கில் இருந்து மீண்டும் டெபாசிட் செய்யப்பட வேண்டிய அல்லது நீக்க வேண்டிய பணம் குறித்து கள அலுவலகம் தெரிவிக்கும். ஓய்வூதியம் பெறுபவர் அல்லது பணியாளருக்கு முன்னாள் அல்லது தற்போதைய முதலாளி / நிறுவனத்தால் தெரிவிக்கப்படும்.
அவர்கள் தங்கள் கடந்த கால அல்லது தற்போதைய முதலாளி அல்லது நிறுவனத்தால் செலுத்தப்பட்ட ஏதேனும் நிலுவைத் தொகைகள் பற்றிய தகவலை இபிஎஃப்ஓ -இலிருந்து பெறுவார்கள். EPF கணக்கிலிருந்து EPS கணக்கிற்கு மாற்றப்படும் தொகை கூடுதல் விவரங்களில் வெளியிடப்படும். கணக்கை மாற்றுவதற்கு, பணியாளரின் எழுத்துப்பூர்வ அனுமதி பெறப்பட வேண்டும். இதற்குப் பிறகு, வட்டியுடன் நிலுவையில் உள்ள பங்களிப்பு தொகை முதலில் பிஎஃப் இருப்பில் இருந்து கழிக்கப்படும்.
மேலும் படிக்க | PPF -ல் பணம் போடுகிறீர்களா? உங்களுக்கு தான் இந்த முக்கிய அப்டேட்
டெபாசிட் செய்வது எப்படி
- இபிஎஃப்ஓ வழங்கும் எந்த ஆன்லைன் வசதி மூலமாகவும் செய்யலாம்.
- காசோலை மூலமாக செலுத்தலாம்
- பின்வரும் அனைத்து தகவல்களும் காசோலையின் பின்புறத்தில் இருக்க வேண்டும்-
- விண்ணப்ப ஐடி (Application ID)
- UAN/PPO எண் (UAN/PPO Number)
- பெயர் மற்றும் மொபைல் எண் (name and mobile number)
- கோரிக்கை அறிவிப்பு எண் மற்றும் தேதி (Demand notice number and date).
சம்மதம் தெரிவிக்க மூன்று மாதங்கள் அவகாசம்
ஓய்வூதியம் பெறுவோர் / உறுப்பினர்கள் பணத்தை டெபாசிட் செய்யவும், நிதி பரிமாற்றத்துக்கு ஒப்புதல் அளிக்கவும் மூன்று மாதங்கள் வரை அவகாசம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. EPFO இன் பிராந்திய அதிகாரி, ஓய்வூதியம் பெறுவோர் அல்லது உறுப்பினர்களுக்கு அதிக ஓய்வூதியத்திற்கான கூடுதல் நிதியை செலுத்த வேண்டியதன் அவசியத்தை தெரிவிப்பார்.
இந்த மாத தொடக்கத்தில், அதிக ஓய்வூதியத்தை விரும்புவோரின் அடிப்படைச் சம்பளத்தில் 1.16 சதவிகிதம் கூடுதல் பங்களிப்பு EPFO-ன் சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்கு முதலாளி / நிறுவனத்தின் பங்களிப்பிலிருந்து எடுக்கப்படும் என்று தொழிலாளர் அமைச்சகம் தெளிவுபடுத்தியது. தற்போது, அரசாங்கம் இபிஎஸ் -இல் ரூ.15,000 என்ற அடிப்படை சம்பள வரம்பில் 1.16 சதவீதத்தை மானியமாக வழங்குகிறது.
இபிஎஃப்ஓவின் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் பணியாளர்கள் 12 சதவீதம் பங்களிக்கின்றனர். முதலாளி / நிறுவனத்தின் 12 சதவீத பங்களிப்பில், 8.33 சதவீதம் இபிஎஸ்-க்கு செல்கிறது. மீதமுள்ள 3.67 சதவீதம் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு செல்கிறது.
அதிக ஓய்வூதியம்: 1.16% பங்களிப்பு கணிதம்
- நிர்வாகம் / முதலாளி தரப்பிலிருந்து 1.16% கூடுதல் பங்களிப்பு
- தற்போதுள்ள விதிகளின்படி, அரசு 1.16% பங்களிக்கிறது.
- 15,000 ரூபாய் வரையிலான வருமானத்தில் இருந்து ஓய்வூதியத்தில் அரசு மானியம்
- நீங்கள் அதிக ஓய்வூதிய விருப்பத்தைத் தேர்வு செய்தால், முதலாளி 1.16% பங்களிப்பார்.
மேலும் படிக்க | Employee Pension Scheme: ஓய்வூதியம் தொடர்பான முக்கிய அறிவிப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ